2022 ஹோண்டா சிபி300ஆர் இந்தியாவில் அறிமுகம்... புதுசா இந்த பைக்ல என்ன சேர்த்திருக்காங்க? வாங்க பார்க்கலாம்!!

2022 ஹோண்டா சிபி 300 ஆர் (2022 Honda CB300 R) பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் வருகை குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

2022 ஹோண்டா சிபி300ஆர் இந்தியாவில் அறிமுகம்... புதுசா இந்த பைக்ல என்ன சேர்த்திருக்காங்க? வாங்க பார்க்கலாம்!!

2022 ஹோண்டா சிபி 300ஆர் (2022 Honda CB 300 R) மோட்டார் சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் சிபி 300ஆர் மாடலும் ஒன்று. இதற்கு இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. குறிப்பாக, நியோ-ரெட்ரோ கஃபே ரேசர் (Neo-Sports Café) இருசக்கர வாகனங்களை அதிகம் விரும்புவோர்களின் மிக பிரியமான டூ-வீலராக இது இருக்கின்றது.

2022 ஹோண்டா சிபி300ஆர் இந்தியாவில் அறிமுகம்... புதுசா இந்த பைக்ல என்ன சேர்த்திருக்காங்க? வாங்க பார்க்கலாம்!!

இத்தகையோரை ஆண்டின் தொடக்கத்தில் கவரும் பொருட்டே ஹோண்டா நிறுவனம் இப்புதிய பைக்கை தற்போது நாட்டில் விற்பனைக்கு களமிறக்கி இருக்கின்றது. இது மிக விரைவில் வர இருக்கும் பொங்கல் பண்டிகையின் போது புதிய வாடிக்கையாளர்களைக் கவர நிச்சயம் உதவும் என நம்பப்படுகின்றது.

2022 ஹோண்டா சிபி300ஆர் இந்தியாவில் அறிமுகம்... புதுசா இந்த பைக்ல என்ன சேர்த்திருக்காங்க? வாங்க பார்க்கலாம்!!

2022 ஹோண்டா சிபி300ஆர் பைக்கில் லேசான மாற்றங்களை ஹோண்டா நிறுவனம் புகுத்தியிருக்கின்றது. புதிதாக கியர் பொசிஷன் மற்றும் சைடு ஸ்டாண்டு பற்றிய தகவலை இண்டிகேட் செய்யும் எல்சிடி திரை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த திரை இன்னும் பல தகவல்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

2022 ஹோண்டா சிபி300ஆர் இந்தியாவில் அறிமுகம்... புதுசா இந்த பைக்ல என்ன சேர்த்திருக்காங்க? வாங்க பார்க்கலாம்!!

அறிமுகமாக விலையாக ரூ. 2.77 லட்சம் 2022 ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. இந்த பைக்கை நிறுவனம் அதன் பிக்-விங் விற்பனையகங்கள் வாயிலாக விற்பனைக்கு வழங்கும். மேலும், தற்போதைய அறிமுகத்தை முன்னிட்டு விற்பனையகங்கள் இருசக்கர வாகனத்திற்கான புக்கிங் பணிகளை தொடங்கி இருக்கின்றன.

2022 ஹோண்டா சிபி300ஆர் இந்தியாவில் அறிமுகம்... புதுசா இந்த பைக்ல என்ன சேர்த்திருக்காங்க? வாங்க பார்க்கலாம்!!

மிக விரைவில் பைக்கை புக் செய்தோருக்கு அவற்றை டெலிவரி செய்ய ஹோண்டா திட்டமிட்டிருக்கின்றது. ஆகையால், கூடிய சீக்கிரத்தில் 2022 ஹோண்டா சிபி300ஆர் பைக் விற்பனையகங்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரு விதமான நிற தேர்வுகளில் மட்டுமே இப்பைக் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

2022 ஹோண்டா சிபி300ஆர் இந்தியாவில் அறிமுகம்... புதுசா இந்த பைக்ல என்ன சேர்த்திருக்காங்க? வாங்க பார்க்கலாம்!!

