வெறும் 18 நிமிடங்கள்தான்... அமெரிக்காவில் தரமான சம்பவத்தை செய்த ஹார்லி-டேவிட்சனின் 2வது எலக்ட்ரிக் பைக்!!

ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் புதிய லைவ் வயர் எஸ்2 டெல் மர் எலக்ட்ரிக் பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்ட வெறும் 18 நிமிடங்களில் நிறைவு பெற்றுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

வெறும் 18 நிமிடங்கள்தான்... அமெரிக்காவில் தரமான சம்பவத்தை செய்த ஹார்லி-டேவிட்சனின் 2வது எலக்ட்ரிக் பைக்!!

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அதன் எலக்ட்ரிக் வாகனங்களுக்காக லைவ் வயர் இவி பிராண்டை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் இந்த துணை பிராண்டில் இருந்து இரண்டாவது இ-மோட்டார்சைக்கிள் எஸ்2 டெல் மர் என்கிற பெயரில் அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

வெறும் 18 நிமிடங்கள்தான்... அமெரிக்காவில் தரமான சம்பவத்தை செய்த ஹார்லி-டேவிட்சனின் 2வது எலக்ட்ரிக் பைக்!!

லைவ் வயர் எஸ்2 டெல் மரின் விலை 17,699 அமெரிக்க டாலர்களாக (கிட்டத்தட்ட ரூ.13.67 லட்சம்) நிர்ணயிக்கப்பட்ட போதிலும், வெறும் 100 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டதால், முன்பதிவு துவங்கப்பட்ட 18 நிமிடங்களில் அனைத்து யூனிட்களும் விற்று தீர்ந்துள்ளன. லாஞ்ச் எடிசன் என்ற ஒற்றை வேரியண்ட்டில் மட்டுமே பிரத்யேகமாக அமெரிக்காவில் எஸ்2 டெல் மர் எலக்ட்ரிக் பைக் சந்தைப்படுத்தப்பட்டது.

வெறும் 18 நிமிடங்கள்தான்... அமெரிக்காவில் தரமான சம்பவத்தை செய்த ஹார்லி-டேவிட்சனின் 2வது எலக்ட்ரிக் பைக்!!

லைவ் வயர் எஸ்2 டெல் மர் பைக் ஆனது குறைவான ஸ்டைலிங் பேனல்களை கொண்ட சம பந்தய கள பைக்காகும். ஜாஸ்பர் க்ரே & காமெட் இண்டிகோ என்ற இரு விதமான நிறத்தேர்வுகள் இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளன. தோற்றத்தை பொறுத்தவரையில், தட்டையான டூம் உடன் ஓவல் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் கருப்பு நிறத்தில் முன்பக்க யுஎஸ்டி ஃபோர்க்குகளை எஸ்2 டெல் மர் பைக் கொண்டுள்ளது.

வெறும் 18 நிமிடங்கள்தான்... அமெரிக்காவில் தரமான சம்பவத்தை செய்த ஹார்லி-டேவிட்சனின் 2வது எலக்ட்ரிக் பைக்!!

எலக்ட்ரிக் பைக்குகளுக்கு பெட்ரோல் டேங்க் தேவையில்லாத ஒன்று. ஆனால் இந்த ஹார்லி-டேவிட்சன் பைக்கில் போலியான பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு மெல்லியதானதாக உள்ளது. இதனை தொடர்ந்து பிளவுப்பட்ட வடிவிலான இருக்கை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பைக்கின் முன் & பின்பக்கத்தில் வட்ட வடிவிலான டர்ன் இண்டிகேட்டர்களையும் பார்க்க முடிகிறது.

வெறும் 18 நிமிடங்கள்தான்... அமெரிக்காவில் தரமான சம்பவத்தை செய்த ஹார்லி-டேவிட்சனின் 2வது எலக்ட்ரிக் பைக்!!

இருப்பினும், இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக எஸ்2 டெல் மரின் பின்பக்க தோற்றத்தை பற்றி கூறியே ஆக வேண்டும். ஏனெனில் இந்த எலக்ட்ரிக் பைக்கின் பின் இறுதிமுனை நறுக்கப்பட்டதுபோல் அளவில் சிறியதாக, மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பின் சக்கரத்திற்கு அருகே ஸ்விங்கார்ம் மற்றும் சஸ்பென்ஷனுக்கு மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளது.

