Just In
- 8 hrs ago
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- 9 hrs ago
மாருதியின் இந்த 3 தயாரிப்புகளுக்குதான் இந்தியாவில் டிமாண்ட் மிக மிக அதிகம்... வேற லெவல்ல விற்பனையாகியிருக்கு!
- 20 hrs ago
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- 23 hrs ago
நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!
Don't Miss!
- Finance
யாரும் டீ குடிக்காதீங்க.. நாட்டைக் காப்பாத்துங்க.. பாகிஸ்தான் அரசின் கோரிக்கை..!
- News
பெண்ணை கட்டிப்போட்டுவிட்டு.. கொத்தனாரின் உச்சக்கட்ட வெறித்தனம்.. மிரண்டுபோன விருதாச்சலம்
- Sports
ரஞ்சி கோப்பையில் புதிய வரலாறு.. 41 முறை சாம்பியன் மும்பை தோல்வி.. 23 ஆண்டுகள் ம.பி அணியின் கனவு கதை
- Movies
400 கோடி கிளப்பில் விக்ரம்...நான்ஸ்டாப் வசூல் வேட்டை..அடிச்சு தூக்கும் லோகி – கமல் காம்போ
- Technology
ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?
- Lifestyle
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இனி எல்லார் வீட்டுலையும் புகாட்டி வாகனம் இருக்கும்! மிக மிக குறைவான விலை கொண்ட புகாட்டி இ-வாகனம் அறிமுகம்!
பிரபல ஆடம்பர வாகன உற்பத்தி நிறுவனமான புகாட்டி(Bugatti) மலிவு விலையில் ஓர் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அனைவராலும் வாங்கிவிட முடியாது அளவிலான, மிக மிக அதிக விலையிலேயே புகாட்டி நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்கப்பட்டு வருகின்றன. அதாவது, நிறுவனத்தின் தயாரிப்புகள் பெரும்பாலானவை பல கோடிகளை விலையாகக் கொண்டவையாக இருக்கின்றன. எனவேதான் மில்லியனர்கள் வீடுகளில் மட்டுமே இந்நிறுவனத்தின் கார்கள் காட்சியளிக்கின்றன.

இந்த நிலையை மாற்றும் வகையில் புகாட்டி நிறுவனம் புதிய வாகனத்தை உருவாக்கியிருக்கின்றது. ஆமாங்க, அனைவராலும் வாங்கக் கூடிய பட்ஜெட் விலையில் ஓர் வாகனத்தை புகாட்டி நிறுவனம் உருவாக்கி அதனை தற்போது வெளியீடும் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு சக்கரங்களில் மட்டுமே இயங்கக் கூடிய ஸ்கேட்டர் ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே அது குறைவான விலையில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் வாகனத்திற்கு புகாட்டி நிறுவனம் அறிமுக விலையாக 919.99 அமெரிக்க டாலர்களை விலையாக நிர்ணயித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக இதன் மதிப்பு ரூ. 71,830 ஆகும். இத்தகைய குறைவான விலையிலேயே புகாட்டியின் புதுமுக எலெக்ட்ரிக் வாகனம் விற்பனக்கு வந்திருக்கின்றது.

ஆகையால், புகாட்டியின் இந்த தயாரிப்பு அனைவரின் வீடுகளிலும் காட்சியளிக்கும் என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. இந்த வாகனம் காஸ்ட்கோ எனும் தளத்தின் வாயிலாக விற்பனைக்குக் கிடைக்கும் என்றும், மேலே பார்த்த விலை ஷிப்பிங் மற்றும் ஹேண்ட்லிங் ஆகியவற்றை உள்ளடக்கியது என்றும் புகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கவர்ச்சிகரமான ஸ்டைலில் உருவாக்கப்பட்டிருக்கம் அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பன்முக நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். கருப்பு, அகிலே ப்ளூ மற்றும் சில்வர் ஆகிய நிற தேர்வுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும் புகாட்டி தெரிவித்துள்ளது. இந்த வாகனத்தின் ஒட்டுமொத்த எடையே 16 கிலோ மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதனை மடித்து வைத்துக் கொள்ளவும் முடியும். அதாவது தேவைப்படாத நேரங்களில் நோட்-புக்கை மடித்து வைத்துக் கொள்வதால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் மடித்து ஒரு ஓரத்தில் வைத்துக் கொள்ள முடியும். புகாட்டி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் வாகனத்தை மக்னீசியம் ஃப்ரேமால் உருவாக்கியிருக்கின்றது.

ஆகையால், அதிக உறுதியானதாக புகாட்டியின் இந்த மின்சார வாகனம் இருக்கும் என்பது தெரிகின்றது. மேலும், இதில் அதிகபட்சமாக 109 கிலோ எடையுள்ளவர்களாலும் பயணிக்க முடியும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால், கொழுகொழுவென இருப்பவர்களாலும் புகாட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிக தாரளமாக பயணிக்க முடியும்.

இந்த அதிக எடையை தாங்கும் வகையில் ஃபிளாட் டயர்கள் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி பன்முக சிறப்பு வசதிகளை தாங்கிய வாகனமாக இந்த எலெக்ட்ரிக் வாகனம் காட்சியளிக்கின்றது. இந்த வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கும் அனைத்து லைட்டுகளும் எல்இடி தரத்திலானவை என கூறப்படுகின்றது. ஹெட்லைட், டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் பின் பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்தும் எல்இடி லைட்டுகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஸ்டாப் லைட், தரையில் புகாட்டி என்ற சின்னத்தை காண்பிக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 29.7 கிமீ ஆகும். இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 40 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இதுமாதிரியான சூப்பரான வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே குறைவான விலையில் உலக நாடுகள் சிலவற்றில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, புகாட்டி. இந்த வாகனம் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்குமா என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனி நபர் பயணிக்கக் கூடிய இதுமாதிரியான வாகனங்களுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எனவேதான் அவர்களைக் குறி வைக்கும் வகையில் புகாட்டி நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பிரத்யேகமாக அந்தந்த சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.
-
மாருதி ஆல்டோ புதிய அவதாரத்தில் விற்பனைக்கு வரப்போகுது... அது மட்டுமா? இன்னும் நிறைய இருக்கு!
-
எந்த அளவிற்கு பாதுகாப்பான கார் கியா கேரன்ஸ்? உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனை முடிவுகள் வெளியீடு!!
-
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ விபத்து சம்பவம், ப்யூர் இவி, பூம் மோட்டார்ஸ் -ஐ தொடர்ந்து ஓலாவிற்கு அரசு நோட்டீஸ்!