லிட்டருக்கு 80கிமீ மைலேஜ் தரும்! இப்படி ஒரு ஸ்கூட்டர்தான் இந்தியாவிற்கு தேவைப்படுது! இது ஹோண்டாவின் தயாரிப்பு!

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 80 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் ஸ்கூட்டரை பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), 2022ம் ஆண்டை அலங்கரிக்கும் வகையில் அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது. இதன் அறிமுகம் பற்றிய மேலும் பல முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

லிட்டருக்கு 80கிமீ மைலேஜ் தரும்... இப்படி ஒரு ஸ்கூட்டர்தான் இந்தியாவிற்கு தேவைப்படுது! இது ஹோண்டாவின் தயாரிப்பு!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), மிக அதிக மைலேஜ் தரும் ஜோரினோ (Giorno) எனும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இது ஓர் அப்டேட்டட் மாடலாகும். 50 சிசி திறன் கொண்ட இந்த ஸ்கூட்டர் 2022ம் ஆண்டை அலங்கரிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லிட்டருக்கு 80கிமீ மைலேஜ் தரும்... இப்படி ஒரு ஸ்கூட்டர்தான் இந்தியாவிற்கு தேவைப்படுது! இது ஹோண்டாவின் தயாரிப்பு!

ஆச்சரியமளிக்கும் வகையில் இந்த ஸ்கூட்டர் லிட்டர் ஒன்றிற்கு 80 கிமீ வரை மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. இதனை தவறு என்றும், எழுத்து பிழையாக இருக்குமோ என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டாம். ஹோண்டா நிறுவனமே ஜோரினோ ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 80க்கும் அதிகமான கிமீ வரை மைலேஜ் தரும் என தெரிவித்திருக்கின்றது.

லிட்டருக்கு 80கிமீ மைலேஜ் தரும்... இப்படி ஒரு ஸ்கூட்டர்தான் இந்தியாவிற்கு தேவைப்படுது! இது ஹோண்டாவின் தயாரிப்பு!

இத்தகைய அதிக மைலேஜ் திறன் ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம், அதன் தாய் நாடான ஜப்பானிலேயே அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இது நம் இந்தியர்கள் அனைவருக்கும் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்தியாவில் பெட்ரோல் லிட்டர் ஒன்று ரூ. 100-க்கும் அதிகமான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

லிட்டருக்கு 80கிமீ மைலேஜ் தரும்... இப்படி ஒரு ஸ்கூட்டர்தான் இந்தியாவிற்கு தேவைப்படுது! இது ஹோண்டாவின் தயாரிப்பு!

இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்தியர்கள் பொறாமையை அதிகரிக்கச் செய்யும் வகையில் அதிக மைலேஜ் தரும் ஸ்கூட்டரை ஜப்பானில் அறிமுகப்படுத்தி இருக்கின்றது, ஹோண்டா. ஒவ்வொரு இந்தியர்களின் எதிர்பார்ப்பாக அதிகம் மைலேஜ் தரும் வாகனங்கள் இருக்கின்றன. நம்முடைய இந்த மாதிரியான எதிர்பார்ப்பையே ஹோண்டா ஜப்பானில் நிறைவேற்றி இருக்கின்றது.

லிட்டருக்கு 80கிமீ மைலேஜ் தரும்... இப்படி ஒரு ஸ்கூட்டர்தான் இந்தியாவிற்கு தேவைப்படுது! இது ஹோண்டாவின் தயாரிப்பு!

ஜப்பானில் கடந்த 10ம் தேதி நிலவரப்படி பெட்ரோல் லிட்டர் ஒன்று 160.90 யென்களுக்கு விற்பனைச் செய்யப்பட்டிருக்கின்றது. இது இந்திய மதிப்பில் ரூ. 103.85-க்கு சமமாகும். ஆகையால், அந்த நாட்டிலும் பெட்ரோல் சற்றே அதிக விலையில் விற்பனைச் செய்யப்படுவது தெரிகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையைச் சமாளிக்கும் பொருட்டே ஹோண்டா நிறுவனம் ஜப்பானியர்களுக்காக குறைந்த சிசி திறன் கொண்ட ஜோரினோ ஸ்கூட்டரை அப்டேட் செய்து அறிமுகம் செய்திருக்கின்றது.

லிட்டருக்கு 80கிமீ மைலேஜ் தரும்... இப்படி ஒரு ஸ்கூட்டர்தான் இந்தியாவிற்கு தேவைப்படுது! இது ஹோண்டாவின் தயாரிப்பு!

ஜப்பானிய மதிப்பில் 2,09,000 யென்களுக்கு ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ. 1.34 லட்சம் ஆகும். இந்த விலையிலேயே மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட ஜோரினோ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

லிட்டருக்கு 80கிமீ மைலேஜ் தரும்... இப்படி ஒரு ஸ்கூட்டர்தான் இந்தியாவிற்கு தேவைப்படுது! இது ஹோண்டாவின் தயாரிப்பு!

ஜோரினோ நார்மலான அளவு கொண்ட ஸ்கூட்டராகும். இது முற்றிலும் ரெட்ரோ (பழமையான) தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது. வளைவான உடல்வாகு, வட்ட வடிவ முகப்பு மின் விளக்கு மற்றும் டர்ன் இன்டிகேட்டர்கள் உள்ளிட்டவை ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கின்றன. இவையிரண்டும் சேர்ந்து ஸ்கூட்டருக்கு மிகவும் தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றன.

லிட்டருக்கு 80கிமீ மைலேஜ் தரும்... இப்படி ஒரு ஸ்கூட்டர்தான் இந்தியாவிற்கு தேவைப்படுது! இது ஹோண்டாவின் தயாரிப்பு!

ஸ்கூட்டரில் 50 சிசி ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறைந்த சிசி திறன் கொண்ட எஞ்ஜினே 80 கிமீ எனும் உச்சபட்ச மைலேஜிற்கு காரணமாக இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 4.5 பிஎஸ் மற்றும் 4.1 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

லிட்டருக்கு 80கிமீ மைலேஜ் தரும்... இப்படி ஒரு ஸ்கூட்டர்தான் இந்தியாவிற்கு தேவைப்படுது! இது ஹோண்டாவின் தயாரிப்பு!

ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த எடையே 81 கிலோ என கூறப்படுகின்றது. இதன் இருக்கை உயரம் 720 மிமீட்டராக இருக்கின்றது. தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக இது தென்படுகின்றது. இத்துடன், ஸ்கூட்டரில் 4.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் நிரப்பும் தொட்டி கொடுக்கப்பட்டிருக்கின்றது.

லிட்டருக்கு 80கிமீ மைலேஜ் தரும்... இப்படி ஒரு ஸ்கூட்டர்தான் இந்தியாவிற்கு தேவைப்படுது! இது ஹோண்டாவின் தயாரிப்பு!

இதனை முழுமையாக நிரப்பினால் சுமார் 350 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்துடன், சிறிய டிஜிட்டல் இன்செட் அடங்கிய அனலாக் டயல், ஹாலோஜன் இலுமினேஷன் மற்றும் 12வோல்ட் யுஎஸ்பி சாக்கெட் உள்ளிட்ட அம்சங்கள் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், இரட்டை ஷாக் அப்சார்பர்கள் பின் பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளன. மிக சிறப்பான இயக்க அனுபவத்தை வழங்கும் பொருட்டு இந்த அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles

English summary
Honda launches giorno 50cc scooter in japan it can give 80 kmpl mileage
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X