பழைய ஸ்டாக்குகளை க்ளியர் பண்றாங்க! இவ்ளோ கம்மியான விலைக்கு இந்த பைக் கிடைக்கும்னு கனவுலயும் நினைக்கல!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள பைக்குகளில் ஒன்று கவாஸாகி நின்ஜா 300 (Kawasaki Ninja 300). சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதாலும், கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டுள்ளதாலும், இளைஞர்கள் பலர் கவாஸாகி நின்ஜா 300 பைக்கை விரும்பி தேர்வு செய்து வருகின்றனர்.

இந்த பைக்கின் அப்டேட் செய்யப்பட்ட 2022 மாடலை கடந்த ஏப்ரல் மாதம்தான் கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. தற்போதைய நிலையில் 3.40 லட்ச ரூபாய் என்ற விலையில் கவாஸாகி நின்ஜா 300 பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த சூழலில், கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

பழைய ஸ்டாக்குகளை க்ளியர் பண்றாங்க! இவ்ளோ கம்மியான விலைக்கு இந்த பைக் கிடைக்கும்னு கனவுலயும் நினைக்கல!

இந்தியாவில் உள்ள கவாஸாகி டீலர்ஷிப்களில், நின்ஜா 300 பைக்கிற்கு தற்போது 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கவாஸாகி டீலர்ஷிப்கள் 'இயர் எண்ட் டிஸ்கவுண்ட்' அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையை வழங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் கவாஸாகி நின்ஜா 300 பைக்கை முன்பதிவு செய்பவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் என கூறப்படுகிறது.

கவாஸாகி நிறுவனம் வரும் 2023ம் ஆண்டு, நின்ஜா 300 பைக்கை மீண்டும் அப்டேட் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 கவாஸாகி நின்ஜா 300 பைக் வருவதற்கு முன்பாக, பழைய ஸ்டாக்குகளை க்ளியர் செய்ய வேண்டும் என்பதற்காகவே, தற்போது 10 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே கவாஸாகி நின்ஜா 300 பைக்கை விரும்புபவர்களுக்கு, இந்த வருட இறுதி சிறப்பான நேரமாக இருக்கலாம்.

இதன் காரணமாக இந்திய சந்தையில் கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது மிகவும் முக்கியமான போட்டியாளர்களான கேடிஎம் ஆர்சி 390 (KTM RC 390), டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 (TVS Apache RR 310) மற்றும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் (BMW G 310 RR) போன்ற பைக்குகளுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், கவாஸாகி நின்ஜா 300 பைக் அட்டகாசமான செயல்திறனை வெளிப்படுத்த கூடியது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 296 சிசி, பேரலல் ட்வின் இன்ஜின்தான் இதற்கு காரணம். சக்தி வாய்ந்த இந்த இன்ஜின் அதிகபட்சமாக 39 பிஹெச்பி பவரையும், 26 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் வழங்கப்படுகிறது.

இதற்கிடையே கவாஸாகி நிறுவனம் நடப்பு 2022ம் ஆண்டு மற்றொரு முக்கியமான பைக்கையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அது கவாஸாகி டபிள்யூ175 (Kawasaki W175) பைக் ஆகும். இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் கவாஸாகி நிறுவனம் டபிள்யூ175 பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்தியாவில் இந்த பைக்கின் டெலிவரி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) மற்றும் டிவிஎஸ் ரோனின் (TVS Ronin) போன்ற பைக்குகளுக்கு போட்டியாக, கவாஸாகி டபிள்யூ175 பைக் களத்தில் இறக்கப்பட்டுள்ளது. இது இந்திய வாடிக்கையாளர்களின் நீண்ட கால காத்திருப்பிற்கு பின் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள பைக் ஆகும். எனவே இந்திய சந்தையில் டபிள்யூ175 பைக் விற்பனையில் சாதித்து காட்டும் என கவாஸாகி நிறுவனம் எதிர்பார்க்கிறது.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki ninja 300 year end discount details
Story first published: Friday, December 23, 2022, 13:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X