டெசர்ட் எக்ஸ் உள்பட, 2022ல் 11 புதிய பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் டுகாட்டி!! ஒமிக்ரான் பரவாம இருக்கணும்..

புதிய 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தவுள்ள மோட்டார்சைக்கிள்கள் குறித்த விபரங்களை டுகாட்டி இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டெசர்ட் எக்ஸ் உள்பட, 2022ல் 11 புதிய பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் டுகாட்டி!! ஒமிக்ரான் பரவாம இருக்கணும்..

உலகின் முன்னணி மோட்டார்சைக்கிள் பிராண்டாக விளங்கும் டுகாட்டி இந்திய சந்தையில் அடுத்ததாக விரைவில் ஸ்க்ராம்ப்ளர் 1100 ட்ரிப்யூட் ப்ரோ மற்றும் பனிகளே வி2 டிராய் பேலிஸ் என்கிற இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகளை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் ஸ்க்ராம்ப்ளர் 1100 ட்ரிப்யூட் ப்ரோ எடிசன் உலகளவில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

டெசர்ட் எக்ஸ் உள்பட, 2022ல் 11 புதிய பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் டுகாட்டி!! ஒமிக்ரான் பரவாம இருக்கணும்..

பனிகளே வி2 டிராய் பேலிஸ் ஆனது 2001இல் உலக சூப்பர்பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற டுகாட்டி 996ஆர் பைக்கில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகளுக்கான முன்பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டுகாட்டி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 950 மாடலின் பரிணாம வளர்ச்சியான மல்டிஸ்ட்ராடா வி2 பைக் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

டெசர்ட் எக்ஸ் உள்பட, 2022ல் 11 புதிய பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் டுகாட்டி!! ஒமிக்ரான் பரவாம இருக்கணும்..

இவற்றிற்கு அடுத்து இந்த இத்தாலிய பிராண்டில் இருந்து ஸ்க்ராம்ப்ளர் 800 அர்பன் மோட்டார்ட் பைக் இந்தியாவில் களமிறக்கப்பட உள்ளது. இவை நான்கும் அறிமுகமாகுவதற்குள் முதல் 3 மாதங்கள் ஓடிவிடும். நடப்பு காலண்டர் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலகுவான, ஆற்றல்மிக்க ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 எஸ்பி டுகாட்டி இந்தியா நிறுவனத்தில் இருந்து விற்பனைக்கு வர உள்ளது.

டெசர்ட் எக்ஸ் உள்பட, 2022ல் 11 புதிய பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் டுகாட்டி!! ஒமிக்ரான் பரவாம இருக்கணும்..

இதனை தொடர்ந்து டுகாட்டி பிராண்டில் இருந்து இந்த ஆண்டில் முக்கிய அறிமுகமாக குறிப்பிடத்தக்க அப்டேட்களுடன் பனிகளே வி4 பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை காட்டிலும் அளவில் சிறிய, நாக்டு பைக்கான ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 அடுத்ததாக நம் நாட்டு சந்தைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதன் பிறகு, மல்டிஸ்ட்ராடா வி4 பைக்ஸ் பீக் என்ற அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளும், எக்ஸ்டயவெல் போல்ட்ரோனா ஃப்ராவ் பைக்கும் களமிறக்கப்பட உள்ளன.

டெசர்ட் எக்ஸ் உள்பட, 2022ல் 11 புதிய பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் டுகாட்டி!! ஒமிக்ரான் பரவாம இருக்கணும்..

இதில் எக்ஸ்டயவெல் போல்ட்ரோனா ஃப்ராவ் ஆனது இத்தாலிய லக்சரி பர்னிச்சர் பிராண்டான போல்ட்ரோனா ஃப்ராவ் உடன் டுகாட்டி ஏற்படுத்தி கொண்டுள்ள கூட்டணியின் விளைவாக உருவான ஸ்பெஷல் எடிசனாகும். இவை அனைத்தும் இந்த 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளவை. இரண்டாம் பாதியில் வெறும் இரு டுகாட்டி பைக்குகள் மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

டெசர்ட் எக்ஸ் உள்பட, 2022ல் 11 புதிய பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் டுகாட்டி!! ஒமிக்ரான் பரவாம இருக்கணும்..

