சென்னையில இருந்து தடாவுக்கு போய்ட்டு ரிட்டர்னே வந்திடலாம்... நடுவுல சார்ஜ் செய்ய வேண்டியதே இருக்காது!

ஐவூமி நிறுவனம் எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய தேர்வை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் ஐவூமி எனெர்ஜி நிறுவனம் இந்தியாவில் இரு விதமான எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஜீட்எக்ஸ் மற்றும் எஸ்1 ஆகிய இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே நிறுவனம் அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்த இரண்டிற்கும் இந்தியர்கள் மத்தியில் கணிசமான அளவில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் முயற்சியில் தற்போது ஐவூமி நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. இதன் அடிப்படையில் நிறுவனத்தின் பிரபலமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான எஸ்1 இல் அதிகம் ரேஞ்ஜ் தரக் கூடிய புதிய தேர்வை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

நிறுவனம் ஏற்கனவே எஸ்1 80, எஸ்1 100 ஆகிய வேரியண்டுகளையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதனுடன், தற்போது எஸ்1 240 எனும் அதிக ரேஞ்ஜ் தரக் கூடிய வேரியண்டே புதிதாக விற்பனைக்கு இணைக்கப்பட்டுள்ளது. இது ஓர் முழு சார்ஜில் 240 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இதன் காரணத்தினாலேயே இதனை நிறுவனம் எஸ்1 240 என குறிப்பிட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருந்தால் சென்னை-டூ-தடா ஃபால்ஸ் அசால்டாக போய்ட்டு மீண்டும் சென்னைக்கே வந்திடலாம். இடையில் சார்ஜ் செய்ய வேண்டியதில்லை என்பது கவனித்தகுந்தது. கும்முடிப்பூண்டி வழியாக செல்கையில் 92 கிமீ மட்டுமே பயணிக்க வேண்டியிருக்கும். ஆகையால், ரிட்டர்ன் வந்த பிறகும் சில கிமீட்டர்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணிக்க முடியும்.

இது உண்மையில் நல்ல ரேஞ்ஜ் திறன் ஆகும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனை இது வழங்குகின்ற காரணத்தினால் அதன் விலையும் சற்று அதிகமாக இருக்கின்றது. ரூ. 1.21 லட்சமே புதிய தேர்விற்கு விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேலையில், எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட் ரூ. 69,999க்கே விற்பனைக்குக் கிடைக்கும். இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

ரேஞ்ஜ் திறனில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக சிறப்பானது கிடையாதுங்க. அதிக வேகத்தை வெளிப்படுத்துவதிலும் அசத்தலான தயாரிப்பாக இது இருக்கின்றது. வெறும் 3.5 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொட்டுவிடும். அதேவேலையில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 53 கிமீ ஆகும். கூடுதல் சிறப்புகளாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இந்தியன் மேட் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், மேட்-இன்-இந்தியா சார்ஜரே எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் வழங்கப்படுகின்றது. இந்த பேட்டரிகள் தீ விபத்தை தவிர்க்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு மூன்று ஆண்டுகள் வாரண்டி நிறுவனம் சார்பில் வழங்கப்படுகின்றது. இந்த பேட்டரியை தனியாக கழட்டிச் சென்றும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு இதுபோன்று இன்னும் பன்முக சிறப்பம்சங்களை எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஐவூமி நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

இந்த அம்சங்களைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களைக் கூடுதலாக கவரும் பொருட்டு ஜீரோ டவுண்பேமென்ட், 7 சதவீதம் வட்டி விகிதம் ஆகிய திட்டங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஐவூமி எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உயர்நிலை வேரியண்டில் 4.2 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி பேக்குடன் 2.5 kW திறன் கொண்ட மின்சார மோட்டாரும் வழங்கப்படுகின்றது. இதே மோட்டாருடனேயே பிற பேட்டரி பேக் தேர்வுகளும் வழங்கப்பட இருக்கின்றன. புதிய தேர்வை நிறுவனம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. நாட்டின் அனைத்து மூலைகளிலும் இந்த வாகனத்தை விற்பனைக்கு வழங்குவதற்கான நடவடிக்கையில் தற்போது நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

Most Read Articles
English summary
Ivoomi launches new varient in e1 e scooter
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X