வெறும் 18 நிமிடங்கள்தான்... அமெரிக்காவில் தரமான சம்பவத்தை செய்த ஹார்லி-டேவிட்சனின் 2வது எலக்ட்ரிக் பைக்!!

பைக்கின் ஒற்றை-துண்டு ஹேண்டில்பாரின் இரு முனைகளிலும் பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இயக்க ஆற்றலை வழங்கும் பேட்டரி தொகுப்பு ஆனது வழக்கமாக என்ஜின் இருக்கும் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் தோற்றத்தை வைத்து எஸ்2 டெல் மர் எலக்ட்ரிக் பைக் என்பதை பலரால் உடனடியாக நம்ப முடியாது. ஏனெனில் பேட்டரி தொகுப்பு ஆனது ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை போல் காட்சியளிக்கிறது.

வெறும் 18 நிமிடங்கள்தான்... அமெரிக்காவில் தரமான சம்பவத்தை செய்த ஹார்லி-டேவிட்சனின் 2வது எலக்ட்ரிக் பைக்!!

எஸ்2 டெல் மரின் 17-இன்ச் அலாய் சக்கரங்களில் பிரேக்கிங் பணியை கவனித்துக்கொள்ள பிரெம்போ காலிபர்கள் உடன் சிங்கிள்-டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. ஹேண்டில்பார் நன்கு உயரமாக பொருத்தப்பட்டுள்ளதாலும், ஓட்டுனர் கால் வைக்கும்பகுதி பைக்கிற்கு சரியாக மத்தியில் உள்ளதினாலும், இந்த எலக்ட்ரிக் பைக்கை வளையாமல் நன்கு நிமிர்ந்தவாறு இயக்க வேண்டும். இதனால் எஸ்2 டெல் மர் அன்றாட நகர்புற பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

வெறும் 18 நிமிடங்கள்தான்... அமெரிக்காவில் தரமான சம்பவத்தை செய்த ஹார்லி-டேவிட்சனின் 2வது எலக்ட்ரிக் பைக்!!

மற்றப்படி தொலைத்தூர பயணங்களுக்கு கொண்டு செல்வது ஏற்புடையதல்ல என்றே சொல்ல வேண்டும். ஒட்டுமொத்தமாக, நியோ-ரெட்ரோ தோற்றத்தை இந்த புதிய ஹார்லி-டேவிட்சன் எலக்ட்ரிக் பைக் கொண்டுள்ளது. இந்த தோற்றம் உண்மையில் பலரை, குறிப்பாக அமெரிக்கர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எஸ்2 டெல் மரின் மற்ற சிறப்பம்சங்கள் குறித்த எந்த விபரத்தையும் தற்போதைக்கு ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் வெளியிடவில்லை.

வெறும் 18 நிமிடங்கள்தான்... அமெரிக்காவில் தரமான சம்பவத்தை செய்த ஹார்லி-டேவிட்சனின் 2வது எலக்ட்ரிக் பைக்!!

எங்களுக்கு தெரிந்தவரையில், அதிகப்பட்சமாக 80 பிஎஸ் இயக்க ஆற்றலில் இயங்கக்கூடியதாக இந்த எலக்ட்ரிக் பைக் இருக்கலாம். இதன் ரேஞ்ச் 160 கிமீ என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அதேபோல் பைக்கின் எடை ஏறக்குறைய 200 கிலோவாக இருக்கும். எஸ்2 டெல் மரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடலாம் என கூறப்படுகிறது.

வெறும் 18 நிமிடங்கள்தான்... அமெரிக்காவில் தரமான சம்பவத்தை செய்த ஹார்லி-டேவிட்சனின் 2வது எலக்ட்ரிக் பைக்!!

அனைத்து 100 யூனிட்களும் விற்று தீர்க்கப்பட்டுவிட்டதால், தற்சமயம் உலகின் எந்தவொரு மூலையிலும் எஸ்2 டெல் மர் இ-பைக்கை வாங்குவது கடினமான விஷயமாகும். லாஞ்ச் எடிசனை தவிர்த்து ஸ்டாண்டர்ட் எஸ்2 டெல் மர் வேரியண்ட்களின் விற்பனை அடுத்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கும் எஸ்2 டெல் மர் கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் இதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகலாம்.

Most Read Articles
English summary
Harley davidson launched livewire s2 del mar electric motorcycle
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X