என்.எக்ஸ்500 பெயரில் ஹோண்டாவின் புதிய அட்வென்ச்சர் பைக்!! ஹிமாலயன் 450-க்கு போட்டியா?

ஹோண்டா மோட்டார்சைக்கிள் என்.எக்ஸ்500 என்கிற பெயரை புதியதாக அதன் எதிர்கால தயாரிப்பிற்காக பதிவு செய்து கொண்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

என்.எக்ஸ்500 பெயரில் ஹோண்டாவின் புதிய அட்வென்ச்சர் பைக்!! ஹிமாலயன் 450-க்கு போட்டியா?

உலகளவில் பிரபலமான 2-வீலர் பிராண்ட்களுள் ஒன்றான ஹோண்டா ஐரோப்பாவில் என்.எக்ஸ் மற்றும் என்.எக்ஸ்500 என்கிற இரு புதிய பெயர்களையும், நியூசிலாந்தில் என்.எக்ஸ் என்கிற பெயரையும் புதியதாக பதிவு செய்து கொண்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட காலத்திற்கு இந்த பெயர்களில் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் உரிமை ஹோண்டாவிடமே இருக்கும்.

என்.எக்ஸ்500 பெயரில் ஹோண்டாவின் புதிய அட்வென்ச்சர் பைக்!! ஹிமாலயன் 450-க்கு போட்டியா?

ஹோண்டாவின் பைக்குகள் வரிசையில் பொதுவாக 'என்'-இல் ஆரம்பிக்கும் பெயர்கள் அட்வென்ச்சர் பைக்குகளுக்கே சூட்டப்படுவது வழக்கம். ஆதலால் புதிய பெயர்களுக்கான காப்புரிமையை பெற்றதால், புதிய நடுத்தர-அளவு எடை கொண்ட அட்வென்ச்சர் பைக்கின் வடிவமைப்பு பணிகளில் ஹோண்டா ஈடுப்பட்டு வருவதை அறிய முடிகிறது.

என்.எக்ஸ்500 பெயரில் ஹோண்டாவின் புதிய அட்வென்ச்சர் பைக்!! ஹிமாலயன் 450-க்கு போட்டியா?

இதன் தோற்றம் ஹோண்டாவின் டாமினேட்டர் பைக்குகளின் அடிப்படையில் இருக்கும் என கூறப்படுகிறது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் டாமினேட்டர் வரிசை பைக்குகள் 1980களில் இருந்து 90கள் வரையில் பல வெளிநாட்டு சந்தைகளில் பிரபலமானவைகளாக விளங்கின. அதிலிலும் குறிப்பாக, டாமினேட்டர் என்.எக்ஸ்650 பைக் சில சர்வதேச சந்தைகளில் 2003 வரையில் விற்பனையில் இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

என்.எக்ஸ்500 பெயரில் ஹோண்டாவின் புதிய அட்வென்ச்சர் பைக்!! ஹிமாலயன் 450-க்கு போட்டியா?

ஹோண்டா டாமினேட்டர் பைக்குகளே உலகளவில் முதல், முறையான-அட்வென்ச்சர் பைக்குகளாக பார்க்கப்படுகின்றன. ஆதலால் 1980, 90களில் பிறந்தவர்களுக்கு டாமினேட்டர் அட்வென்ச்சர் பைக்குகள் பரீட்சையமானதாக உள்ளதால் அதே தோற்றத்தில் அட்வென்ச்சர் பைக்கை கொண்டுவர ஹோண்டா விரும்புகிறது போல. ஆனால் டாமினேட்டர் பெயரை ஏற்கனவே ஐரோப்பிய நார்டன் பிராண்ட் பெற்றுவிட்டதால், அதனை ஹோண்டாவால் பயன்படுத்த இயலாது.

என்.எக்ஸ்500 பெயரில் ஹோண்டாவின் புதிய அட்வென்ச்சர் பைக்!! ஹிமாலயன் 450-க்கு போட்டியா?

அதனாலேயே வெறுமனே என்.எக்ஸ் பெயரை மட்டும் பயன்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது என நினைக்கிறோம். பழமையான டாமினேட்டர் என்.எக்ஸ் அட்வென்ச்சர் பைக்குகளின் அடிப்படையில் புதிய என்.எக்ஸ்500 பைக் உருவாக்கப்பட்டாலும், ஹோண்டாவின் சமீபத்திய அறிமுகமான சிபி500எக்ஸ் என்கிற சாலை-சார்ந்த அட்வென்ச்சர் பைக்கின் தொடுதல்களும் நிச்சயமாக ஆங்காங்கே இருக்கும்.

