ஊருக்குள்ள ஓட்ட இந்த இரண்டு வண்டில எந்த வண்டி பெஸ்ட் தெரியுமா?

மார்கெட்டில் அதிக மக்களால் விரும்பப்படும் ஹோண்டா ஷைன் - ஹீரோ கிளாமர் இந்த இரண்டு பைக்கில் எது பெஸ்ட் விரிவாக காணலாம்

இந்தியாவில் ஒரு காலத்தில் அடிப்படை பைக் என்றால் 100 சிசி பைக் என்ற நிலை மாறி இன்று பெரும்பாலும் மக்கள் தினசரி பயன்பாட்டிற்காக 125 சிசி பைக்கை வாங்க துவங்கிவிட்டனர்.

ஊருக்குள்ள ஓட்ட இந்த இரண்டு வண்டில எந்த வண்டி பெஸ்ட் தெரியுமா?

அதிகமாக மைலேஜை இழக்க தேவையில்லை, அதே நேரம் 100 சிசி பைக்கை விட அதிக பவரில் இருக்கும் என்பதால் மக்கள் இந்த பைக்குகளை அதிகம் விரும்பியதன் விளைவாக இந்த செக்மெண்டில் டூவீலர் விற்பனை சிறப்பாக இருக்கிறது.

குறிப்பாக ஹோண்டா நிறுவனம் வெளியிடும் ஷைன் (Honda Shine) மற்றும் ஹீரோ நிறுவனத்தின் கிளாமர் (Hero Glamour) இந்த இரண்டு பைக்குகளும் சிறப்பான விற்பனையில் இருக்கிறது. இந்த பைக்குகளின் ஒப்பீட்டையே இங்கே காணப்போகிறோம்.

தோற்றம்

ஹீரோ நிறுவனம் தனது கிளாமர் (Glamour Two wheeler) பைக்கை அது அறிமுகமான பின்பு அதிக முறை மாற்றிவிட்டது. தற்போது மார்டன் எல்இடி ஹைட்லைட், டூயல் டோன் பெயிண்ட் ஸ்கீம், ஆங்குலர் ரியர் எண்ட் ஆகியவை இருக்கிறது. ஷைன் பைக்கில் பெரிய அப்டேட்டகள் எதுவும் வரவில்லை, டிசைனை பொருத்தவரை ஹோண்டா ஷைன் பைக் கொஞ்சம் சிம்பிளாக தான் இருக்கும்.

இன்ஜின்

இரண்டு பைக்கும் 124 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, ஃப்யூயல் இன்ஜெக்ஷன் இன்ஜினை கொண்டது. கிளாமர் பைக் 10.87 பிஎஸ் பவரையும், 10.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஷைன் பைக் 10.7 பிஎஸ் பவரையும் 11 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இரண்டு பைக்கின் இன்ஜினுமே 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஷைன் பைக்கில் மட்டும் சைலெண்ட் ஸ்டார்ட்டர் சிஸ்டம் இருக்கிறது.

அம்சங்கள்

அம்சங்களைப் பொருத்தவரை ஷைன் பைக்கில் இன்ஜின் கில் சுவிட்ச் மட்டும் தான் இருக்கிறது. கிளாமர் பைக்கில் தான் ஐ3எஸ் ஸ்டார்ட் -ஸ்டாப் டெக்னாலஜி, ஆட்டோ செயில் டெக்னாலஜி, ரியல் டைம் ஃப்யூயல் இன்டிகேட்டர் ஆகிய அம்சங்கள் இருக்கிறது. Xtec வேரியன்டில் மட்டும் எல்இடி ஹெட்லைட், யூஎஸ்பி போர்ட், ப்ளூடூத் கனெக்டிவிட்டி கியர் போசிஷன் இன்டிகேட்டர் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

விலை

ஹீரோ ஷைன் பைக்கை பொருத்தவரை ரூ78,414 முதல் ரூ83,914 என்ற விலையிலும், ஹீரோ கிளாமர் பைக்கை பொருத்தவரை ரூ78,018 முதல் ரூ84,138 என்ற விலையிலும் விற்பனையாகிறது. இரண்டு பைக்கும் கிட்டத்டட்ட ஒரே விலை தான் ஆனால் ஹீரோ கிளாமர் பைக் தான் அதன் தோற்றம், அம்சங்கள் ஆகிய விஷயங்களில் சிறப்பாக இருக்கிறது. இந்த இரண்டில் உங்களுக்கு பிடித்த பைக் எது? கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
Bike comparison Honda Shine vs hero glamour best for city rides
Story first published: Saturday, November 19, 2022, 16:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X