ஒற்றை ட்வீட்தான்... தொடர்ச்சியாக புக்கிங்கை கேன்சல் செய்யும் வாடிக்கையாளர்கள்! அப்படி என்னங்க ட்வீட் அது?

சிம்பிள் எனெர்ஜி (Simple Energy) நிறுவனம் போட்ட ஒற்றை ட்வீட்டால் அதன் வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக புக்கிங்கை கேன்சல் செய்ய தொடங்கியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

புக் செய்த ஒரு வாடிக்கையாளருக்குகூட டெலிவரி கொடுக்கல... ஏற்கனவே 9 மாதங்கள் ஆகிவிட்டதால் ஆர்டரை கேன்சல் செய்யும் வாடிக்கையாளர்கள்!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) மற்றும் ஏத்தர் (Ather Energy) ஆகிய நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக சிம்பிள் எனெர்ஜி (Simple Energy) நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே சிம்பிள் ஒன் (Simple One). இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் பணிகளை கடந்த ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி அன்றே சிம்பிள் எனெர்ஜி தொடங்கிவிட்டது.

புக் செய்த ஒரு வாடிக்கையாளருக்குகூட டெலிவரி கொடுக்கல... ஏற்கனவே 9 மாதங்கள் ஆகிவிட்டதால் ஆர்டரை கேன்சல் செய்யும் வாடிக்கையாளர்கள்!

இந்த பணிகள் தொடங்கி தற்போது ஒன்பதுக்கும் அதிகமான மாதங்கள் ஆகின்றன. இருப்பினும் ஒரு யூனிட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைகூட சிம்பிள் எனெர்ஜி டெலிவரி வழங்கவில்லை என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளன. இதுமட்டுமின்றி, இன்னும் கூடுதல் சில மாதங்கள் டெலிவரிக்கு ஆகும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

புக் செய்த ஒரு வாடிக்கையாளருக்குகூட டெலிவரி கொடுக்கல... ஏற்கனவே 9 மாதங்கள் ஆகிவிட்டதால் ஆர்டரை கேன்சல் செய்யும் வாடிக்கையாளர்கள்!

அதாவது, சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் அதன் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை புக் செய்தவர்களுக்கு டெலிவரி கொடுக்க இன்னும் தாமதமாகும் என கூறப்படுகின்றது. இது மின்சார ஸ்கூட்டரை புக் செய்துவிட்டு காத்திருப்பவர்களுக்கு கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

புக் செய்த ஒரு வாடிக்கையாளருக்குகூட டெலிவரி கொடுக்கல... ஏற்கனவே 9 மாதங்கள் ஆகிவிட்டதால் ஆர்டரை கேன்சல் செய்யும் வாடிக்கையாளர்கள்!

டெலிவரி காலதாமதம் குறித்த தகவலை நிறுவனம் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவின் வாயிலாக தெரிவித்துள்ளது. இந்த பதிவிற்கு அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்திருக்கின்றது. மேலும், ஒரு சிலர் ஸ்கூட்டருக்கு வழங்கிய புக்கிங்குகளை திரும்ப பெற ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புக் செய்த ஒரு வாடிக்கையாளருக்குகூட டெலிவரி கொடுக்கல... ஏற்கனவே 9 மாதங்கள் ஆகிவிட்டதால் ஆர்டரை கேன்சல் செய்யும் வாடிக்கையாளர்கள்!

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, நிறுவனம் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் செப்டம்பரில் தொடங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், ஜூலை 2022இல் இருந்து ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்யலாம் என்றும் தெரிவித்திருக்கின்றது.

புக் செய்த ஒரு வாடிக்கையாளருக்குகூட டெலிவரி கொடுக்கல... ஏற்கனவே 9 மாதங்கள் ஆகிவிட்டதால் ஆர்டரை கேன்சல் செய்யும் வாடிக்கையாளர்கள்!

கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய நாள் முதலிலிருந்தே வாகன உலகம் எக்கசக்க சிக்கல்களைச் சந்தித்து வருகின்றது. இதை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் சிப் பற்றாக்குறை அதன் பங்காக வாகன உலகத்தை புரட்டிப் போட தொடங்கியது. இதுபோன்ற காரணங்களால் ஒட்டுமொத்த வாகந உலகமே தற்போது திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றது.

புக் செய்த ஒரு வாடிக்கையாளருக்குகூட டெலிவரி கொடுக்கல... ஏற்கனவே 9 மாதங்கள் ஆகிவிட்டதால் ஆர்டரை கேன்சல் செய்யும் வாடிக்கையாளர்கள்!

இந்த மாதிரியான சூழலிலேயே புதிய தலைவலியை ஏற்படுத்தும் வகையில் தற்போது இந்தியாவில் தொடர் மின் வாகன தீ விபத்து நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இது கூடுதல் சிக்கலை மின் வாகன உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிம்பிள் எனெர்ஜி நிறுவனத்திற்கு பன்மடங்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது.

புக் செய்த ஒரு வாடிக்கையாளருக்குகூட டெலிவரி கொடுக்கல... ஏற்கனவே 9 மாதங்கள் ஆகிவிட்டதால் ஆர்டரை கேன்சல் செய்யும் வாடிக்கையாளர்கள்!

ஆம், தொடர் மின் வாகன தீ விபத்தைக் கருத்தில் கொண்டு நிறுவனம் ஆண்டி ஃபையர் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக தனது தயாரிப்பை உருவாக்க இருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் இன்னும் பல மாதங்களுக்கு தள்ளி போயிருப்பதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புக் செய்த ஒரு வாடிக்கையாளருக்குகூட டெலிவரி கொடுக்கல... ஏற்கனவே 9 மாதங்கள் ஆகிவிட்டதால் ஆர்டரை கேன்சல் செய்யும் வாடிக்கையாளர்கள்!

எதிர்காலத்தில் மின் வாகனங்களில் தீ விபத்து ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக அரசு வெகு விரைவில் புதிய வழிகாட்டுதல்களை மின் வாகன உற்பத்தி சார்ந்து வெளியிட இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே சமீபத்திய தீ விபத்து நிகழ்வுகளை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிம்பிள் எனெர்ஜி அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பாதுகாப்பானதாக உருவாக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றது.

புக் செய்த ஒரு வாடிக்கையாளருக்குகூட டெலிவரி கொடுக்கல... ஏற்கனவே 9 மாதங்கள் ஆகிவிட்டதால் ஆர்டரை கேன்சல் செய்யும் வாடிக்கையாளர்கள்!

ஆனால், காக்க தொடங்கி பல மாதங்கள் ஆகியிருப்பதால், மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியிருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களின் புக்கிங்கை கேன்சல் செய்து வருகின்றனர். இதுகுறித்த அதிருப்தியை நிறுவனத்தின் டுவிட்டர் பதிவை டேக் செய்து தற்போது கருத்துகளை அவர் தெரிவித்து வருகின்றனர்.

Most Read Articles
English summary
Deliveries of simple one e scooter have been delayed yet again
Story first published: Friday, May 27, 2022, 18:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X