தொழில்நுட்ப வசதிகளை வாரி வழங்கியிருக்காங்க... மிக குறைவான விலையில் ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் பைக் அறிமுகம்!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் மிக அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பேஷன் எக்ஸ்டெக் (Passion XTec) பைக்கை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

தொழில்நுட்ப வசதிகளை வாரி வழங்கியிருக்காங்க... மிக குறைவான விலையில் ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் பைக் அறிமுகம்!

வெகுவிரைவில் இந்திய சந்தையில் விற்பனைச் செய்து வரும் அனைத்து பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையையும் உயர்த்த இருப்பதாக நேற்றைய தினம் (ஜூன் 23) ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. எனவே, நிறுவனம் வாகனங்களின் விலையை உயர்த்தும் பணியில் ஹீரோ மிக பிசியாக இருக்கும் என எண்ணிக் கொண்டிருந்த வேலையில், அது வேறொரு பணியிலும் மிக தீவிரமாக ஈடுபட்டு வந்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது.

தொழில்நுட்ப வசதிகளை வாரி வழங்கியிருக்காங்க... மிக குறைவான விலையில் ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் பைக் அறிமுகம்!

அதாவது, புதுமுக வாகனங்களை இந்தியாவில் களமிறக்கும் பணியிலும் நிறுவனம் மும்மரமாக ஈடுபட்டு வந்திருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய சந்தையில் இன்று (ஜூன் 24) அதிக சிறப்பு வசதிகள் அடங்கிய பேஷன் எக்ஸ்டெக் (Passion XTec) பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப வசதிகளை வாரி வழங்கியிருக்காங்க... மிக குறைவான விலையில் ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் பைக் அறிமுகம்!

இரு விதமான வேரிண்டுகளில் புதிய பேஷன் எக்ஸ்டெக் பைக் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். டிரம் பிரேக் (drum variant) மற்றும் டிஸ்க் பிரேக் (disc variant) என்ற இரு தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதில் டிரம் பிரேக் வேரியண்டிற்கு ரூ. 74,590 என்ற விலையும், டிஸ்க் பிரேக் வேரியண்டிற்கு ரூ. 78,990 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வசதிகளை வாரி வழங்கியிருக்காங்க... மிக குறைவான விலையில் ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் பைக் அறிமுகம்!

இரண்டும் வரிகள் சேர்க்கப்படாத நிலையில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை விபரம் ஆகும். எக்ஸ்டெக் வெர்ஷனில் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து ஹீரோ வாகனங்களுக்கும் நாட்டில் தற்போது மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதைக் காரணம் காட்டியே பேஷன் மாடலிலும் இந்த 'எக்ஸ்டெக்' தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வசதிகளை வாரி வழங்கியிருக்காங்க... மிக குறைவான விலையில் ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் பைக் அறிமுகம்!

எக்ஸ்டெக் பிரிவில் ஹீரோ நிறுவனம் ஏற்கனவே நான்கு இருசக்கர வாகன மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஸ்பிளென்டர் பிளஸ் எக்ஸ்டெக் (Splendor+ XTec), கிளாமர் 125 எக்ஸ்டெக் (Glamour 125 XTec), பிளஷ்ஷர் பிளஸ் 110 எக்ஸ்டெக் (Pleasure+ 110 XTec) மற்றும் டெஸ்டினி 125 எக்ஸ்டெக் (Destini 125 XTec) ஆகியவையே அவை ஆகும்.

தொழில்நுட்ப வசதிகளை வாரி வழங்கியிருக்காங்க... மிக குறைவான விலையில் ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் பைக் அறிமுகம்!

இவற்றின் வரிசையிலேயே புதிதாக பேஷன் எக்ஸ்டெக் இணைக்கப்பட்டுள்ளது. மேலே கண்ட மாடல்களுக்கு மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றிற்கு கிடைத்து வருவதைப் போலவே பேஷன் எக்ஸ்டெக்கிற்கும் சூப்பரான டிமாண்ட் கிடைக்கும் என ஹீரோ மோட்டோகார்ப் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப வசதிகளை வாரி வழங்கியிருக்காங்க... மிக குறைவான விலையில் ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் பைக் அறிமுகம்!

புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் அதிக ஸ்டைல், அதிக பாதுகாப்பு, இணைப்பு வசதி மற்றும் மிக சிறந்த கம்ஃபோர்ட் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வாகனமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் முதல் முறையாக புரெஜெக்டர் ரக எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட முழு டிஜிட்ட்ல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் கொடுக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வசதிகளை வாரி வழங்கியிருக்காங்க... மிக குறைவான விலையில் ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் பைக் அறிமுகம்!

இந்த கருவியின் வாயிலாக செல்போனுக்கு வரும் அழைப்பு, குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றை அறிந்துக் கொள்ள முடியும். இதுமட்டுமின்றி, ரியல் டைம் மைலேஜ் விபரம், லோ-ஃப்யூவல் இன்டிகேட்டர், சர்வீஸ் ரிமைண்டர் மற்றும் சைடு ஸ்டாண்டு இன்டிகேட்டர் உள்ளிட்ட தகவல்களையும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் வாயிலாக அறிந்துக் கொள்ள முடியும்.

தொழில்நுட்ப வசதிகளை வாரி வழங்கியிருக்காங்க... மிக குறைவான விலையில் ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் பைக் அறிமுகம்!

மேலே பார்த்த அம்சங்களில் பெரும்பாலானவற்றை இப்போதே பேஷன் பைக் முதல்முறையாக பெருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்பைக்கில் பாதுகாப்பான ரைடிங் அனுபவத்திற்காக ஏற்கனவே கூறியதைப் போல் டிஸ்க் பிரேக் தேர்வு வழங்கப்படுகின்றது. இத்துடன், சிபிஎஸ் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வசதிகளை வாரி வழங்கியிருக்காங்க... மிக குறைவான விலையில் ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் பைக் அறிமுகம்!

எஞ்ஜினைப் பொருத்தவரை இருசக்கர வாகனத்தில் 110 சிசி பிஎஸ்-6 தர மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 9 பிஎச்பி பவரை 7,500 ஆர்பிஎம்மிலும், 9.79 என்எம் டார்க்கை 5,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். மிக சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த பைக்கில் ஐ3எஸ் தொழில்நுட்பத்தையும் ஹீரோ மோட்டோகார்ப் வழங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: முதல் மூன்று படங்களை மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்ட பேஷன் ப்ரோ மாடலின் படங்கள் ஆகும்.

Most Read Articles
English summary
Hero motocorp introduced the new passion xtec
Story first published: Friday, June 24, 2022, 18:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X