புத்தாண்டு அதுவும் முழுசா காட்சி தந்த க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக்... சாவி இல்லாமலே ஆன் பண்ணலாம்!

மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் சைபோர்க் யோடா (Cyborg Yoda) இ-பைக் (எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்) முதல் முறையாக முழுமையாக காட்சியளித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

புத்தாண்டு அதுவும் முழுசா காட்சி தந்த க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக்... சாவி இல்லாமலே ஆன் பண்ணலாம்!

இந்தியாவில் மின் வாகனங்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இந்த நிலையால் நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், புதுமுக மின் வாகனங்களின் பிறப்பிற்கும் இது வழி வகுத்திருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்கனவே நாட்டில் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகமாகி வருகின்றன.

புத்தாண்டு அதுவும் முழுசா காட்சி தந்த க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக்... சாவி இல்லாமலே ஆன் பண்ணலாம்!

அந்தவகையில், இந்தியாவிற்கான முதல் க்ரூஸர் ரக பைக்கை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது இக்னைட்ரான் மோட்டோகார்ப் (ignitron motocorp) நிறுவனம். சைபோர்க் யோடா (Cyborg Yoda) எனும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளையே நிறுவனம் மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதனை முன்னிட்டு மிக சமீபத்தில் இப்பைக்கை நிறுவனம் வெளியீடு செய்தது.

புத்தாண்டு அதுவும் முழுசா காட்சி தந்த க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக்... சாவி இல்லாமலே ஆன் பண்ணலாம்!

ஆனால், அப்போது க்ரூஸர் பைக்கின் முழுமையான தோற்றம் வெளிப்படவில்லை. இது பலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது இருசக்கர வாகனத்தின் முழு படமும், அனைத்து விபரங்களுடனும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான தகவலைக் காணலாம்.

புத்தாண்டு அதுவும் முழுசா காட்சி தந்த க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக்... சாவி இல்லாமலே ஆன் பண்ணலாம்!

சைபோர்க் யோடா ஓர் பிரீமியம் தர எலெக்ட்ரிக் பைக் ஆகும். சைபோர்க் பிராண்டின்கீழ் இப்பைக்கை விற்பனைச் செய்ய இக்னைட்ரான் மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பைக்கில் ஸ்வாப்பபிள் பேட்டரி, அதிக பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அதி நவீன தொழில்நுட்பங்கள் என பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புத்தாண்டு அதுவும் முழுசா காட்சி தந்த க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக்... சாவி இல்லாமலே ஆன் பண்ணலாம்!

இக்னைட்ரான் மோட்டோகார்ப் நிறுவனம் அதன் உற்பத்தி ஆலையை குர்காவுன், மனேசர் பகுதியில் செயல்படுத்தி வருகின்றது. இங்கு வைத்தே அதன் எதிர்கால மின் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இந்த ஆலை ஆண்டிற்கு 40 ஆயிரம் யூனிட் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

புத்தாண்டு அதுவும் முழுசா காட்சி தந்த க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக்... சாவி இல்லாமலே ஆன் பண்ணலாம்!

சைபோர்க் பிராண்டின்கீழ் க்ரூஸர், வழக்கமான மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று ரக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. அனைத்தும் உயர்-வேக இருசக்கர வாகனமாக விற்பனைக்கு வரும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

புத்தாண்டு அதுவும் முழுசா காட்சி தந்த க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக்... சாவி இல்லாமலே ஆன் பண்ணலாம்!

சைபோர்க் யோடா இ-பைக்கின் தோற்றம் மற்றும் சிறப்பம்சங்கள்

சைபோர்க் யோடா இ-பைக் நியோ-ரெட்ரோ ஸ்டைலில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த தோற்றத்தை இருசக்கர வாகனத்திற்கு வழங்கும் பொருட்டு வட்ட வடிவ, மூன்று பீம்கள் கொண்ட ஹேட்லேம்ப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, வட்ட வடிவ வால் பகுதி மின் விளக்கு மற்றும் இன்டிகேட்டர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

புத்தாண்டு அதுவும் முழுசா காட்சி தந்த க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக்... சாவி இல்லாமலே ஆன் பண்ணலாம்!

மேலும், உயரமான மற்றும் அகலமான ஹேண்டில்பார், தாழ்வான சேடில் மற்றும் ஃபார்வார்டு ஃபுட் பெக் உள்ளிட்ட அம்சங்களும் இ-பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து சைபர் யோடா இ-பைக்கை மிகவும் கவர்ச்சியான க்ரூஸர் ரக பைக்காக காட்சிப்படுத்துகின்றது.

புத்தாண்டு அதுவும் முழுசா காட்சி தந்த க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக்... சாவி இல்லாமலே ஆன் பண்ணலாம்!

கூடுதல் சிறப்பு அம்சங்களாக ஆன்டி தெஃப்ட் அலாரம், பின்னிருக்கை பயணிகளுக்கான பேக் ரெஸ்ட் பேட், சாவியில்லாமல் ஆன் செய்யும் வசதி, பக்கவாட்டு பகுதியில் பேனியர் பெட்டி மற்றும் அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன் உள்ளிட்ட அம்சங்களும் இந்த இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

புத்தாண்டு அதுவும் முழுசா காட்சி தந்த க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக்... சாவி இல்லாமலே ஆன் பண்ணலாம்!

இந்த இ-பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஸ்வாப்பபிள் பேட்டரி ஒற்றை முழுமையான சார்ஜில் 120 கிமீ ரேஞ்ஜை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதனை வீட்டிலேயே வைத்து சார்ஜ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. 50 சதவீதம் சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே போதும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

Most Read Articles

English summary
Cyborg yoda e bike first look
Story first published: Saturday, January 1, 2022, 13:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X