தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை வெளியீடு செய்கிறது கவாஸாகி... எப்போனு தெரியுமா?

கவாஸாகி (Kawasaki) நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தின் (Electric TwoWheeler) வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது. இந்த தகவல் மின்சார வாகன ஆர்வலர்கள் மற்றும் கவாஸாகி தயாரிப்பை அதிகம் விரும்புவோர்கள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை வெளியீடு செய்கிறது கவாஸாகி... எப்போனு தெரியுமா?

மின்சார வாகனங்களுக்கு உலகளவில் நல்ல டிமாண்ட் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. குறிப்பாக, எலெக்ட்ரிக் டூ வீலர்களுக்கு பன்மடங்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவேதான் முன்னணி நிறுவனங்கள் தொடங்கி ஆரம்ப நிலை (முகம் தெரியாத புதுமுக வாகன உற்பத்தி நிறுவனங்கள்) வரை எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியில் களமிறங்கியிருக்கின்றன.

தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை வெளியீடு செய்கிறது கவாஸாகி... எப்போனு தெரியுமா?

அந்தவகையில், உலகளவில் இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கும் கவாஸாகியும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தியை கையில் எடுத்திருப்பதாகவும், நிறுவனத்தின் முதல் மின் வாகன தயாரிப்பு விரைவில் வெளியீட்டைப் பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை வெளியீடு செய்கிறது கவாஸாகி... எப்போனு தெரியுமா?

எலெக்ட்ரோட் (Elektrode) எனும் பெயர் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளையே நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. வரும் 7ம் தேதி அன்றே அது வெளியீட்டை பெற இருக்கின்றது. இந்த தகவலை கவாஸாகி யுஎஸ்ஏ (KawasakiUSA) அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது. இதுகுறித்து ஓர் வீடியோ பதிவை அது டுவிட்டரில் வெளியிட்டிருக்கின்றது.

தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை வெளியீடு செய்கிறது கவாஸாகி... எப்போனு தெரியுமா?

அதிக திறன் வாய்ந்த மோட்டார்சைக்கிளை உருவாக்கும் நிறுவனமாக கவாஸாகி திகழ்கின்றது. இந்த நிறுவனம் மின்சார இருசக்கர வாகனத்தை உருவாக்கியிருப்பது டூ-வீலர் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை வெளியீடு செய்கிறது கவாஸாகி... எப்போனு தெரியுமா?

நிறுவனம் கடந்த ஆண்டின் இறுதியில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. இதனை நடப்பாண்டின் இறுதிக்குள்ளாகவே செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தற்போது கவாஸாகியின் முதல் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு வெளியீட்டைப் பெற இருக்கின்றது.

தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை வெளியீடு செய்கிறது கவாஸாகி... எப்போனு தெரியுமா?

இத்துடன், இன்னும் சில எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் ரக மோட்டார்சைக்கிளை நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அவை என்ன மாதிரியான வசதிகளுடன் அறிமுகத்தைக் காண இருக்கின்றன என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை.

தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை வெளியீடு செய்கிறது கவாஸாகி... எப்போனு தெரியுமா?

இருப்பினும், கவாஸாகி ஜூன்7ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள், நிறுவனத்தின் பிற தயாரிப்புகளைப் போலவே அதி-திறன் வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. ஆகையால், அறிமுகம் குறித்து வெளியாகியிருக்கும் தகவல் முக்கிய ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை வெளியீடு செய்கிறது கவாஸாகி... எப்போனு தெரியுமா?

கவாஸாகியின் எலெக்ட்ரோட் மின்சார பைக் முதலில் அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே விற்பனைக்கு வர இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாகவே பிற உலக நாடுகளில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கவாஸாகியின் முதல் மின்சார வாகன தயாரிப்பு என்பதால் உலக நாடுகள் பலவற்றில் இப்பைக்கிற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது.

குறிப்பு: கடைசி நான்கு படங்கள் கவாஸாகியின் ஹைபிரிட் பைக் பைக்கின் படங்கள் ஆகும்.

தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை வெளியீடு செய்கிறது கவாஸாகி... எப்போனு தெரியுமா?

கவாஸாகியின் எலெக்ட்ரோட் மின்சார பைக் முதலில் அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே விற்பனைக்கு வர இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாகவே பிற உலக நாடுகளில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கவாஸாகியின் முதல் மின்சார வாகன தயாரிப்பு என்பதால் உலக நாடுகள் பலவற்றில் இப்பைக்கிற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது.

தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை வெளியீடு செய்கிறது கவாஸாகி... எப்போனு தெரியுமா?

கவாஸாகி நிறுவனம் மிக சமீபத்தில் 2022 நிஞ்ஜா 300 பிஎஸ்6 மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அறிமுகமாக இப்பைக்கிற்கு ரூ. 3.37 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. கணிசமான மாற்றங்களுடன் இப்பைக்கை கவாஸாகி இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. புதிய கிராஃபிக்குகள் மற்றும் மூன்று விதமான நிற தேர்வுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கும்.

தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை வெளியீடு செய்கிறது கவாஸாகி... எப்போனு தெரியுமா?

இதுமாதிரியான காஸ்மெட்டிக் மாற்றங்களை மட்டுமே இந்த பைக் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. பைக்கில் பிஎஸ்6 தர எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 296 சிசி லிக்யூடு கூல்டு 8 வால்வுகள் கொண்ட டிஓஎச்சி பேரல்லல் ட்வின் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 38 எச்பி மற்றும் 26.1 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. கியர் ஷிஃப்டை எளிமையானதாக்க அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki e bike launch date revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X