ஹீரோ லெக்ட்ரோ எலெக்ட்ரிக் சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம்... நாம வாங்குற விலையில் விற்பனைக்கு வந்திருக்கா?

3 புதிய ஹீரோ லெக்ட்ரோ எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹீரோ லெக்ட்ரோ எலெக்ட்ரிக் சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம்... நாம வாங்குற விலையில் விற்பனைக்கு வந்திருக்கா?

பிரபல சைக்கிள் உற்பத்தி நிறுவனமான ஹீரோ லெக்ட்ரோ (Hero Lectro) மூன்று புதுமுக எலெக்ட்ரிக் சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. சி1 (C1), சி5எக்ஸ் (C5X) மற்றும் எஃப்1 (F1) ஆகிய எலெக்ட்ரிக் சைக்கிள் மாடல்களையே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சி மற்றும் எஃப் சீரிஸின் தேர்வுகளை விரிவாக்கும் செய்யும் வகையிலேயே இவற்றை ஹீரோ லெக்ட்ரோ அறிமுகம் செய்திருக்கின்றது.

ஹீரோ லெக்ட்ரோ எலெக்ட்ரிக் சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம்... நாம வாங்குற விலையில் விற்பனைக்கு வந்திருக்கா?

விலை:

அறிமுகமாக சி1 மாடலுக்கு ரூ. 32,999-ம், எஃப்1 மாடலுக்கு ரூ. 38,999-ம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சி5எக்ஸ் மாடலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என தெரிகின்றது.

ஹீரோ லெக்ட்ரோ எலெக்ட்ரிக் சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம்... நாம வாங்குற விலையில் விற்பனைக்கு வந்திருக்கா?

புதிய இ-சைக்கிள்களின் சிறப்பு வசதிகள்:

ஹீரோ லெக்ட்ரோ நிறுவனம் இந்த சைக்கிள்களை இந்தியாவின் அனைத்து விதமான நில பரப்புகளிலும் இயங்கும் வகையில் வடிவமைத்திருக்கின்றது. குறிப்பாக, கரடு-முரடான சாலைகளில்கூட மிக சிறந்த திறன் வெளிப்பாட்டை இந்த புதுமுக இ-சைக்கிள்கள் அனைத்தும் வெளிப்படுத்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல் நகர்புற பகுதிகளிலும் மிக சிறந்த பயன்பாட்டு அனுபவத்தை வழங்கும் என கூறப்படுகின்றது.

ஹீரோ லெக்ட்ரோ எலெக்ட்ரிக் சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம்... நாம வாங்குற விலையில் விற்பனைக்கு வந்திருக்கா?

இதற்கேற்பவே இருசக்கர வாகனத்தை நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. இ-சைக்கிள்களின் உருவாக்கத்தில் அலுமினியம் 6061 அலாய் ஃப்ரேமே பயன்படுத்தியிருக்கின்றது. இந்த ஃப்ரேம் அதிக உறுதியானது மட்டுமில்லைங்க, அரிப்பை எதிர்க்கும் திறன் கொண்டதும்கூட. ஆகையால், நீண்ட காலம் ஆகினாலும் இந்த இ-சைக்கிள்கள் துருப்பிடிக்காது என தெரிகின்றது.

ஹீரோ லெக்ட்ரோ எலெக்ட்ரிக் சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம்... நாம வாங்குற விலையில் விற்பனைக்கு வந்திருக்கா?

இதுமட்டுமல்ல இன்னும் பல்வேறு சிறப்புகளுடன் இந்த இ-சைக்கிள்களை ஹீரோ லெக்ட்ரோ விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அந்தவகையில், ஆன்டி ஸ்கிட் அலாய் பெடல்கள், ஏரோடைனமிக்ஸ் ஃபோர்க்குகள், டூயல் வால் அலாய் ரிம்கள், ஆர்எஃப்ஐடி கீ லாக்கிங் வசதி மற்றும் எல்இடி லைட்டுகள் உள்ளிட்ட அம்சங்கள் இந்த சைக்கிள்களில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஹீரோ லெக்ட்ரோ எலெக்ட்ரிக் சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம்... நாம வாங்குற விலையில் விற்பனைக்கு வந்திருக்கா?

