உலகமே எதிர்பார்த்த ஹோண்டாவின் முதல் மின்சார பைக்.. இன்னும் சில நாட்கள்ல அறிமுகமாக போகுது! எந்த நாட்ல தெரியுமா?

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா இன்னும் சில தினங்களில் அதன் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலை உலக சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்வதேச அளவில் இந்த மின்சார பைக்கிற்கு எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே நிறுவனம் ஒரு சில தினங்களில் எலெக்ட்ரிக் பைக்கை இந்த உலகிற்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் ஜனவரி 2 ஆம் தேதி அன்றே ஹோண்டா அதன் முதல் எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்ய இருக்கின்றது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ரோஸ் பரேட் எனும் சிறப்பு நிகழ்வு நடைபெற இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாகவே தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

எலெக்ட்ரிக் பைக்

ஹோண்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 10 புதிய மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது. 2025 ஆம் ஆண்டிற்குள் இதனை செய்து முடிக்க நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நிலையிலேயே 10ல் ஒன்றான எலெக்ட்ரிக் பைக் மாடலை வரும் ஜனவரி இரண்டாம் தேதி அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டு உள்ளது. இந்த எலெக்ட் டூ-வீலரின் சிறப்பு வசதிகள் பற்றிய தகவலை ஹோண்டா இதுவரை வெளியிடவில்லை.

வரும் 2 ஆம் தேதி அன்றே இதுகுறித்த தகவலை ஹோண்டா வெளியிட இருக்கின்றது. அதேவேளையில், இருசக்கர வாகனம் என்ன ஸ்டைலில் இருக்கும் என்பதை அது வெளிப்படுத்தி இருக்கின்றது. இருசக்கர வாகனத்தின் ஸ்கெட்ச் படத்தின் வாயிலாகவே இந்த தகவலை அது உறுதிப்படுத்தி இருக்கின்றது. தற்போது உலக அளவில் இருசக்கர வாகனங்களுக்கு தேவை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான டிமாண்ட் சற்று கூடுதலாகவே தென்படுகின்றது.

எலெக்ட்ரிக் பைக்

இதன் காரணத்தினாலேயே நாட்டை மையமாகக் கொண்டு பல புதுமுக நிறுவனங்கள் அதன் புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனைக்குக் களமிறங்கிக் கொண்டிருக்கின்றன. இதுமாதிரியான உலக தேவையை உணர்ந்தே ஹோண்டா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் பைக்கை உலக சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. தற்போது வெளியாகி இருக்கும் ஸ்கெட்ச் படங்கள் ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் பைக் அதன் பிரபல இருசக்கரக வாகன மாடலான சிபி 750 ஹார்னெட் மற்றும் சிபி 300எஃப் ஆகிய இருசக்கர வாகன மாடல்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதை வெளிக்காட்டுகின்றது.

இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் மிகவும் முரட்டுத் தனமான ஸ்போர்ட்ஸ் ரக பைக்கைப் போல் இந்த எலெக்ட்ரிக் பைக் காட்சியளிக்கும் என தெரிகின்றது. அகலமான ஹேண்டில் பார் மற்றும் அதிக கட்டுமஸ்தான தோற்றம் கொண்ட எரிபொருள் தொட்டி பொன்ற அமைப்பு உள்ளிட்டவை ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி நவீன கால வசதிகளான செல்போன் இணைப்பு, திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவலை திரை என எக்கசக்க சிறப்பு வசதிகள் இந்த இ-பைக்கில் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஸ்பிளிட் டைப் இருக்கை, எல்இடி பகல்நேர லைட்டுடன் கூடிய முகப்பு மின் விளக்கு, உயரமான பின் பகுதி மற்றும் மெல்லிய வால் பகுதி மின் விளக்கு உள்ளிட்டவையும் அந்த பைக்கை அலங்கரிக்கும் வகையில் இடம் பெற வாய்ப்புகள் உள்ளன. இதையே தற்போது வெளியாகி இருக்கும் பைக் பற்றிய ஸ்கெட்ச் படங்கள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன. ஹோண்டா நிறுவனம் இப்போது விற்பனையில் இருக்கும் அதன் புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடல்களில் சிறப்பு அம்சங்களாக க் பிரேக்குகள், ஏபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றது.

இந்த அம்சமும் வரும் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் எலெக்ட்ரிக் பைக்கில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டத்தையும் இந்த பைக்கில் எதிர்பார்க்கலாம். இந்த வசதி லேசாக மின்சாரத்தை மீட்டெடுக்க உதவும். இத்துடன், மிக அதிக ரேஞ்ஜ் தரும் பேட்டரி பேக்கையும் இந்த பைக்கில் எதிர்பார்க்கலாம். அதாவது, 200க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜை ஓர் முழு சார்ஜில் வழங்கும் பேட்டரி பேக்கை இந்த இருசக்கர வாகனத்தில் ஹோண்டா வழங்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

ஏனெனில் தற்போது விற்பனையில் இருக்கும் பெரும்பாலான எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் ஓர் ஃபுல் சார்ஜில் 200 கிமீ வரையில் ரேஞ்ஜை வழங்கும் திறன் கொண்டவையாக உள்ளன. அவற்றிற்கு மிக சிறந்த போட்டியை வழங்க வேண்டும் எனில் ஹோண்டா பெரிய பேட்டரி பேக்குடனும், அதிக தொழில்நுட்ப வசதிக் கொண்டதாகவும் இந்த பைக்கைக் கொண்டு வந்தால் மட்டுமே முடியும். நவம்பர் மாதத்தில் நிறுவனம் இஎம்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை 2022 இஐசிஎம்ஏ கண்காட்சியில் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தொடர்ந்தே அடுத்தடுத்த எலெக்ட்ரிக் வாகனங்களையும் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஹோண்டா களமிறங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்னும் இரண்டு நாட்களில் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ரோஸ் பரேடில் இ-பைக் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Honda all set to unveil first e bike in rose parade
Story first published: Saturday, December 31, 2022, 17:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X