100 கி.மீ மைலேஜ் கொடுக்குமா ஹோண்டா ஆக்டிவா 7ஜி ஸ்கூட்டர்? விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டம்!

ஹோண்டா நிறுவனம் விரைவில் தனது ஆக்டிவா ஸ்கூட்டரில் அடுத்த தலைமுறையாக ஆக்டிவா 7ஜி ஸ்கூட்டரை விரைவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. புதிய இன்ஜின், புதிய டிசைன் மற்றும் ஏராளமான தொழிற்நுட்பங்கள் உள்ளிட்டவற்றுடன் ஃப்ரஷ் லுக்காக வரப்போகும் ஆக்டிவா பைக் குறித்த விரிவான தகவல்களை இங்கே காணலாம்.

ஸ்கூட்டர்களிலேயே ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் மிகவும் பிரபலமானது. பலர் இந்த ஸ்கூட்டரை விரும்பி வாங்குகின்றனர். இந்த ஸ்கூட்டரில் உள்ள இன்ஜின் மற்றும் செயல்பாடுகள் மக்களுக்குப் பிடித்துப் போனதால் இதன் விற்பனை அதிகமாகி இன்று இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் ஸ்கூட்டர் என்ற பெருமை இந்த ஸ்கூட்டருக்கு உள்ளது. நீண்ட ஆண்டுகளாக இதன் இடத்தை பிடிக்க வேறு ஸ்கூட்டர்கள் எதுவும் மார்கெட்டிற்கு இன்னும் வரவில்லை.

100 கி.மீ மைலேஜ் கொடுக்குமா ஹோண்டா ஆக்டிவா 7ஜி ஸ்கூட்டர்? விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டம்!

ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டரின் மார்கெட்டை தொடர்ந்து தங்களிடம் தக்க வைத்துக்கொள்ள இந்த ஸ்கூட்டரை அவ்வப்போது அப்டேட் செய்வது வருகின்றனர். இதுவரை 6 தலைமுறை ஸ்கூட்டர்கள் அறிமுகமாகியுள்ள நிலையில் தற்போது ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டரில் அடுத்த அப்டேட்டாக 7ஜி என்ற புதிய தலைமுறை ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த புதிய தலைமுறையில் பழைய தலைமுறை ஸ்கூட்டரிலிருந்து ஏராளமான மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

ஹோண்டா நிறுவனம் இந்த புதிய தலைமுறை ஆக்டிவா 7ஜி ஸ்கதுட்டரில் முக்கியமாக இதன் இன்ஜினை மாற்றவுள்ளது. தற்போது பெட்ரோல் இன்ஜின் இந்த ஸ்கூட்டருக்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இது மாற்றப்பட்டு 109 சிசி ஹைபிரிட் இன்ஜின் இந்த ஸ்கூட்டருக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒரே நேரத்தில் பேட்டரி மற்றும் பெட்ரோலில் இயங்கும்படியாக ஹைபிரிட் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழிற்நுட்பம் கார்களில் இப்பொழுது பிரபலமாகவுள்ளது.

இப்படியாக ஹைபிரிட் இன்ஜின் வழங்கப்பட்டால் இந்த ஸ்கூட்டரின் மைலேஜ் தாருமாறாக அதிகமாகும். ஆனால் தற்போது இந்த ஸ்கூட்டரில் வரப்போவது ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜினா அல்லது மைல்டு ஹைபிரிட் இன்ஜினா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஹோண்டா நிறுவனம் லிட்டருக்கு 100 கி.மீ மைலேஜ் தரும் படி இதன் இன்ஜினை தயாரித்து வருவதாகச் செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இதை ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை.

ஹைபிரிட் தொழிற்நுட்பம் மட்டுமல்ல இந்த ஸ்கூட்டரில் ஐடியல் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழிற்நுட்பமும் பொருத்தப்படவுள்ளது. அதாவது சிக்னல்களில் நிற்கும் போது நீண்ட நேரம் ஸ்கூட்டர் நின்றால் இன்ஜின் தானாக நின்று விடும். பின்னர் கிளம்பும் போது பிரேக்கை லேசாக அழுத்தினாலே போதும் இன்ஜின் ஸ்டார்ட் ஆகி உடனடியாக அங்கிருந்து கிளம்பி விடலாம். இந்த தொழிற்நுட்பமும் பைக்கின் மைலேஜை அதிகரிக்க உதவுகிறது. இதனால் பைக்கின் சிக்னல்களில் நிற்கும் போது இன்ஜின் இயங்குவதற்குத் தேவையான பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தலாம்.

விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய ஆக்டிவா 7ஜி ஸ்கூட்டரில் தற்போது உள்ள தலைமுறை ஸ்கூட்டரில் உள்ளதை விட பெரியதான வீல் மற்றும் டயர்கள் பொருத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்ததாக தற்போது விற்பனையில் உள்ள தலைமுறையில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் அனலாக் முறையில் இருக்கிறது. புதிய தலைமுறை ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் இடம்பெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஓடோ மீட்டர், பெட்ரோல் இன்டிகேட்டர், உள்ளிட்ட ஏராளமான தகவல்கள் இடம்பெறவுள்ளன.

இந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வெறும் கிளஸ்டர் அப்டேட் மட்டுமல்ல மாறாக இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷனும் வரவிருக்கிறது. மேலும் இந்த புதிய தலைமுறை ஸ்கூட்டர் ஹைபிரிட் ஆப்ஷன் உடன் வரவுள்ளதாக முன்பே கூறியிருந்தோம். இந்த ஹைபிரிட்டை ஆன்/ ஆஃப் செய்ய ஸ்விட்ச் ஒன்றும் வழங்கப்படவுள்ளது. ஹைபிரிட் ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே ஹைபிரிட் ஆப்ஷன் செயலில் இருக்கும். இல்லை என்றால் வெறும் பெட்ரோலில் மட்டுமே இயங்கும் ஸ்கூட்டராக செயல்படும்.

புதிய தலைமுறை 7ஜி ஸ்கூட்டரில் டிசைனை பொருத்தவரை ஹோண்டா நிறுவனம் அதன் அடிப்படை டிசைனில் எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை என்றும், தற்போதைய தலைமுறை ஸ்கூட்டரில் உள்ள டிசைனிலேயே சிறு சிறு மாற்றங்களை மட்டும் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் முதல் தலைமுறை ஸ்கூட்டர் முதல் விரைவில் வெளியாகவுள்ள 7ம் தலைமுறை ஸ்கூட்டர் வரை எல்லாம் கிட்டத்தட்ட ஒரே டிசைனில் தான் இருக்கும். சிறு சிறு அப்டேட்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Honda plans to launch Activa 7g scooter with hybrid engine
Story first published: Monday, November 28, 2022, 12:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X