குறிப்பிட்ட இந்த ஊருக்கு போறவங்களுக்கு சர்வீஸ் இலவசம்... பிரபல டூ-வீலர் நிறுவனம் அறிவிப்பு!

குறிப்பிட்ட இந்த ஊருக்கு செல்லும் ரைடர்களுக்கு இலவசமாக சர்வீஸை வழங்க இருப்பதாக ஜாவா மற்றும் யெஸ்டி பிராண்டுகல் அறிவித்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

குறிப்பிட்ட இந்த ஊருக்கு போறவங்களுக்கு சர்வீஸ் இலவசம்... பிரபல டூ-வீலர் நிறுவனம் அறிவிப்பு! அட இந்த ஊரா இப்பவே கிளம்பிட்றோம்!

மஹிந்திரா நிறுவனத்திற்கு சொந்தமான கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் ஜாவா மற்றும் யெஸ்டி ஆகிய இரு முன்னணி மோட்டார்சைக்கிள் பிராண்டுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த பிராண்டுகளின் கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் மோட்டார்சைக்கிள்களுக்கே இலவச சர்வீஸ் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்த ஊருக்கு போறவங்களுக்கு சர்வீஸ் இலவசம்... பிரபல டூ-வீலர் நிறுவனம் அறிவிப்பு! அட இந்த ஊரா இப்பவே கிளம்பிட்றோம்!

இந்த சிறப்பு சலுகை லடாக் செல்லும் யெஸ்டி மற்றும் ஜாவா மோட்டார்சைக்கிள் உரிமையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள வாகன ஆர்வலர்கள் சிலர் இருசக்கர வாகனத்தைக் கொண்டு நீண்ட தூர பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த பகுதிக்கு இளைஞர்கள் சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பிட்ட இந்த ஊருக்கு போறவங்களுக்கு சர்வீஸ் இலவசம்... பிரபல டூ-வீலர் நிறுவனம் அறிவிப்பு! அட இந்த ஊரா இப்பவே கிளம்பிட்றோம்!

இத்தகையோரை ஈர்க்கும் பொருட்டே இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை கால விடுமுறை ஆரம்பித்துள்ளது. ஆகையால், பலர் குடும்பத்தினர், நண்பர்களுடன் சேர்ந்து ஜாலி ரைடு மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றனர். அந்தவகையில், ஒரு சிலர் இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளுக்கு பயணத்தை மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றனர்.

குறிப்பிட்ட இந்த ஊருக்கு போறவங்களுக்கு சர்வீஸ் இலவசம்... பிரபல டூ-வீலர் நிறுவனம் அறிவிப்பு! அட இந்த ஊரா இப்பவே கிளம்பிட்றோம்!

இதுபோன்று பயணம் மேற்கொள்வோரை ஒருங்கிணைக்கும் வகையிலேயே இலவச சர்வீஸ் எனும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. யெஸ்டி மற்றும் ஜாவா பிராண்ட் வாகனங்களை பயன்படுத்துவோர் கொம்யூனிட்டி குழுவின் வாயிலாக இணைந்திருக்கின்றனர். இதில், இணைந்து லடாக் பயணத்தை மேற்கொள்வோர் இலவச சர்வீஸை வழியில் எங்கு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள முடியும்.

குறிப்பிட்ட இந்த ஊருக்கு போறவங்களுக்கு சர்வீஸ் இலவசம்... பிரபல டூ-வீலர் நிறுவனம் அறிவிப்பு! அட இந்த ஊரா இப்பவே கிளம்பிட்றோம்!

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நாங்கள் சிறந்த மற்றும் கை தேர்ந்த டெக்னீசியன்களை லே பகுதியில் நிலை நிறுத்தியிருக்கின்றோம். அவர்களிடத்தில் அத்தியாவசிய பாகங்கள் மற்றும் டூல்கள் உள்ளன. கூடுதலாக, ரோடு சைடு அசிஸ்டன்ஸுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரேக்டவுண் போன்ற இக்கட்டான சூழல்களில் இவர்கள் வாயிலாக தேவையான உதவிகளை பெற முடியும்" என தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இந்த ஊருக்கு போறவங்களுக்கு சர்வீஸ் இலவசம்... பிரபல டூ-வீலர் நிறுவனம் அறிவிப்பு! அட இந்த ஊரா இப்பவே கிளம்பிட்றோம்!

இந்த சேவையில் பெருமளவிலான சர்வீஸ்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாவா மற்றும் யெஸ்டி வாகன பயன்பாட்டாளர்கள் சுதந்திரமான மற்றும் கவலையில்லாத பயணத்தைத் தொடரும் விதமாக இச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லடாக் செல்வதற்கான முக்கியமான வழி பாதைகளான டெல்லி, நொய்டா, காசியாபாத் மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் உள்ள அதிகாரப்பூர்வ சேவை மையங்கள் இதற்காக தயார் செய்யப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இந்த ஊருக்கு போறவங்களுக்கு சர்வீஸ் இலவசம்... பிரபல டூ-வீலர் நிறுவனம் அறிவிப்பு! அட இந்த ஊரா இப்பவே கிளம்பிட்றோம்!

இதுமட்டுமின்றி, லடாக் செல்லவதற்கான வேறு வழித்தடங்களான சண்டிகர் மற்றும் மணாலி அல்லது ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் கார்கில் ஆகிய பகுதிகளிலும் சர்வீஸ் மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கிழக்கு பகுதியில் இருந்து பயணிப்பவர்களுக்காக கொல்கத்தா, தன்பாத், அர்ரா, பாட்னா, லக்னோ மற்றும் ஆக்ரா ஆகிய முக்கிய நகர் பகுதிகளிலும், தெற்கு பகுதியில் இருந்து பயணத்தைத் தொடங்குபவர்களுக்காக பெங்களூரு, ஹைதராபாத், நாக்பூர், குவாலியர், போபால், ஜான்சி உள்ளிட்ட நகரங்களிலும் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட இந்த ஊருக்கு போறவங்களுக்கு சர்வீஸ் இலவசம்... பிரபல டூ-வீலர் நிறுவனம் அறிவிப்பு! அட இந்த ஊரா இப்பவே கிளம்பிட்றோம்!

இத்துடன், மும்பையில் இருந்து பயணிக்கும் ரைடர்களுக்கு உதவும் விதமாக பிரத்யேகமாக சூரத், பருச், வதோதரா, அஹமதாபாத், உதய்பூர், அஜ்மீர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் சர்வீஸ் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுதவிர, நகர்புறங்களில் உள்ள தங்களின் அதிகாரப்பூர்வ சேவை மையங்களிலும் தங்களிந் இந்த இலவச சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இந்த ஊருக்கு போறவங்களுக்கு சர்வீஸ் இலவசம்... பிரபல டூ-வீலர் நிறுவனம் அறிவிப்பு! அட இந்த ஊரா இப்பவே கிளம்பிட்றோம்!

ஜாவா நிறுவனம் அதன் பிராண்டின்கீழ் 42, பெராக், ஜாவா மற்றும் ஃபார்ட்டி டூ ஆகிய மாடல்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு போட்டியளிக்கும் வகையில் உள்ளன. இதேபோல், யெஸ்டி நிறுவனத்தின் தயாரிப்புகளும் கிளாசிக் ரக வாகனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் உள்ளன. இந்நிறுவனத்தின்கீழ், ரோட்ஸ்டர், அட்வென்சர் மற்றும் ஸ்கிராம்ப்ளர் ஆகிய மூன்று மாடல்கள் தற்போது விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Jawa yezdi announces free service for who riding to ladakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X