ஸ்பிளெண்டர் பைக்கின் தோற்றத்தில் எலெக்ட்ரிக் பைக்... பெங்களூரு நிறுவனத்தின் அசத்தலான தயாரிப்பு!

ஸ்பிளெண்டர் பைக்கின் தோற்றத்திலான எலெக்ட்ரிக் பைக் ஒன்றை பெங்களூரு நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இந்த இ-பைக் பற்றிய சுவாரஷ்யமான தகவல்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஸ்பிளெண்டர் பைக்கின் தோற்றத்தில் எலெக்ட்ரிக் பைக்... பெங்களூரு நிறுவனத்தின் அசத்தலான முயற்சி... முழு சார்ஜில் எவ்ளோ தூரம் போகும்!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கிரீன் வெயிக்கிள் எக்ஸ்போ எனும் வாகன கண்காட்சி சமீபத்தில் நடைபெற்றது. பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்திலேயே இந்த அது நடைபெற்றது. இங்கு ஏராளமான வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் புதுமுக மின்சார வாகனங்களைக் காட்சிப்படுத்தின். புதுமுக நிறுவனங்கள்கூட இதில் பங்கேற்று தங்களின் புதுமுக வாகனங்களை அறிமுகப்படுத்தின.

ஸ்பிளெண்டர் பைக்கின் தோற்றத்தில் எலெக்ட்ரிக் பைக்... பெங்களூரு நிறுவனத்தின் அசத்தலான முயற்சி... முழு சார்ஜில் எவ்ளோ தூரம் போகும்!

அந்தவகையில், கர்நாடகாவில் உள்ள பெல்காம் (பெலகவி) நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஏடிஎம்எஸ் (ADMS) என்கிற நிறுவனம் அதன் புதுமுக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை காட்சிப்படுத்தியது. பாக்ஸர் (Boxer) எனும் பெயரிலேயே அந்த வாகனம் காட்சிப்படுத்தப்பட்டது.

ஸ்பிளெண்டர் பைக்கின் தோற்றத்தில் எலெக்ட்ரிக் பைக்... பெங்களூரு நிறுவனத்தின் அசத்தலான முயற்சி... முழு சார்ஜில் எவ்ளோ தூரம் போகும்!

இதனை புதுமுக வாகனம் என்று கூறுவதற்கு பதிலாக ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கின் வேஷம் கொண்ட மின்சார வாகனம் என்று கூறலாம். ஆமாங்க, ஸ்பிளெண்டரை டூப்ளிகேட் செய்திருப்பதைப் போல் அந்த வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஒரே ஒரு மாற்றம் மட்டுமே மிகப் பெரியதாக பாக்ஸரில் காணப்படுகின்றது. மின்சார வாகனமாக உருவாக்கப்பட்டிருப்பதே அந்த மிகப் பெரிய மாற்றமாகும்.

ஸ்பிளெண்டர் பைக்கின் தோற்றத்தில் எலெக்ட்ரிக் பைக்... பெங்களூரு நிறுவனத்தின் அசத்தலான முயற்சி... முழு சார்ஜில் எவ்ளோ தூரம் போகும்!

Source: Zigwheels

இதைத்தவிர வேறு எந்த மாற்றத்தையும் இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் காண முடியவில்லை. சதுர வடிவ ஹெட்லைட், வால்பகுதி லைட் மற்றும் கன்சோல் உள்ளிட்டவையும் ஹீரோ ஸ்பிளெண்டரையே பிரதிபலிக்கும் வகையிலேயே உள்ளது. உண்மையில் இந்த பைக்கை பார்ப்பவர்கள் ஹீரோ ஸ்பிளெண்டர் என நினைப்பார்கள். அந்த அளவிற்கு இருசக்கர வாகனத்தின் ஸ்டைல் முதற்கொண்டு ஹேண்டில் பார் மற்றும் சைடு இன்டிகேட்டர் உள்ளிட்ட அனைத்தும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன.

ஸ்பிளெண்டர் பைக்கின் தோற்றத்தில் எலெக்ட்ரிக் பைக்... பெங்களூரு நிறுவனத்தின் அசத்தலான முயற்சி... முழு சார்ஜில் எவ்ளோ தூரம் போகும்!

ஏடிஎம்எஸ் நிறுவனம் இந்த இருசக்கர வாகனத்தில் ஹப் மோட்டாரை பயன்படுத்தியிருக்கின்றது. இதற்கான மின்சார திறனை வழங்குவதற்காக லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இவை என்னமாதிரியான திறன் கொண்டவை என்பது தெரியவில்லை. இவைகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் ஏடிஎம்எஸ் நிறுவனம் வெளியிடவில்லை.

ஸ்பிளெண்டர் பைக்கின் தோற்றத்தில் எலெக்ட்ரிக் பைக்... பெங்களூரு நிறுவனத்தின் அசத்தலான முயற்சி... முழு சார்ஜில் எவ்ளோ தூரம் போகும்!

அதேவேலையில், இருசக்கர வாகனத்தில் ரிவர்ஸ் மோட் மற்றும் ஈகோ மோட் என இருவிதமான மோட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில், ஈகோ மோடில் வைத்து இருசக்கர வாகனத்தில் பயணித்தால் 140 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதேபோல் சிறந்த இயக்க அனுபவத்தை வழங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்யூவல் ஷாக் சஸ்பென்ஷன் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

ஸ்பிளெண்டர் பைக்கின் தோற்றத்தில் எலெக்ட்ரிக் பைக்... பெங்களூரு நிறுவனத்தின் அசத்தலான முயற்சி... முழு சார்ஜில் எவ்ளோ தூரம் போகும்!

மேலும், சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக டிரம் பிரேக் இரு முனைகளிலும் கொடுக்கப்பட்டுள்ளன. இது ஓர் மிதமான வேகத்தில் செல்லக் கூடிய எலெக்ட்ரிக் பைக் என்பதால் இந்த பிரேக்கிங் தொழில்நுட்பமே போதுமானதாக உள்ளது. இந்த அம்சமே தற்போது விற்பனையில் உள்ள பல இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஸ்பிளெண்டர் பைக்கின் தோற்றத்தில் எலெக்ட்ரிக் பைக்... பெங்களூரு நிறுவனத்தின் அசத்தலான முயற்சி... முழு சார்ஜில் எவ்ளோ தூரம் போகும்!

இத்துடன், கூடுதல் சிறப்பு வசதியாக ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. இது இழக்கப்படும் மின்சாரத்தை லேசாக மீட்டெடுக்க உதவும். இத்தகைய சூப்பர் வசதிகள் கொண்ட வாகன எலெக்ட்ரிக் பைக்கையே ஏடிஎம்எஸ் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது.

ஸ்பிளெண்டர் பைக்கின் தோற்றத்தில் எலெக்ட்ரிக் பைக்... பெங்களூரு நிறுவனத்தின் அசத்தலான முயற்சி... முழு சார்ஜில் எவ்ளோ தூரம் போகும்!

இதை எப்போது நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில், இது விற்பனைக்கு வரும் எனில் நிச்சயம் பலரின் மனம் கவர்ந்த வாகனமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ஒத்த தோற்றத்துடன் அது உருவாக்கப்பட்டிருப்பதனால் சந்தையில் புரட்சியைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Belgaum based ev maker adms showcased boxer electric motorcycle
Story first published: Tuesday, July 5, 2022, 21:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X