ஹீரோ நிறுவனத்துக்கு இவ்ளோ பெரிய மனசா! திடீர்னு புகழ்ந்து தள்ளும் வாடிக்கையாளர்கள்... ஏன் தெரியுமா?

ஹீரோ டூவீலர் நிறுவனத்திற்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உலகின் மிகப்பெரிய டூவீலர் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பைக்குகளும், ஸ்கூட்டர்களும் இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளின் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக இருக்கின்றன.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது வாகனங்களை தரமாக உற்பத்தி செய்வதுதான் இதற்கு காரணம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பல்வேறு நல்ல காரியங்களையும் செய்து வருகிறது. இந்த வரிசையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது செய்துள்ள நல்ல காரியம் ஒன்று, பாராட்டுக்களை குவித்து வருகிறது.

ஹீரோ நிறுவனத்துக்கு இவ்ளோ பெரிய மனசா! திடீர்னு புகழ்ந்து தள்ளும் வாடிக்கையாளர்கள்... ஏன் தெரியுமா?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹரியானா மாநிலம் குருகிராம் நகர காவல் துறைக்கு தற்போது 50 பைக்குகள் மற்றும் 10 ஸ்கூட்டர்கள் என ஒட்டுமொத்தமாக 60 டூவீலர்களை பரிசாக வழங்கியுள்ளது. இந்த 60 டூவீலர்களும், குருகிராம் போலீஸ் கமிஷனர் கலா ராமச்சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. குருகிராம் காவல் துறையினர் ரோந்து செல்வதற்கு இந்த இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தவுள்ளனர்.

இதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு மேம்படும். குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு அதிகரிக்கும் என போலீஸ் கமிஷனர் கலா ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் டூவீலர்களை வழங்கி உதவி செய்துள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு அவர் நன்றியும் தெரிவித்து கொண்டுள்ளார். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமூக சேவைகளில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல.

கடந்த காலங்களில் பல முறை இதுபோன்ற நல்ல காரியங்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் செய்துள்ளது. குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று பிரச்னை தீவிரமாக இருந்த சமயத்தில், பைக் ஆம்புலன்ஸ்களை நன்கொடையாக வழங்கி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமூக தொண்டாற்றியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடப்பாண்டு அக்டோபர் மாதம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) 4,54,582 டூவீலர்களை விற்பனை செய்துள்ளது. இதில், 4,42,825 டூவீலர்கள் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். எஞ்சிய 11,757 டூவீலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஒட்டுமொத்த டூவீலர் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. ஏனெனில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 5,47,970 டூவீலர்களை விற்பனை செய்திருந்தது. இதில், 5,27,779 டூவீலர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். எஞ்சிய 20,191 டூவீலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டவை.

ஆனால் வரும் மாதங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன டூவீலர்களின் இந்திய விற்பனை மற்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முயற்சிகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Hero donates 60 two wheelers to police
Story first published: Tuesday, November 8, 2022, 17:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X