மோதி பாத்திருவோம்! ஹார்லியுடன் கை கோர்த்த ஹீரோ... 2 பேரும் சேந்து ராயல் என்பீல்டுக்கு செக் வைக்க போறாங்க!

ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பிரிமியம் செக்மெண்டில் பைக்குகளை விற்பனைக்குக் கொண்டுவரவுள்ளது. இந்த பைக்குகள் இன்னும் 2 ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஹீரோ நிறுவனம் சிறிய ரக பைக்குகளை தயாரித்து விற்பனை செய்வதில் முக்கியமாக நிறுவனம். 100-110 சிசி செக்மெண்டில் அதிகமாக பைக்குகளை விற்பனை செய்யும் நிறுவனம் இது தான். இந்நிறுவனம் ஸ்பிளெண்டர் உள்ளிட்ட பைக்குகள் மக்கள் மத்தியில் பிரபலமானதாக இருக்கிறது. 160 சிசி செக்மெண்டிலும் களம் இறங்கி ஒரு கலக்கு கலக்க திட்டமிட்டு வருகிறது.

மோதி பாத்திருவோம்! ஹார்லியுடன் கை கோர்த்த ஹீரோ... 2 பேரும் சேந்து ராயல் என்பீல்டுக்கு செக் வைக்க போறாங்க!

இது எல்லாம் ஒருபுறம் இருக்க பிரிமியம் செக்மெண்ட் மீது ஹீரோ நிறுவனத்திற்கு ஒரு கண் இருக்கிறது. இந்த செக்மெண்டில் பெரிய புரட்சியைச் செய்ய வேண்டும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.ஆனால் ஹீரோ என்ற தனி நிறுவனத்தால் இதைச் செய்ய முடியவில்லை. அந்நிறுவனம் அந்நிறுவனத்திற்கு இருக்கும் குறைந்த பட்ஜெட் பைக்குகளை தயாரிக்கும் நிறுவனம் என்ற இமேஜ் இதற்கு பெரும் தலைவலியாக இருக்கிறது.

இதற்குத் தீர்வு காணும் வகையில் ஹீரோ நிறுவனம் தற்போது ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் இணைந்து பிரிமியம் செக்மெண்ட் பைக்குகளை தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிரிமியம் செக்மெண்டில் பைக்குகளை களம் இறக்கத் தயாராக இருக்கிறது.

கடந்த 2020ம் ஆண்டு ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த பின்பு அந்நிறுவனத்துடன் ஹீரோ கை கோர்த்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஹார்லியின் பெயரை பயன்படுத்தி ஹீரோ நிறுவனம் தனது பிரிமியம் செக்மெண்ட் கனவை நினைவாக்க முயற்சி செய்கிறது. இதன் மூலம் ஹார்லி டேவிட்சன் நிறுவனங்களுக்குத் தனது சர்வீஸ் சென்டர்களை வழங்கவும் முடிவு செய்துள்ளது. இது ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு இந்திய வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க நல்ல வாய்ப்பாக அமையும் என அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி ஹார்லி டேவிட்சன் பெயரில் ஹீரோ நிறுவனம் பிரிமியம் செக்மெண்ட் பைக்குகளை விற்பனை செய்யும். இந்த பைக்குகளை தயாரிப்பதற்கான சில உதிரிப் பாகங்களையும் ஹீரோ நிறுவனமே வழங்குகிறது. மற்ற உதிரி பாகங்கள் எல்லாம் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்பட்டு இந்தியாவில் ஹீரோவின் ஆலையில் கட்டமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனைக்கு பிறகான சர்வீஸையும் ஹீரோ நிறுவனமே வழங்கவுள்ளது. இது போக ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஒரிஜினல் உதிரிப்பாகங்களை எல்லாம் விற்பனை செய்யும் உரிமையையும் ஹீரோ நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது ஹார்லி டேவிட்சன் பைக் வைத்திருப்பார்களுக்கு உதிரிப்பாகங்கள் தேவை என்றால் அவர்கள் அணுக வேண்டிய இடம் ஹீரோ நிறுவனம் தான்.

விரைவில் நீங்கள் ஹீரோ நிறுவனத்தின் ஷோரூம்களில் ஹார்லி டேவிட்சன் பைக்குகளையும் காண முடியும். இந்த பைக்குகள் எல்லாம் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிமியம் செக்மெண்டில் ஹீரோ அடி எடுத்து வைத்தால் நீங்கள் அந்த பைக்கை வாங்குவீர்களா? உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
Hero Harley Co Devolped bike may launch in india by 2024
Story first published: Tuesday, November 29, 2022, 19:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X