இப்படி ஒரு ஷோரூமை ஹீரோ நிறுவனம் திறந்திருக்கா! திருவிழா மாதிரி கூட்டம் கூட போகுது... காரணம் என்னனு தெரியுமா?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சூப்பரான வாகன ஷோரூம் ஒன்றை திறந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் (Electric Scooters) மிகவும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி கொண்டுள்ளன. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை குறி வைத்துள்ளன.

இப்படி ஒரு ஷோரூமை ஹீரோ நிறுவனம் திறந்திருக்கா! திருவிழா மாதிரி கூட்டம் கூட போகுது... காரணம் என்னனு தெரியுமா?

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. விடா (Vida) என்ற புதிய பிராண்டின் கீழ் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யவுள்ளது. இந்த சூழலில் பெங்களூர் (Bangalore) நகரில் தனது அனுபவ மையத்தை (Experience Centre) திறந்துள்ளதாக விடா தற்போது அறிவித்துள்ளது.

பெங்களூர் நகரின் விட்டல் மல்லையா சாலையில்தான் இந்த விடா அனுபவ மையம் திறக்கப்பட்டுள்ளது. 8,500 சதுர அடி பரப்பளவில் இந்த அனுபவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விடா வி1 (Vida V1) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சார்ஜிங் ஸ்டேஷன், காபி பார் மற்றும் நூலகம் ஆகிய வசதிகளும் இங்கு இருக்கின்றன.

விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெஸ்ட் ரைடு (Test Ride) செய்வதற்கான வாய்ப்பையும் இந்த அனுபவ மையம் வழங்க தொடங்கியுள்ளது. நாம் இங்கே பேசி கொண்டுள்ள விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த அக்டோபர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ப்ளஸ் (Plus) மற்றும் ப்ரோ (Pro) என 2 வேரியண்ட்களில் விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 1.45 லட்ச ரூபாய். இது ப்ளஸ் வேரியண்ட்டின் விலையாகும். மறுபக்கம் ப்ரோ வேரியண்ட்டின் விலை 1.59 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதில், ப்ளஸ் வேரியண்ட்டின் ரேஞ்ச் 143 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் ப்ரோ வேரியண்ட்டின் ரேஞ்ச் 165 கிலோ மீட்டர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை மிஸ் பண்ணீடாதீங்க: ஒரு நாள் ஓட்ட 3 ரூபாய் மட்டுமே செலவாகும்! பெட்ரோல் வண்டிகளின் கதையை முடிக்க வந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!இதை மிஸ் பண்ணீடாதீங்க: ஒரு நாள் ஓட்ட 3 ரூபாய் மட்டுமே செலவாகும்! பெட்ரோல் வண்டிகளின் கதையை முடிக்க வந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்டுவதற்கு ப்ளஸ் வேரியண்ட் 3.4 வினாடிகளை எடுத்து கொள்ளும். ஆனால் ப்ரோ வேரியண்ட் இந்த வேகத்தை 3.2 வினாடிகளிலேயே எட்டி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த 2 வேரியண்ட்களின் டாப் ஸ்பீடும் ஒன்றுதான். அது மணிக்கு 80 கிலோ மீட்டர்கள் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போது ஏராளமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில், ஏத்தர் 450எக்ஸ் (Ather 450X), பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak), டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன், விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் போட்டியிடும்.

இவை அனைத்துமே பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், வரும் காலங்களில் இன்னும் பல்வேறு முன்னணி நிறுவனங்களிடம் இருந்து ஏராளமான பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வரும் என நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Bangalore vida experience centre
Story first published: Tuesday, November 15, 2022, 14:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X