என்.எக்ஸ்500 பெயரில் ஹோண்டாவின் புதிய அட்வென்ச்சர் பைக்!! ஹிமாலயன் 450-க்கு போட்டியா?

இருப்பினும் கூடுதல் நீளமான சஸ்பென்ஷன் டிராவல் மற்றும் இரட்டை-பயன்பாட்டு டயர்களுடன் கூடுதல் ஆஃப்-ரோடு சார்ந்த மோட்டார்சைக்கிளாக புதிய என்.எக்ஸ்500 கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. ஆனாலும், தற்போதைய சிபி500எக்ஸ் பைக்கின் அதே 471சிசி, 8-வால்வு, லிக்யுடு-கூல்டு, இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜினையே புதிய என்.எக்ஸ்500 மாடலிலும் ஹோண்டா வழங்க பார்க்கும்.

என்.எக்ஸ்500 பெயரில் ஹோண்டாவின் புதிய அட்வென்ச்சர் பைக்!! ஹிமாலயன் 450-க்கு போட்டியா?

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 47 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 43.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் ஆற்றல் ஆனது ஸ்லிப்பர் & உதவி க்ளட்ச் உடனான 6-ஸ்பீடு கியர்பாக்ஸின் வாயிலாக பைக்கின் பின் சக்கரத்திற்கு வழங்கப்படுகிறது. ஏற்கனவே கூறியதுபோல், கூடுதல் ஆஃப்-ரோடு பண்பிற்காக 19-இன்ச்சிற்கு மாற்றாக 21-இன்ச்சில் முன் சக்கரத்தை என்.எக்ஸ்500 பெறலாம்.

என்.எக்ஸ்500 பெயரில் ஹோண்டாவின் புதிய அட்வென்ச்சர் பைக்!! ஹிமாலயன் 450-க்கு போட்டியா?

இதேபோல் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட காப்புரிமையின் மூலம் ஹோண்டா பிராண்டில் இருந்து புதியதாக அளவில் சிறிய மோட்டார்சைக்கிள் வெளிவரவுள்ளதை அறிய முடிந்திருந்தது. இந்த மோட்டார்சைக்கிளில் சிறிய அளவிலான ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படலாம். இந்தியாவில் விற்பனையில் உள்ள சிபி200எக்ஸ் மற்றும் ஹார்னெட் 2.0 பைக்குகளில் 184.4சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுவது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

என்.எக்ஸ்500 பெயரில் ஹோண்டாவின் புதிய அட்வென்ச்சர் பைக்!! ஹிமாலயன் 450-க்கு போட்டியா?

இதற்கேற்ப இந்தியாவிலும் என்.எக்ஸ்200 என்கிற பெயருக்கான காப்புரிமையை கடந்த ஆண்டில் ஹோண்டா பெற்றது. உண்மையில், ஹோண்டா என்.எக்ஸ்200 அட்வென்ச்சர் பைக்கே முதலாவதாக அறிமுகமாகும் என எதிர்பார்த்தோம். ஆனால் மாறாக, சற்று சாலை-சார்ந்த அட்வென்ச்சர் பைக்காக சிபி200எக்ஸ் களமிறக்கப்பட்டது. எனவே விரைவில் இந்திய சந்தையில் ஹோண்டா என்.எக்ஸ்200 பைக்கின் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம்.

என்.எக்ஸ்500 பெயரில் ஹோண்டாவின் புதிய அட்வென்ச்சர் பைக்!! ஹிமாலயன் 450-க்கு போட்டியா?

இது ஹீரோ மோட்டோகார்பின் எக்ஸ்பல்ஸ்200 பைக்கிற்கு நேரெதிர் போட்டி மாடலாக விளங்கக்கூடும். இந்த செய்தியில் என்.எக்ஸ்500 & என்.எக்ஸ்200 என இரு புதிய ஹோண்டா அட்வென்ச்சர் பைக்குகளை பற்றி பார்த்துள்ளோம். இவை இரண்டும் நிச்சயமாக இந்தியாவில் விற்பனைக்குவரும் என உறுதியாக கூறிவிட முடியாது. இருப்பினும், இவை இரண்டில் ஏதேனும் ஒன்றின் அறிமுகத்தையாவது குறைந்தப்பட்சம் நடப்பு 2022ஆம் ஆண்டிற்குள்ளாக எதிர்பார்க்கலாம்.

Note: Images are representative purpose only.

Most Read Articles

English summary
Honda motorcycle file trademark for nx500 name could be an adventure details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X