மெருக்கேற்றப்பட்ட 2022 ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் வெளியீடு!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்

மெருக்கேற்றப்பட்ட ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 மோட்டார்சைக்கிள் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பான் அமெரிக்காவை பற்றிய முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்ப்போம்.

மெருக்கேற்றப்பட்ட 2022 ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் வெளியீடு!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாக விளங்கும் பான் அமெரிக்கா 1250 உலகளவில் வெளியீடு செய்யப்பட்டு 1.5 வருடங்கள் நிறைவடைய உள்ளது. அதுவே, நமது இந்திய சந்தையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தான் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

மெருக்கேற்றப்பட்ட 2022 ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் வெளியீடு!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்

இந்த நிலையில் தற்போது பான் அமெரிக்கா 1250 பைக்கில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாக ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஹார்லி-டேவிட்சன் அட்வென்ச்சர் பைக்கின் டாப் வேரியண்ட் பான் அமெரிக்கா 1250 ஸ்பெஷல் என்கிற பெயரில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மட்டும் கூடுதலாக புதிய பெயிண்ட் தேர்வு வழங்கப்பட்டுள்ளது.

மெருக்கேற்றப்பட்ட 2022 ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் வெளியீடு!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்

தற்போது அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள பான் அமெரிக்கா 1250 பைக் இந்தியாவில் நடப்பு 2022ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக பான் அமெரிக்காவில் மேம்படுத்தப்பட்ட காணும் நிலை கொண்ட டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் திரை வழங்கப்பட்டுள்ளது.

மெருக்கேற்றப்பட்ட 2022 ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் வெளியீடு!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்

இது ஓட்டுனருக்கு கூடுதல் வாசிப்புத்திறனை வழங்கும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 2022 பான் அமெரிக்கா 1250 மோட்டார்சைக்கிள் 10 வினாடிகளில் இருந்து 3-5 நிமிடங்கள் வரையிலான நீட்டிக்கப்பட்ட வாகன ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் ஆக்டிவ் வசதியை பெற்றுள்ளது. இதனால் சறுக்கலான பாதையிலும் கூடுதல் நேரத்திற்கு பான் அமெரிக்கா பைக்கை ஒரே இடத்தில் நிறுத்த முடியும்.

மெருக்கேற்றப்பட்ட 2022 ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் வெளியீடு!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்

பான் அமெரிக்கா 1250 ஸ்பெஷல் வேரியண்ட்டிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய பெயிண்ட் தேர்வின் பெயர் ஃபாஸ்ட்பேக் நீலம்/ வெள்ளை மணல் ஆகும். மற்றப்படி பைக்கின் இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஹார்லி-டேவிட்சன் முழு-அளவு அட்வென்ச்சர் பைக்கான பான் அமெரிக்காவில் 1,252சிசி, லிக்யுடு-கூல்டு, வி-இரட்டை என்ஜின் பொருத்தப்படுகிறது.

மெருக்கேற்றப்பட்ட 2022 ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் வெளியீடு!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்

அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-இல் 150 பிஎச்பி-ஐயும், 6,750 ஆர்பிஎம்-இல் 127 என்எம் டார்க் திறனையும் இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. டாப் பான் அமெரிக்கா 1250 ஸ்பெஷல் வேரியண்ட் செமி-ஆக்டிவ் சஸ்பென்ஷன் மற்றும் கூடுதல் தேர்வாக பயணத்தின் போது கூட தகவமைத்து கொள்ளக்கூடிய ஓட்டுனர் இருக்கை உள்ளிட்டவற்றை பெறுகிறது.

மெருக்கேற்றப்பட்ட 2022 ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் வெளியீடு!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்

விலைமிக்க அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் என்பதால் இதன் ஸ்டாண்டர்ட் & ஸ்பெஷல் என இரு வேரியண்ட்களும் சிறப்பான வளைவில் திரும்புத்திறனிற்கான தொழிற்நுட்பங்களை பெறுகின்றன. இவை ஆக்ஸலரேஷனை கொடுக்கும்போது, முடுக்கத்தை குறைக்கும்போது மற்றும் ப்ரேக் கொடுக்கும்போது ஏற்படுகின்ற சறுக்கல்களை தவிர்க்கும் வகையில் வழங்கப்படுகின்றன.

மெருக்கேற்றப்பட்ட 2022 ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் வெளியீடு!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்

கார்னரிங் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் மூலமாக இணைக்கப்பட்ட ப்ரேக், கார்னரிங் டிராக்‌ஷன் கண்ட்ரோல் அமைப்பு, கார்னரிங் இழுவை-டார்க் ஸ்லிப் கண்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் உள்ளிட்டவை இந்த தொழிற்நுட்பங்களில் அடங்குகின்றன. இந்தியாவில் பான் அமெரிக்கா 1250 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.16.90 லட்சங்களாக உள்ளது.

மெருக்கேற்றப்பட்ட 2022 ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் வெளியீடு!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்

இதற்கிடையில் ஹார்லி-டேவிட்சன் உலகளவில் புத்தம் புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றையும் வெளியீடு செய்ய தயாராகி வருகிறது. இது தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்த டீசர் படத்தில் இந்த புதிய ஹார்லி-டேவிட்சன் பைக்கின் வெளியீட்டு தேதியாக 2022 ஜனவரி 26 குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த டீசர் படத்தில் "மேலும், வேகமாக..." என்றும் கூறப்பட்டிருந்தது.

மெருக்கேற்றப்பட்ட 2022 ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் வெளியீடு!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்

மற்றப்படி இந்த புதிய ஹார்லி-டேவிட்சன் பைக்கை பற்றிய மற்ற விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை. டீசர் படத்தினை வைத்து பார்க்கும்போது, தற்சமயம் இருப்பதிலேயே வேகமான மோட்டார்சைக்கிளாக இதனை இந்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் கொண்டுவரலாம். முன்னதாக இந்த பைக்கை பான் அமெரிக்கா 1250 பைக்கின் புதிய வேரியண்ட்டாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம்.

மெருக்கேற்றப்பட்ட 2022 ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் வெளியீடு!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்

ஆனால் அப்டேட் செய்யப்பட்ட 2022 பான் அமெரிக்கா தற்போது புதிய பெயிண்ட் தேர்வுடன் வெளியீடு செய்யப்பட்டுவிட்டது. இதனால் இது எத்தகைய மோட்டார்சைக்கிளாக இருக்கும் என்பதை யூகிக்கவே முடியவில்லை. இதற்கான பதில்கள் வருகிற ஜனவரி 26ஆம் தேதிதான் தெரிய வரும். ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் என்ன சர்ப்ரைஸை வைத்துள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles

English summary
2022 Harley-Davidson Pan America 1250 Unveiled With Updates.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X