தஞ்சையில் திறக்கப்பட்டுள்ள புதிய ஷோரூம்! இங்கே இருக்கும் டூ-வீலர்களை எல்லா ஹோண்டா ஷோரூம்லையும் பாக்க முடியாது!

தஞ்சையில் மிக சூப்பரான ஷோரூம் ஒன்றை ஹோண்டா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் திறந்து வைத்துள்ளது. இந்த பிரத்யே ஷோரூமின் சிறப்புகள் பற்றியும், அங்கு என்ன மாதிரியான டூ-வீலர்கள் விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட இருக்கின்றன என்பது பற்றிய தகவலையும் காணலாம், வாங்க.

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஹோண்டாவும் ஒன்று. இந்த நிறுவனமே தமிழகத்தின் நெற்களஞ்சியமாக கருதப்படும் தஞ்சைக்கு பெருமிதம் சேர்க்கும் விதமாக ஓர் செயலை செய்திருக்கின்றது. நிறுவனம் அதன் பிரீமியம் இருசக்கர வாகன விற்பனையகமான 'பிக் விங்' (Big Wing) ஷோரூமையே அங்கு திறந்து வைத்திருக்கின்றது. இங்கு நிறுவனத்தின் வழக்கமான மற்றும் பட்ஜெட் விலை இருசக்கர வாகன விற்பனைக்குக் கிடைக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹோண்டா பிக் விங்

ஆம், பிரீமியம் வசதிகள் நிறைந்த விலை உயர்ந்த டூ-வீலர்கள் மட்டுமே பிக் விங் ஷோரூமில் விற்பனைக்குக் கிடைக்கும். இத்தகைய சிறப்புமிக்க ஷோரூமையே தமிழகத்தின் பெருமை மிக்க மாவட்டமான தஞ்சையில் ஹோண்டா ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் நிறுவனம் திறந்து வைத்துள்ளது. பெரும்பாலும், இதுபோன்ற பிரீமியம் தர வாகன விற்பனையகத்தை வாகன உற்பத்தியாளர்கள் முன்னணி நகரங்களிலேயே திறப்பர். ஆனால், ஹோண்டா நிறுவனமோ இரண்டாம் நிலை நகரமான தஞ்சையை தேர்வு செய்துள்ளது.

அங்கு புத்தம் புதிய பிக் விங் ஷோரூமை திறந்து வைத்திருக்கின்றது அது திறந்து வைத்துள்ளது. இந்த செயல் ஹோண்டாவிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, உலக அதிசயமாக பார்க்கப்படும் பெரிய கோவில் அமைந்திருக்கும் தஞ்சையில் ஷோரூம் திறக்கப்பட்டிருப்பது தமிழக வாசிகள் மத்தியில் இனம் புரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கூறியதை போல் இந்த ஷோரூமில் பிரீமியம் தர டூ-வீலர்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும்.

சிபி 300எஃப், சிபி 300ஆர், ஹைனெஸ் சிபி350, சிபி 350ஆர்எஸ், சிபி 500எக்ஸ், சிபி 650ஆர், சிபிஆர் 650ஆர், சிபிஆர் 1000ஆர்ஆர்-ஆர், ஆப்பிரிக்கா ட்வின் மற்றும் கோல்டு விங் டூர் ஆகிய இருசக்கர வாகன மாடல்களை மட்டுமே இந்த பிக் விங் ஷோரூமில் பார்க்க முடியும். இந்த ஷோரூமில் நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் ஸ்கூட்டர் மாடலான ஆக்டிவா-வைக் கூட இங்கு பார்க்க முடியாது.

பிரீமியம் இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் விதமாக தஞ்சையில் இந்த ஷோரூமை ஹோண்டா திறந்து வைத்துள்ளது. ஹோண்டா நிறுவனம் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் இந்த ஷோரூமை திறந்து வைத்துள்ளது. இதுமாதிரியான ஷோரூம்கள் வருங்காலத்தில் விற்பனை விகிதத்தை அதிகப்படுத்தும் என அது நம்புகின்றது. உண்மையில் பிரீமியம் இருசக்கர வாகனத்தை அதிகம் விரும்புபவர்களுக்கு இந்த ஷோரூம் மிகப் பெரிய விருந்தாக இருக்கும். ஒரே இடத்தில் தனது அனைத்து பிரீமியம் தர வாகனங்களை அது நிறுத்தி வைத்திருக்கும்.

ஆகையால், பிற பிரீமியம் தர இருசக்கர வாகனங்களுடன் தாங்கள் வாங்க வந்த இருசக்கர வாகனத்தை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளவும் முடியும். ஹோண்டா நிறுவனம் வெகு விரைவில் அதன் அடுத்த தலைமுறை ஆக்டிவா ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. ஆக்டிவா 7ஜி ஸ்கூட்டரையே அது அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் தற்போது சந்தையில் நிலவி வரும் போட்டியைச் சமாளிக்கும் விதமாக புதிய டிசைன் மற்றும் ஏராளமான சிறப்பம்சங்களுடன் வரப்போகின்றது.

இதுமட்டுமில்லைங்க, லிட்டருக்கு 100 கிமீ தரும் திறனுடனும் ஆக்டிவா 7ஜி விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த அதிக ரேஞ்ஜ் திறனுக்காக ஆக்டிவா ஸ்கூட்டரில் ஹைபிரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கின்றது. ஏற்கனவே பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா அதன் ரே இசட்ஆர் 125 மற்றும் பஸ்ஸினோ 125 ஆகிய இரு ஸ்கூட்டர்களை மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் வசதியுடன் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.

இவற்றின் மைலேஜ் திறன் பிற பெட்ரோல் ஸ்கூட்டர்களைக் காட்டிலும் சற்று அதிகம் ஆகும். ஒரு லிட்டருக்கு இவை 60 க்கும் அதிகமான கிமீ மைலேஜ் வழங்கும். இத்தகைய அதிக ரேஞ்ஜ் தரும் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாகவே ஹோண்டா நிறுவனம் வெகு விரைவில் அதன் அடுத்த தலைமுறை ஆக்டிவா 7ஜி மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் துள்ளியமான அறிமுக விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. வெகு விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Hmsi opens bigwing in thanjavur
Story first published: Thursday, December 22, 2022, 6:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X