பிரபலமான பைக்கின் விற்பனையை நிறுத்திய ஹீரோ... இனி 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக குடுத்தாதான் வாங்க முடியும்!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம், தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து எக்ஸ்பல்ஸ் 200 2வி (Xpulse 200 2V) பைக்கை நீக்கியுள்ளது. எனவே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் இந்த பைக்கின் விற்பனையை நிறுத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதன் காரணமாக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் இனி 4வி (Hero Xpulse 200 4V) அவதாரத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படும். 2வி வெர்ஷனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்தான் 4வி. எனவே ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது, ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 2வி பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன்படி ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 2வி பைக்கின் விற்பனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

பிரபலமான பைக்கின் விற்பனையை நிறுத்திய ஹீரோ... இனி 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக குடுத்தாதான் வாங்க முடியும்!

இந்திய சந்தையில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 2வி பைக், 1.27 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது விற்பனையில் உள்ள ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் விலை 1.37 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோரூம்) உள்ளது. அதாவது எக்ஸ்பல்ஸ் 200 2வி பைக்கை காட்டிலும், 4வி மாடலின் விலை 10 ஆயிரம் ரூபாய் அதிகம்.

விற்பனையில் இருந்து விலக்கப்பட்டுள்ள ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 2வி மாடலில், 199 சிசி, சிங்கிள் சிலிண்டர், 2 வால்வு இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 17.8 பிஹெச்பி பவரையும் மற்றும் 16.45 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருந்தது. மறுபக்கம் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது, 199 சிசி, சிங்கிள் சிலிண்டர், 4 வால்வு இன்ஜின் ஆகும்.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 18.8 பிஹெச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 17.35 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. அதாவது 2வி மாடலை காட்டிலும், 4வி மாடலின் பவர் அவுட்புட் அதிகம். இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் பைக்கின் சக்தி வாய்ந்த வெர்ஷன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய வெர்ஷன் 2023ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 400 (Hero XPulse 400) பைக்கைதான் பற்றிதான் இங்கே பேசி கொண்டுள்ளோம். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இந்த புதிய பைக்கில், புத்தம் புதிய 421 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. லடாக் பகுதியில் சாலை சோதனையில் ஈடுபடுத்தப்பட்டபோது, இந்த பைக் கேமராவின் கண்களில் சிக்கியுள்ளது.

இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 40 பிஹெச்பி மற்றும் 35 என்எம் டார்க் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் தற்போது பொருத்தப்பட்டிருப்பதை காட்டிலும், புதிய வெர்ஷனில் சக்தி வாய்ந்த 421 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது. இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், கேடிஎம் 390 அட்வென்ஜர் (KTM 390 Adventure) பைக்குடன், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 400 போட்டியிடும்.

அத்துடன் இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 (Royal Enfield Himalayan 450) பைக்கிற்கும், ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கின் சக்தி வாய்ந்த வெர்ஷன் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக் வரும் 2023ம் ஆண்டின் முதல் பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Hero xpulse 200 2v discontinued full details here
Story first published: Thursday, December 15, 2022, 17:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X