இதில் உலகளவில் மிகுந்த கவனத்தை பெற்றிருக்கும் டெசர்ட் எக்ஸ் பைக்கும் ஒன்று. பாலைவன ஆஃப்-ரோடு மோட்டார்சைக்கிள் என அழைக்கப்படும் இதனுடன் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள மற்றொரு டுகாட்டி பைக் பனிகளே வி4 எஸ்பி ஆகும். இது வழக்கமான பனிகளே வி4 மாடலுடன் ஒப்பிடுகையில் புதிய ஏரோ, சஸ்பென்ஷன் மற்றும் சேசிஸ் உடன் கூடுதல் அதிவேகமான பைக்காக பார்க்கப்படுகிறது.

டெசர்ட் எக்ஸ் உள்பட, 2022ல் 11 புதிய பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் டுகாட்டி!! ஒமிக்ரான் பரவாம இருக்கணும்..

இந்த வகையில் பார்த்தோமேயானால், இந்த 2022ஆம் ஆண்டில் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 எஸ்பி பைக்கையும், பனிகளே வி4 எஸ்பி பைக்கையும் டுகாட்டி இந்திய சந்தையில் களமிறக்க உள்ளது. இவை அனைத்தும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவது நிறைவு பெறுவதற்கும், இந்த ஆண்டு இறுதியில் உலக பிரீமியர் கண்காட்சியின் 2022 எடிசனை டுகாட்டி நடத்துவதற்கும் சரியாக இருக்கும்.

டெசர்ட் எக்ஸ் உள்பட, 2022ல் 11 புதிய பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் டுகாட்டி!! ஒமிக்ரான் பரவாம இருக்கணும்..

2022 உலக பிரீமியர் கண்காட்சியின் மூலம் 2023ஆம் ஆண்டில் இருந்து இத்தாலிய டுகாட்டி நிறுவனம் உலகளவில் வெளியீடு செய்ய உள்ள மோட்டார்சைக்கிள்கள் குறித்த விபரங்கள் நமக்கு தெரியவரும். பொதுவாக வருட இறுதியில், கிறித்துமஸ் பண்டிகை காலத்தில் தான் டுகாட்டி அடுத்த ஆண்டிற்கான திட்டங்களை வகுக்கிறது. அதற்கு இத்தகைய பிரீமியர் கண்காட்சியை பயன்படுத்தி கொள்கிறது.

டெசர்ட் எக்ஸ் உள்பட, 2022ல் 11 புதிய பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் டுகாட்டி!! ஒமிக்ரான் பரவாம இருக்கணும்..

இந்தியாவில் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக டுகாட்டி அறிவித்துள்ள டெசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் உலகளவில் கடந்த 2021 டிச.10ஆம் தேதி வெளியீடு செய்யப்பட்டது. இந்த பாலைவன பைக்கிற்கு உலகளவிலான வாடிக்கையாளர்களிடம் இருந்து மிகுந்த கவனம் கிடைத்திருப்பதை உணர்ந்த டுகாட்டி நிறுவனம் இந்த பைக்கினை ஒரேடியாக, முழுமையாக வெளியீடு செய்யாமல், வாரத்திற்கு ஒவ்வொரு பகுதியின் விபரங்களும் வெளியீடு செய்யப்பட்டன.

டெசர்ட் எக்ஸ் உள்பட, 2022ல் 11 புதிய பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் டுகாட்டி!! ஒமிக்ரான் பரவாம இருக்கணும்..

90களில் டுகாட்டி நிறுவனம் சார்பில் ராலி போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட ஐகானிக் மோட்டார்சைக்கிள்களினால் கவரப்பட்டு டெசர்ட் எக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. எந்தவொரு சாலைக்கும் ஏற்றதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மோட்டார்சைக்கிள், அதிலிலும் குறிப்பாக தொலைத்தூர பயணங்களுக்கு உகந்ததாக கட்டமைக்கப்பட்டுள்ளதாக டுகாட்டி தெரிவிக்கிறது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati India to launch 11 new motorcycles in 2022, including the most anticipated launch of the year, the DesertX.
Story first published: Tuesday, January 4, 2022, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X