யமஹா ஆர்எக்ஸ் 100 ஸ்டைலில் எலெக்ட்ரிக் பைக்... இந்திய நிறுவனத்தின் அசத்தலான தயாரிப்பு!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஈகோ தேஜஸ் (Eko Tejas) நிறுவனம் நாட்டில் அதன் புதுமுக எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இ-டைரோத் (E-Dyroth) எனும் மின்சார பைக்கையே நிறுவனம் இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. முற்றிலும் தனித்துவமான ஸ்டைல் மற்றும் சிறப்பு வசதிகளுடன் இந்த பைக்கை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

ஈகோ தேஜஸ் (Eko Tejas), இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஆரம்ப நிலை மின் வாகன உற்பத்தி நிறுவனம் இதுவாகும். இந்த நிறுவனமே இந்திய மின் வாகன சந்தையை அலங்கரிக்கும் விதமாக அதன் புதுமுக எலெக்ட்ரிக் பைக்கை ஒன்றை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இ-டைரோத் (E-Dyroth) எனும் மின்சார பைக்கையே நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. இ-டைரோத் ஓர் ஹை-ஸ்பீடு க்ரூஸர் ரக இ-பைக்காகும்.

எலெக்ட்ரிக் பைக்

இதுவரை எந்தவொரு நிறுவனமும் உருவாக்கிடாத ஸ்டைல் மற்றும் தோற்றத்தில் இந்த இ-பைக்கை நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. அதேவேலையில், இதன் தோற்றம் யமஹாவின் ஆர்எக்ஸ் 100 பைக்குடன் ஒத்துப்போவதை நம்மால் உணர முடிகின்றது. இந்த லுக்கே தற்போது பலரின் கவனத்தை இந்த வாகனம் ஈர்க்க காரணமாக இருக்கின்றது. அதேநேரத்தில், இந்த பைக்கின் குறிப்பிட்ட சில பகுதிகள் மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, எஞ்ஜின் மற்றும் வால் பகுதி தனித்துவமான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றன.

இது மின்சார பைக் என்பதால் எஞ்ஜின் இருக்கும் பகுதியில் மோட்டாருக்கு பதிலாக பேட்டரி பேக் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அந்த பகுதியிலேயே பிற முக்கிய சிஸ்டங்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவையே பைக்கின் பக்கவாட்டு பகுதிக்கு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தை வழங்குகின்றன. இதுமட்டுமில்லைங்க, பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வீல்களும்கூட முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலில் காட்சியளிக்கின்றன. வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கும் என ஈகோ தேஜஸ் அறிவித்துள்ளது.

இந்த எலெக்ட்ரிக் பைக்கை முழுக்க முழுக்க மேட்- இன்- இந்தியா தயாரிப்பாக அது உருவாக்கியிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, நவீன யுகத்திற்கு ஏற்ற வாகனமாகவும் இதனை நிறுவனம் தயாரித்திருக்கின்றது. செல்போன் இணைப்பு, திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதி என எக்கசக்க அம்சங்கள் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமில்லைங்க ஈகோ தேஜஸ் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கை அதிகம் ரேஞ்ஜ் தரக் கூடியதாகவும் வடிவமைத்திருக்கின்றது.

இதற்காக இ-டைரோத் எலெக்ட்ரிக் பைக்கில் 72 வோல்ட் / 60 ஏஎச் பேட்டரி பேக்கை நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இதனை முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் அதிகபட்சமாக 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதே திறன் கொண்ட பேட்டரி பேக்கை கூடுதல் விருப்பத் தேர்வாக நிறுவனம் வாங்கிக் கொள்ள முடியும். இதையும் கை வசம் வைத்திருக்கின்ற நிலையில் நாம் தடையின்றி 300 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.

ஆகையால், இந்த பைக் அதிகப்படியான மக்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கவருதல் தன்மையை இரட்டிப்பாக்கும் விதமாக நிறுவனம் சில வசதிகளை வாடிக்கையளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளது. அந்தவகையில், வாடிக்கையாளர் விரும்பும் பகுதியில் சார்ஜிங் கருவியையே நிறுவனம் பொருத்தி தர இருக்கின்றது. இ-டைரோத் மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இது, "பைக்கின் லுக்கிற்கும், அதன் வேகத்திற்கும் சம்பந்தமே இல்லையேப்பா" எனும் கூறும் வகையில் இருக்கின்றது.

பைக்கின் சூப்பர் வேக திறனுக்காக 4 kW மின்சார மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, ப்ளூடூத் இணைப்பு மற்றும் ஸ்மார்ட் இணைப்பு வசதிக் கொண்ட திரை ஒன்றும் மின்சார பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுவே, திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவல், பேட்டரியின் மின்சார திறன், ரேஞ்ஜ் விபரம் போன்ற முக்கிய தகவல்களை நமக்கு வழங்கும். நிறுவம் தற்போது நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளில் தங்களின் விற்பனையை நிறுவியிருக்கின்றது.

தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஹரியானா, ஒரிசா, உபி மற்றும் மபி போன்ற இந்தியாவின் பத்து முக்கியமான மாநிலங்களில் ஷோரூம்களை நிறுவனம் அமைத்திருக்கின்றது. இவற்றிலேயே அடுத்த மாதம் முதல் இ-டைரோக் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. மேலும், இந்த எலெக்ட்ரிக் பைக்கை தயாரிப்பு நிறுவனம் முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பாக உருவாக்கியிருப்பதனால் இதற்கு மத்திய அரசின் மானியம் கிடைக்கும் என்பது தெரிகின்றது.

Most Read Articles

English summary
Eko tejas launched e dyroth
Story first published: Wednesday, November 30, 2022, 14:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X