இதில், ரிம்மை மட்டும் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப வெவ்வேறு விதமான அளவுகளில் வழங்க இருப்பதாக ஹீரோ லெக்ட்ரோ அறிவித்துள்ளது. மேலும், இந்த சைக்கிள்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எல்இடி லைட் ஐபி67 மற்றும் ஐபி65 தரசான்று பெற்றவையாக இருக்கின்றது. அதாவது, டஸ்ட் மற்றும் மழை நீரால் இவை பாதிக்காது.

ஹீரோ லெக்ட்ரோ எலெக்ட்ரிக் சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம்... நாம வாங்குற விலையில் விற்பனைக்கு வந்திருக்கா?

32,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்திருக்கும் ஹீரோ லெக்ட்ரோ சி1 எலெக்ட்ரிக் சைக்கிளை மூன்று விதமான நிற தேர்வுகளில் வாடிக்கையாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும். இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 30 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். IP67 5.8 Ah லித்தியம் அயன் பேட்டரி பேக், 250 வாட் மின் மோட்டாரே இந்த சைக்கிள் மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ வேகம் ஆகும்.

ஹீரோ லெக்ட்ரோ எலெக்ட்ரிக் சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம்... நாம வாங்குற விலையில் விற்பனைக்கு வந்திருக்கா?

ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரங்கள் தொடங்கி 4 மணி நேரங்கள் வரை இந்த இ-சைக்கிள் எடுத்துக் கொள்ளும். இத்துடன், ரைடை டிராக் செய்யும் வசதி மற்றும் பைக் கன்ட்ரோல் அம்சமும் உள்ளிட்டவற்றையும் இதில் ஹீரோ லெக்ட்ரோ வழங்கியிருக்கின்றது. முன் மற்றும் பின் வீலில் டிஸ்க் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஹீரோ லெக்ட்ரோ எலெக்ட்ரிக் சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம்... நாம வாங்குற விலையில் விற்பனைக்கு வந்திருக்கா?

இதே அம்சங்களை தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் ஹீரோ லெக்ட்ரோ எஃப்1 இ-சைக்கிளும் பெற்றிருக்கின்றது. ஆனால், உருவத்தில் மட்டும் இவையிரண்டும் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக வித்தியாசமான உருவம் கொண்ட ஃப்ரேமில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், கியர் பாக்ஸும் இதில் வித்தியாசமானதாகக் காணப்படுகின்றது.

ஹீரோ லெக்ட்ரோ எலெக்ட்ரிக் சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம்... நாம வாங்குற விலையில் விற்பனைக்கு வந்திருக்கா?

எஃப்1 மாடலில் 7எஸ் ஃப்ரீவீல் டைப் கியரே வழங்கப்பட்டுள்ளது. அதேவேலையில், சி1 மாடலில் சிங்கிள் ஸ்பீடு, 16டி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற மிக கணிசமான மாற்றங்களையே இந்த இ-சைக்கிள்கள் கொண்டிருக்கின்றன. அதேவேலையில், சஸ்பென்ஷன் செட்-அப் சி1 இ-சைக்கிளில் வழங்கப்படவில்லை.

ஹீரோ லெக்ட்ரோ எலெக்ட்ரிக் சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம்... நாம வாங்குற விலையில் விற்பனைக்கு வந்திருக்கா?

ஆனால், எஃப்1 மாடலில் 80 மிமீ டிராவல் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று சற்று கூடுதலான சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே எஃப்1 மாடலின் விலை சற்று அதிகமாக உள்ளது. இவற்றுடன், மூன்றாவதாக அறிமுகமாக இருக்கும் சி5எக்ஸ் மாடலின் விலை மற்றும் அம்சங்கள் பற்றிய விபரங்கள் தெரியவரவில்லை. விரைவில் அதுகுறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Hero lectro launches new variants of its C and f series lineup
Story first published: Thursday, September 22, 2022, 15:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X