ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 80கிமீ-க்கு இயங்கும்!! ஹார்வின் எஸ்கே3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்- ஐரோப்பாவில் அறிமுகம்

எரிபொருள் வாகனங்களின் ஆயுட்காலம் முடியும் தருவாய்க்கு வந்துவிட்டது. ஏனெனில் நமது இந்தியாவிலேயே கடந்த சில வருடங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள், 3-சக்கர வாகனங்கள் & 4-சக்கர வாகனங்கள் ஏராளம். வெளிநாடுகளில் சொல்லவே வேண்டாம்.

ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 80கிமீ-க்கு இயங்கும்!! ஹார்வின் எஸ்கே3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்- ஐரோப்பாவில் அறிமுகம்

அதிலிலும் ஐரோப்பிய நாடுகளில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும், மோட்டார்சைக்கிள்களும் கடந்த பல வருடங்களாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த வகையில் தற்போது ஆஸ்திரியாவை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஹார்வின் வெளியீடு செய்திருக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் எஸ்கே3 ஆகும்.

ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 80கிமீ-க்கு இயங்கும்!! ஹார்வின் எஸ்கே3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்- ஐரோப்பாவில் அறிமுகம்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மூலமாக எரிசக்தி மாற்றம் அடைவது மட்டுமின்றி, ஸ்கூட்டர்களின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியை அடைந்து வருகிறது. வழக்கத்தை காட்டிலும் இப்போதெல்லாம் புதியதாக வடிவமைக்கப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிகளவில் கூர்மையான லைன்களை பெறுகின்றன. இந்த ஹார்வின் எஸ்கே3 இ-ஸ்கூட்டரும் சுற்றிலும் கூர்மையான லைன்களை ஏற்றுள்ளது.

ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 80கிமீ-க்கு இயங்கும்!! ஹார்வின் எஸ்கே3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்- ஐரோப்பாவில் அறிமுகம்

இத்தகைய கூர்மையான வடிவிலான பேனல்களை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதியிலும் காண முடிகிறது. இவ்வாறான ஃப்ளோர் போர்டுகள் தற்கால மாடர்ன் மேக்ஸி-ஸ்கூட்டர்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் ஆகும். எஸ்கே3 ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் இரட்டை எல்இடி ஹெட்லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன இவை நமக்கு பிஎம்டபிள்யூ சி400 ஜிடி ஸ்கூட்டரை ஞாபகப்படுத்துகின்றன.

ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 80கிமீ-க்கு இயங்கும்!! ஹார்வின் எஸ்கே3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்- ஐரோப்பாவில் அறிமுகம்

மேலும், இந்த ஹார்வின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் தேவைக்கு ஏற்ப சரிப்படுத்தத்தக்க எதிர்காற்று தடுப்பு கண்ணாடியையும் பார்க்க முடிகிறது. ஸ்டைலான வெட்டுகள் ஸ்கூட்டரின் பக்கவாட்டு மற்றும் பின்பக்கத்தில் கூட காண முடிகிறது. ஒற்றை துண்டில் இருக்கை வழங்கப்பட்டிருக்க, பின் இறுதி முனையில் பின் இருக்கை பயணி பிடித்து கொள்வதற்கான கம்பியும் ஒற்றை-துண்டாக வழங்கப்பட்டுள்ளது.

ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 80கிமீ-க்கு இயங்கும்!! ஹார்வின் எஸ்கே3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்- ஐரோப்பாவில் அறிமுகம்

இந்த பகுதியில் தேவை என்றால் பொருட்களை வைத்து செல்வதற்கான பெட்டகத்தையும் வைத்து கொள்ளலாம் என்கிறது ஹார்வின். எஸ்கே3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 6.2 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார், 2.52kWh லித்தியம்-இரும்பு பேட்டரி உடன் வழங்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு 90kmph ஆகும். இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்து கொண்டு அதிகப்பட்சமாக 80கிமீ தொலைவிற்கு பயணிக்கலாமாம்.

ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 80கிமீ-க்கு இயங்கும்!! ஹார்வின் எஸ்கே3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்- ஐரோப்பாவில் அறிமுகம்

கூடுதல் பேட்டரியை வைத்திருந்தால் கிட்டத்தட்ட 150 கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது ஹார்வின் நிறுவனம். ஆனால் இரண்டாவது பேட்டரி தொகுப்பு ஆனது ஸ்கூட்டரின் இருக்கை அடிப்பகுதியை பெரிய அளவில் ஆக்கிரமித்து கொள்ளும். எஸ்கே3 எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன் தயாரிப்பு நிறுவனம் 8 ஆம்பியர் சார்ஜரை நிலையான தேர்வாக வழங்க உள்ளது.

ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 80கிமீ-க்கு இயங்கும்!! ஹார்வின் எஸ்கே3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்- ஐரோப்பாவில் அறிமுகம்

மற்ற தொழிற்நுட்ப அம்சங்களாக முழு எல்இடி விளக்கு, டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், சாவி இல்லா ஸ்டார்ட் வசதி மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் இரட்டை சுருள்களும் பொருத்தப்பட்டுள்ளன.

ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 80கிமீ-க்கு இயங்கும்!! ஹார்வின் எஸ்கே3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்- ஐரோப்பாவில் அறிமுகம்

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 14 இன்ச்சில் ஸ்போக் அலாய் சக்கரங்கள் உள்ளன. ப்ரேக்கிங் பணியை கவனிக்க இணைக்கப்பட்ட ப்ரேக்கிங் அமைப்பு (CBS) உடன் முன் சக்கரத்தில் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் ட்ரம்-மும் வழங்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய சந்தைகளில் மெட்டாலிக் நீலம், கருப்பு மற்றும் மெட்டாலிக் க்ரே என்கிற மூன்று விதமான நிறத்தேர்வுகள் இந்த இ-ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 80கிமீ-க்கு இயங்கும்!! ஹார்வின் எஸ்கே3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்- ஐரோப்பாவில் அறிமுகம்

மொத்தத்தில் ஹார்வின் எஸ்கே3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அன்றாட நகர்புற பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். அதேநேரம் இதனை தொலைத்தூர பயணங்களுக்கும் கொண்டு செல்லலாம் என ஹார்வின் தெரிவிக்கிறது. ஐரோப்பிய சந்தைகளில் ஹார்வின் எஸ்கே3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 3990 யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.3.42 லட்சமாகும்.

ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 80கிமீ-க்கு இயங்கும்!! ஹார்வின் எஸ்கே3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்- ஐரோப்பாவில் அறிமுகம்

சில ஐரோப்பிய நாட்டு சந்தைகளில் இந்த ஹார்வின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் விற்பனையை துவங்கவுள்ளது. விலையை வைத்து பார்க்கும்போது எஸ்கே3 இ-ஸ்கூட்டர் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் ரூ.3.5 லட்சத்தில் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க நம்மில் பெரும்பாலானோர் விரும்ப மாட்டோம். இவ்வளவு தொகை இருந்தால் காரை வாங்கவே விரும்புவோம்.

Most Read Articles
English summary
Horwin unveiled new electric scooter named sk3 in europe
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X