ராயல் என்பீல்டின் எந்த மாடல் பைக் அதிகம் விற்பனையாகும்... புதிய தலைவன் உருவாகிட்டு இருக்கான்.. யாரு அவன்?..

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எந்த பைக் மாடல் அதிகம் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு ஹேட்டர்களே இருக்கு முடியாது என உறுதியாக 'ராயல் என்பீல்டு' நிறுவனத்தை நாம் கூறலாம். என்னதான் வீட்டில் ஒன்றுக்கு இரண்டு டூ-வீலர்கள் இருந்தாலும் பலரின் கிரஸ்ஸாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. "இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளின் ஹேட்டர்கள் நாங்கள்" என ஒரு சிலர் வெளியில் கூறிக் கொண்டாலும், அவர்களால் மனம் உகந்து அதை கூற முடியாது.

ராயல் என்பீல்டு

ஏனெனில் அந்தளவிற்கு வெறுக்க முடியாத மிக சிறப்பான இடத்திலேயே ராயல் என்பீல்டின் அனைத்து தயாரிப்புகளும் இருக்கின்றன. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளிலேயே மிக மிக சிறப்பான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் மூன்று முக்கிய மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

அதாவது, கடந்த 2022 அக்டோபர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எந்த தயாரிப்பு அதிகளவில் விற்பனையாகியிருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம். சியாம் (Society of Indian Automobile Manufacturers) வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

நிறுவனத்தின் கிளாசிக் 350, ஹண்டர் 350 மற்றும் மீட்டியோர் 350 உள்ளிட்ட இருசக்கர வாகனங்களே நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பைக் மாடல்களாக இருக்கின்றன. இவற்றில் கிளாசிக் 350-யே விற்பனையில் டாப் பிளேசில் இருக்கின்றது. அந்த பைக் மாடல் 2022 அக்டோபரில் மட்டும் 31,791 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன.

இது மிக மிக அதிக விற்பனை எண்ணிக்கையாகும். கடந்த 2021ம் ஆண்டு அக்டோபரில்கூட கிளாசிக் 350 வெறும் 19,728 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. இதைக் காட்டிலும் நடப்பாண்டு அக்டோபரில் பல மடங்கு அதிக விற்பனை எண்ணிக்கையை கிளாசிக் 350 பெற்றிருக்கின்றது. இதன் வாயிலாக இந்த பைக் மாடலுக்கு தற்போதும் இந்தியர்கள் செம்ம டிமாண்ட் நிலவிக் கொண்டிருப்பது தெளிவாக தெரிகின்றது.

இதற்கு அடுத்தபடியாக நிறுவனத்தின் ஹண்டர் 350 பைக் இருக்கின்றது. ஆமாங்க, லேட்டஸ்ட் அறிமுகமான இந்த பைக்கே நிறுவனம் இரண்டாவது அதிகம் விற்பனையாகும் பைக்காக மாறியிருக்கின்றது. இந்த பைக் மாடல் மட்டும் கடந்த அக்டோபரில் 15,445 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. அறிமுகமான சில நாட்களிலேயே இந்தியர்களின் ஃபேவரிட் பைக்குகளில் ஒன்றாக இது மாறியிருக்கின்றது.

கடந்த ஆகஸ்டு 7ம் தேதி அன்றே இந்திய இருசக்கர வாகன சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 350 பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. இதற்குள்ளாகவே இந்தியாவில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றது. இது நிறுவனத்திற்கு கூடுதல் பிளஸ்ஸாக மாறியிருக்கின்றது. இதனை நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கின்றது.

இந்த பைக்கிற்கு அடுத்தபடியாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மூன்றாவது அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிளாக மீட்டியோர் 350 இருக்கின்றது. 10,353 யூனிட்டுகள் வரை மீட்டியோர் 350 விற்பனையாகியுள்ளது. இது 2021 அக்டோபரைக் காட்டிலும் 2,500 யூனிட்டுகள் அதிகம் ஆகும். இந்த மூன்றே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ராயல் என்பீல்டு பைக் மாடல்களாகும். இந்த அனைத்து மாடல்களிலும் 350 சிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் அடுத்ததாக சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த பைக்கின் இந்திய வருகையை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் கோவாவில் நடைபெற்ற 2022 ரைடர் மேனியாவில் காட்சிப்படத்தியது. மேலும், பிரத்யேகமாக இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு மட்டும் இந்த பைக்கை புக்கிங் செய்துகொள்ளும் வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் அதிகாரப்பூர்வ வருகை ஜனவரி 2023இல் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles
English summary
Highest selling royal enfield bikes
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X