வேட்டியை வரிந்து கட்டிய ஹீரோ! நாடே தவம் கிடந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி தொடக்கம்! இவ்ளோ வசதிகள் இருக்கா

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள டூவீலர் நிறுவனங்களில் ஒன்று ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp). இந்நிறுவனம் விடா (Vida) என்ற புதிய பிராண்டை உருவாக்கியுள்ளது. இந்த விடா பிராண்டின் கீழ்தான், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்யவுள்ளது.

விடா பிராண்டின் கீழ் கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விடா வி1 (Vida V1) என்ற பெயரில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. பெங்களூரை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், முதல் விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவரி பெற்றுள்ளார்.

வேட்டியை வரிந்து கட்டிய ஹீரோ! நாடே தவம் கிடந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி தொடக்கம்! இவ்ளோ வசதிகள் இருக்கா

விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை, 2,499 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்திய சந்தையில் வி1 ப்ளஸ் (V1 Plus) மற்றும் வி1 ப்ரோ (V1 Pro) என 2 வேரியண்ட்களில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும். இதில், வி1 ப்ளஸ் வேரியண்ட்டின் விலை (Price) 1.45 லட்ச ரூபாய் ஆகும். அதே நேரத்தில் வி1 ப்ரோ வேரியண்ட்டின் விலை 1.59 லட்ச ரூபாய் ஆகும். இவை இரண்டுமே பெங்களூர் எக்ஸ் ஷோரூம் விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மாநில அரசுகள் வழங்கும் மானியங்களை பொறுத்து, விலை மாறுபடும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, அவற்றை வாங்குபவர்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் வழங்கி வரும் மானியங்களை பொறுத்து, இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் இதைக்காட்டிலும் குறைவான விலையிலேயே விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க முடியும்.

விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ப்ளஸ் வேரியண்ட்டில் 3.44 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ப்ரோ வேரியண்ட்டில் 3.94 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் ட்யூயல் பேட்டரி ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. அவை இந்த 2 வேரியண்ட்களுக்கும் முறையே 1.72 kWh மற்றும் 1.97 kWh ஆகும். இதில், விடா வி1 ப்ளஸ் வேரியண்ட்டின் ரேஞ்ச் (Range) 143 கிலோ மீட்டர்கள் எனவும், வி1 ப்ரோ வேரியண்ட்டின் ரேஞ்ச் 165 கிலோ மீட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்டுவதற்கு விடா வி1 ப்ளஸ் வேரியண்ட் 3.4 வினாடிகளை எடுத்து கொள்ளும். ஆனால் விடா வி1 ப்ரோ வேரியண்ட் இதை 3.2 வினாடிகளில் செய்து விடும். அதே நேரத்தில் இந்த 2 வேரியண்ட்களுக்கும் பொதுவாக நிறைய வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன. இதில், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், ஓடிஏ சப்போர்ட் உடன் 7 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே, ப்ளூடூத், வை-ஃபை, ஜியோ ஃபென்சிங், ட்ராக் மை பைக், க்ரூஸ் கண்ட்ரோல், எஸ்ஓஎஸ் வார்னிங், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பியுள்ளதால், விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric), ஏத்தர் (Ather), பஜாஜ் (Bajaj) மற்றும் டிவிஎஸ் (TVS) போன்ற பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. இந்த வரிசையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா பிராண்டின் மூலம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை தொடங்கியுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து கொண்டே செல்வதால், யமஹா (Yamaha) மற்றும் ஹோண்டா (Honda) ஆகிய நிறுவனங்களும் வெகு விரைவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஹோண்டா நிறுவனமானது, மிகவும் பிரபலமாக உள்ள ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Most Read Articles
English summary
Hero vida v1 electric scooter delivery begins in india
Story first published: Saturday, December 31, 2022, 9:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X