போனவருஷம் அதிகமா விற்பனையான எலெக்ட்ரிக் டூ-வீலர் எது தெரியுமா? எந்த ஆண்டிலும் இல்லாத அளவில் விற்பனையாயிருக்கு!

போன வருஷம் அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த பதிவில் அதிகம் விற்பனை ஆகிய ஐந்து மின்சார இருசக்கர வாகனங்கள் பற்றிய தகவலையே தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

போன வருஷம் அதிகமா விற்பனையான எலெக்ட்ரிக் டூ-வீலர் எது தெரியுமா? எந்த வருஷத்திலும் இல்லாத அளவு விற்பனையாயிருக்கு!

கடந்த எந்தவொரு வருடத்திலும் இல்லாத அளவில் 2021ம் ஆண்டில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் மிக அதிகளவில் விற்பனையாகி இருக்கின்றன. தற்போது வெளியாகி இருக்கும் புள்ளி விபரங்களின்படி, 2021ம் ஆண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை 132 சதவீதம் உயர்ந்து இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

போன வருஷம் அதிகமா விற்பனையான எலெக்ட்ரிக் டூ-வீலர் எது தெரியுமா? எந்த வருஷத்திலும் இல்லாத அளவு விற்பனையாயிருக்கு!

இது இருசக்கர எலெக்ட்ரிக் வாகனத்தின் விற்பனை விபரம் ஆகும். இது மாதிரியான அமோக விற்பனையினாலேயே தற்போது சாலையில் மின் வாகனங்கள் மிக அதிகளவில் தென்பட தொடங்கியிருக்கின்றன. மேலும், மக்கள் மத்தியில் மின் வாகனங்கள் மீது நம்பிக்கை அதிகரித்திருப்பதையும் இது உணர்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆம், முன்பு அரிதினும் அரிதாக தென்பட்ட மின் வாகனங்கள் தற்போது மிக அதிகளவில் தென்பட தொடங்கி இருக்கின்றன. 2021ம் ஆம் ஆண்டில் நாட்டில் ஒட்டுமொத்தமாக 2,33,971 யூனிட் மின்சார டூ-வீலர்கள் விற்பனையாகி இருக்கின்றன.

போன வருஷம் அதிகமா விற்பனையான எலெக்ட்ரிக் டூ-வீலர் எது தெரியுமா? எந்த வருஷத்திலும் இல்லாத அளவு விற்பனையாயிருக்கு!

முந்தைய ஆண்டான 2020ம் ஆண்டில் 1,00,736 இ-இருசக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. இதனுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 2021ம் ஆண்டு மின் வாகனங்களுக்கு மிக சிறந்த வருடமாக அமைந்திருப்பது தெரிய வருகின்றது. இதில், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கே மிக அதிக அளவில் மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்திருக்கின்றது. 2021ம் ஆண்டின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகள் மட்டும் 46,214 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன.

போன வருஷம் அதிகமா விற்பனையான எலெக்ட்ரிக் டூ-வீலர் எது தெரியுமா? எந்த வருஷத்திலும் இல்லாத அளவு விற்பனையாயிருக்கு!

இது, ஒட்டுமொத்த விற்பனையில் 34 சதவீதம் ஆகும். இது இந்திய மின் வாகன சந்தையில் மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகின்றது. இந்த நிலையால், நாட்டின் மின் வாகன சந்தையின் தலைவனாக ஹீரோ எலெக்ட்ரிக் மாறியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை ஒகினவா நிறுவனம் பிடித்திருக்கின்றது.

போன வருஷம் அதிகமா விற்பனையான எலெக்ட்ரிக் டூ-வீலர் எது தெரியுமா? எந்த வருஷத்திலும் இல்லாத அளவு விற்பனையாயிருக்கு!

இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் 2021ம் ஆண்டில் 29,868 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. இந்நிறுவனம், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கடுமையான போட்டியை வழங்கும் வகையில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே தற்போதைய விற்பனை நிலவரம் பற்றிய தகவல் அமைந்திருக்கின்றது.

போன வருஷம் அதிகமா விற்பனையான எலெக்ட்ரிக் டூ-வீலர் எது தெரியுமா? எந்த வருஷத்திலும் இல்லாத அளவு விற்பனையாயிருக்கு!

கடந்த ஆண்டில் மிக நெருக்கமான விற்பனையை ஒகினவா பெற்றிருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஏ்தர் எனர்ஜி நிறுவனம் இருக்கின்றது. இந்நிறுவனம், கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 15,836 யூனிட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்து மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

போன வருஷம் அதிகமா விற்பனையான எலெக்ட்ரிக் டூ-வீலர் எது தெரியுமா? எந்த வருஷத்திலும் இல்லாத அளவு விற்பனையாயிருக்கு!

ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதனை நிறுவனம் மிக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆகையால், வரும் காலத்தில் இதை விட பல மடங்கு விற்பனை எண்ணிக்கையை எதிர்காலத்தில் ஏத்தர் பெறும் என நம்பப்படுகின்றது.

போன வருஷம் அதிகமா விற்பனையான எலெக்ட்ரிக் டூ-வீலர் எது தெரியுமா? எந்த வருஷத்திலும் இல்லாத அளவு விற்பனையாயிருக்கு!

நான்காவது இடத்தில் ஆம்பியர் நிறுவனம் இருக்கின்றது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் 2021ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 12,417 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன. இது சற்றே குறைவானதாக தென்பட்டாலும் கடந்த ஆண்டில் நிறுவனம் விற்பனைச் செய்த எண்ணிக்கையைவிட இது பல மடங்கும் அதிகம் ஆகும்.

போன வருஷம் அதிகமா விற்பனையான எலெக்ட்ரிக் டூ-வீலர் எது தெரியுமா? எந்த வருஷத்திலும் இல்லாத அளவு விற்பனையாயிருக்கு!

ஆம்பியர் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக 10,946 யூனிட் மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்து ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது, ப்யூர் இவி. இந்நிறுவனத்தின் விற்பனையும் உங்களுக்கு சற்றே குறைவானதாக தெரியலாம். ஆனால், அது முந்தைய காலங்களைக் காட்டிலும் சற்றே அதிகம் ஆகும்.

போன வருஷம் அதிகமா விற்பனையான எலெக்ட்ரிக் டூ-வீலர் எது தெரியுமா? எந்த வருஷத்திலும் இல்லாத அளவு விற்பனையாயிருக்கு!

இதற்கு அடுத்தபடியாக எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் டிவிஎஸ், பஜாஜ், ரிவோல்ட், பென்லிங் இந்தியா மற்றும் ஜிதேந்திரா நியூ இவி ஆகிய நிறுவனங்கள் இடம் பிடித்திருக்கின்றன. இதில், டிவிஎஸ் மற்றும் பஜாஜ் முதல் ஐந்து இடங்களில் இடம் பிடிக்காதது நிறுவனத்திற்கு மட்டுமல்ல அந்நிறுவனத்தின் தயாரிப்புகளை விரும்புவோர்க்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கின்றது.

Most Read Articles

English summary
Here is top selling electric two wheeler brands in 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X