தரமான சம்பவம் வெயிட்டிங்! அடுத்த மாசம் இவங்க 5 தயாரிப்புகளை வெளியிட போறாங்க! எல்லாம் வேற லெவல்ல இருக்கும்!

கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அடுத்த மாதம் நடக்கவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போவில் தனது 5 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

கிரியவேஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் ஆம்பியர் என்ற பிராண்டில் எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் அதிகமாக எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனை செய்யும் டாப் 3 நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. மக்களுக்கான தேவையை அறிந்து அதற்கான வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெயர் இந்நிறுவனத்திற்கு இருக்கிறது.

தரமான சம்பவம் வெயிட்டிங்! அடுத்த மாசம் இவங்க 5 தயாரிப்புகளை வெளியிட போறாங்க! எல்லாம் வேற லெவல்ல இருக்கும்!

இந்நிறுவனம் இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் மட்டும் மொத்தம் 33 ஆயிரம் 2 மற்றும் 3 சக்கர வானகங்களை விற்பனை செய்துள்ளது. தொடர்ந்து வளர்ச்சிப் பாதையிலேயே சென்று கொண்டிருக்கும் இந்நிறுவனம் வரும் 2023ம் ஆண்டு எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டி பிடிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் 2023ம் ஆண்டு களத்தில் இறக்கத் தனது 5 புதிய தயாரிப்புகளைத் தயார் செய்து வைத்துள்ளது.

வரும் 2023ம்ஆண்டு ஜனவரி மாதம் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் தனது 5 தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த 5 தயாரிப்புகளில் 2 வீலர் மற்றும் 3 வீலர் ஆகியன அடங்கும். இந்நிறுவனத்தின் வாகன டிசைன்கள்கள் எல்லாம் இந்தியச் சாலைகளுக்கும், இந்திய கண்டிஷன்களுக்கு ஏற்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும். இதன் 2 மற்றும் 3 சக்கர வாகனங்கள் எல்லாம் ஹூமைனைஸிங் தொழிற்நுட்பத்தில் இயங்கும் திறன் கொண்டது. சிறந்த தொழிற்நுட்பத்தையும், பாதுகாப்பை ஒன்று சேர்த்த வடிவமைப்பாக இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கும்.

இந்நிலையில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 தயாரிப்புகள் புதிய டிசைன் மற்றும் அடுத்த தலைமுறை ஏரோ எஃபிசியன்ட் கார்கோ 3-வீலர் கான்செப்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இது கேக்-இன்-இந்தியா கொள்கையின்படி பெரும்பாலான உதிரிப் பாகங்கள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் வைஸ் சேர்மன் நாகேஷ் பசவன்ஹள்ளி கூறும் போது: "ஆட்டோ எக்ஸ்போ கிரீவ்ஸ் நிறுவனத்திற்கு ஒரு முக்கிய மைல்கள், இதில் முதன்முறையாக எங்கள் எதிர்காலத்தைக் காட்சிப்படுத்தப்போகிறோம். இதன் மூலம் எங்களின் 2 மற்றும் 3 சக்கர வாகனங்களின் தயாரிப்புகள் அதிகரிக்கும். மேலும் பி2பி மற்றும் பி2சி தொழிற்களும் அதிகமாகும்.வாடிக்கையாளர்களும் அதிகமாவார்கள். எங்கள் புதிய டிசைன் மொழி இந்த செக்மெண்டிற்கு ஒரு புதிய விஷயத்தைக் கொண்டு வரும். " எனக் கூறினார்.

இந்த 5 தயாரிப்புகளில் எத்தனை டூவீலர் எத்தனை 3 வீலர் போன்ற தகவல்கள் இல்லை மேலும் இது எந்த ரக வாகனம், யாருக்காகப் பயன்படுத்தப்படுத்தப்போகிறோம் போன்ற விஷயங்கள் இல்லை. இது எல்லாம் 2023 ஆட்டோ எக்ஸ்போவில்தான் தெரியவரும். இதுகுறித்த உங்கள் கருத்துகளை கமெண்டில் சொல்லுங்கள்!

Most Read Articles

English summary
Graves electric mobility will showcase 5 EV products at the 2023 Auto Expo
Story first published: Friday, December 9, 2022, 11:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X