இந்தியாவின் முதல் ஏபிஎஸ் வசதி கொண்ட 110சிசி பைக் அறிமுகம்.. இதோட விலையை கேட்டீங்கனா இப்பவே வாங்க ஆசப்படுவீங்க!

இந்தியாவின் மலிவு விலை பைக்குகளில் ஒன்றாக பஜாஜ் பிளாட்டினா இருக்கின்றது. இது ஓர் 110 சிசி மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த பைக்கிலேயே புதிய பாதுகாப்பு அம்சம் ஒன்றை பஜாஜ் புதிதாக வழங்கியிருக்கின்றது. ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (Anti-lock Braking System) எனப்படும் தொழில்நுட்பத்தையே பஜாஜ் இந்த பைக்கில் வழங்கியிருக்கின்றது. இதனை ஏபிஎஸ் என்றே அழைப்பர். இது ஓர் அதி-நவீன பிரேக்கிங் சிஸ்டம் ஆகும்.

மிக அதிக வேகத்தைக் கூட நொடிப் பொழுதில் கட்டுப்படுத்தும் திறன் இந்த தொழில்நுட்பத்திற்கு உண்டு. இந்த சூப்பரான அம்சத்தை அதிக விலைக் கொண்ட பைக் மாடல்களில் மட்டுமே நம்மால் காண முடியும். ஆனால், இதனை தன்னுடைய மிக மிகக் குறைவான விலைக் கொண்ட பைக்கிலேயே பஜாஜ் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் இந்தியாவின் முதல் ஏபிஎஸ் வசதிக் கொண்ட 110 சிசி பைக்காக பஜாஜ் பிளாட்டினா மாறியிருக்கின்றது.

பஜாஜ் பிளாட்டினா

ஆமாங்க, வேறு எந்த நிறுவனமும் தனது குறைவான சிசி திறன் கொண்ட பைக்குகளில் இந்த ஏபிஎஸ் அம்சத்தை வழங்கவில்லை. பட்ஜெட் இருசக்கர வாகன பிரியர்களுக்கும் அதிக பாதுகாப்பான பயணத்தை வழங்கும் பொருட்டு பஜாஜ் தனது பிளாட்டினா 110 பைக்கில் ஏபிஎஸ்-ஐ வழங்கியிருக்கின்றது. அறிமுகமாக இந்த பைக்கிற்கு 72 ஆயிரத்து 224 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

ஏபிஎஸ் பயன்பாட்டை விளக்கும் விதமாக டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டரில் ஏபிஎஸ் இன்டிகேட்டர் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திரை கியர் இன்டிகேட்டர் மற்றும் கியர் கைடன்ஸ் ஆகிய தகவல்களையும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பஜாஜ் பிளாட்டினா ஓர் மிக சிறந்த கம்யூட்டர் ரக பைக்காகும். இந்த பைக்கில் ஏபிஎஸ் சிஸ்டம் வழங்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த மலிவு விலை இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஏபிஎஸ் வெறும் அதி- வேகக் கட்டுப்படுத்தி மட்டும் அல்ல. இது மிக சிறந்த ஹேண்ட்லிங் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டதும்கூட. வழுவழுப்பான சாலைகளில் பிரேக் பிடிக்கும்போது வாகனம் சடாரென சரிந்துவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், இந்த அம்சம் இதனைத் தவிர்க்கும் திறன் கொண்டது ஆகும். இதனால்தான் இந்த அம்சம் அதிக- வேக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், குறைவான சிசி திறன் கொண்ட பைக்குகளுக்கு சிபிஎஸ் என்பதை அரசு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே 110 சிசி பைக்கிற்கு ஏபிஎஸ் கட்டாயம் இல்லை என்றாலும், ரைடர்களின் பாதுகாப்பை கருதி பஜாஜ், அதந் பிளாட்டினா பைக் மாடலில் ஏபிஎஸ்-ஐ வழங்கியிருக்கின்றது. இந்த அம்சம் கொண்ட பிளாட்டினாவில் மிக சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கக் கூடிய இருக்கைகள், சஸ்பென்ஷன்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.

மேலும், பைக்கை அழகுப்படுத்தும் விதமாக பகல் நேரத்தில் ஒளிரும் மின் விளக்குடன் சேர்ந்த ஹெட்லைட்டை பஜாஜ் வழங்கி இருக்கின்றது. இந்த ஹெட்லைட் தெளிவான பார்வை கிடைக்க உதவியாக இருக்கும். மோட்டாரை பொருத்தவரை 115.45 சிசி திறன் கொண்ட எஞ்ஜினே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத மோட்டார் அதிகபட்சமாக 7,000 ஆர்பிஎம்மில் 8.6 பிஎஸ் பவரையும், 5 ஆர்பிஎம்மில் 9.81 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்த பைக்கின் மைலேஜ் திறனும் மிக அதிகம் என பஜாஜ் தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதுமட்டுமின்றி நீடித்து உழைக்கும் திறன் கொண்டதாகவும், சிறந்த திறன் வெளிப்பாட்டை வழங்கக் கூடியதாகவும் ஏபிஎஸ் வசதிக் கொண்ட பிளாட்டினா பைக்கை தாங்கள் வடிவமைத்திருப்பதாக பஜாஜ் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக நான்கு விதமான நிற தேர்வுகளில் பிளாட்டினா ஏபிஎஸ் தேர்வை வழங்க இருப்பதாக பஜாஜ் அறிவித்திருக்கின்றது.

எபோனி பிளாக், கிளாஸ் பியூடர் கிரே, காக்டெயில் ஒயின் ரெட் மற்றும் சஃபையர் ப்ளூ ஆகிய நிற தேர்வுகளிலேயே இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்பைக்கில் சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக ஸ்பிரிங் -ஆன் -ஸ்பிரிங் சஸ்பென்ஷனே பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, ட்யூப் லெஸ் டயர், பரந்த அளவிலான கால் வைக்கும் ரப்பர் பேட்கள் என கூடுதல் சிறப்பு வசதிகளும் இந்த பைக்கில் நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

Most Read Articles
English summary
Bajaj platina 110 abs
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X