மேட் ஸ்டீல் கருப்பு (Matte Steel Black) மற்றும் பியர்ல் ஸ்பார்டன் சிவப்பு (Pearl Spartan Red) ஆகிய நிற தேர்வுகளிலேயே சிபி300ஆர் விற்பனைக்குக் கிடைக்கும். இரு நிற தேர்வுகளும் அதிக கவர்ச்சியான தோற்றத்தை வழங்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

2022 ஹோண்டா சிபி300ஆர் இந்தியாவில் அறிமுகம்... புதுசா இந்த பைக்ல என்ன சேர்த்திருக்காங்க? வாங்க பார்க்கலாம்!!

புதிய 2022 ஹோண்டா சிபி300ஆர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், சிஇஓ-வுமான அட்சுஷி ஒகாடா கூறியதாவது, "எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும், ஹோண்டாவின் அர்ப்பணிப்பையும் மீட்டெடுக்கும் வகையில், 2022 சிபி300ஆர் இறுதியாக வந்துவிட்டது. இது அறிமுகமாகியதிலிருந்து உயர்தர பொறியியல் தரங்களைக் கொண்டுள்ளது. தனித்துவமான அம்சங்கள் மற்றும் டைனமிக் சாலை இருப்புகளுடன் இப்புதிய சிபி300ஆர் பைக் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய செய்ய இருக்கின்றது" என்றார்.

2022 ஹோண்டா சிபி300ஆர் இந்தியாவில் அறிமுகம்... புதுசா இந்த பைக்ல என்ன சேர்த்திருக்காங்க? வாங்க பார்க்கலாம்!!

2022 ஹோண்டா சிபி300ஆர் மோட்டார்சைக்கிளில் புதிய பாரத் ஸ்டேஜ் VI தர 286 சிசி டிஓஎச்சி 4 வால்வு லிக்யூடு கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜினில் கூடுதல் சிறப்பு வசதியாக பிஜிஎம்-எஃப்ஐ தொழில்நுட்பம் பயனப்டுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியையும் பெற்றிருக்கின்றது.

2022 ஹோண்டா சிபி300ஆர் இந்தியாவில் அறிமுகம்... புதுசா இந்த பைக்ல என்ன சேர்த்திருக்காங்க? வாங்க பார்க்கலாம்!!

இது வழக்கமான கிளட்ச் பொறிமுறையுடன் ஒப்பிடும்போது மிக சிறப்பானதாக செயல்படும். குறிப்பாக, குறைந்த சுமை தேவைப்படும் கிளட்ச் செயல்பாடுகளுக்கு இது அதிக உதவியை வழங்கும். இதேபோல், ஸ்லிப்பர் கிளட்சானது எஞ்ஜின் பிரேக்கிங்கின்போது ஏற்படும் தேவையற்ற அதிர்வுகளை கட்டுப்படுத்த உதவும்.

2022 ஹோண்டா சிபி300ஆர் இந்தியாவில் அறிமுகம்... புதுசா இந்த பைக்ல என்ன சேர்த்திருக்காங்க? வாங்க பார்க்கலாம்!!

இத்தகைய சிறப்பு தொழில்நுட்ப கருவிகளுடனேயே புதிய 2022 ஹோண்டா சிபி300ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதுதவிர, 296 மிமீ ஹப்-லெஸ் ஃப்ளோட்டிங் டிஸ்க் முன் பக்கத்திலும், 220 மிமீ டிஸ்க் பிரேக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டிருக்கின்றது. இவை மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும். இந்த அனுபவத்தை பன்மடங்கு சிறப்பானதாக மாற்ற 4-பாட் ரேடியல்-மவுண்டட் காலிப்பர்கள் மற்றும் இரட்டை சேனல் ஏபிஎஸ் ஆகியவையும் வழங்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles

English summary
Honda s neo sports cafe inspired 2022 cb300r launched in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X