இவ்ளோ கம்மியான விலையில் இப்படி ஒரு பைக்கா! ராயல் என்பீல்டு பைக் வாங்கறதுக்கு பதிலா இதை வாங்கலாம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த பைக்குகளில் ஒன்று கவாஸாகி டபிள்யூ175 (Kawasaki W175). இது மிகவும் விலை குறைவான பைக் ஆகும். இதன் காரணமாகவே இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் கவாஸாகி டபிள்யூ175 பைக்கிற்காக பெரும் ஆவலுடன் காத்து கொண்டிருந்தனர்.

அப்போது வரும் இப்போது வரும் என பல யூகங்கள் கிளம்பிய நிலையில், ஒரு வழியாக கடந்த செப்டம்பர் மாத இறுதியில் கவாஸாகி டபிள்யூ175 பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கின் ஆரம்ப விலை வெறும் 1.47 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதன் மூலம் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான கவாஸாகி பைக் (Most Affordable Kawasaki Bike In India) என்ற பெருமையை டபிள்யூ175 பெற்றுள்ளது.

இவ்ளோ கம்மியான விலையில் இப்படி ஒரு பைக்கா! ராயல் என்பீல்டு பைக் வாங்கறதுக்கு பதிலா இதை வாங்கலாம்!

இந்திய சந்தையில் கவாஸாகி நிறுவனத்தின் பைக்குகள் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், வெறும் 1.47 லட்ச ரூபாய் என்ற விலையில் கவாஸாகி டபிள்யூ175 பைக் விற்பனைக்கு வந்துள்ளது. எனவே கவாஸாகி நிறுவனத்தின் ஒரு பைக்கையாவது வாங்கி விட வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், இந்த பைக்கின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

கவாஸாகி டபிள்யூ175 பைக்கின் டெலிவரி பணிகள் டிசம்பர் மாதம் தொடங்கப்படலாம் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. இதன்படி முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களின் கைகளில் டபிள்யூ175 பைக்கை ஒப்படைக்கும் பணிகளை கவாஸாகி நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. டெலிவரிக்காக காத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவாஸாகி டபிள்யூ175 பைக்கானது, ரெட்ரோ ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ள மாடல் ஆகும். வட்ட வடிவ ஹெட்லேம்ப், அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவற்றை இது பெற்றுள்ளது.

அத்துடன் கண்ணீர் துளி வடிவிலான எரிபொருள் டேங்க் மற்றும் தட்டையான சிங்கிள் பீஸ் சீட் ஆகியவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. கவாஸாகி டபிள்யூ175 பைக்கில், 177 சிசி, சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 12.9 பிஹெச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 13.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

கவாஸாகி டபிள்யூ175 பைக்கில் சஸ்பென்ஸனை பொறுத்தவரையில், முன் பகுதியில் வழக்கமான டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் ட்யூயல் ஷாக் அப்சார்பர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கை பொறுத்தவரையில், முன் பகுதியில் 270 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியையும் கவாஸாகி நிறுவனம் கொடுத்துள்ளது. இதன் மூலம் கொடுக்கும் பணத்திற்கு இது மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும்.

இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) மற்றும் டிவிஎஸ் ரோனின் (TVS Ronin) ஆகிய பைக்குகளுக்கு, கவாஸாகி டபிள்யூ175 போட்டியாக இருக்கும். ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மற்றும் டிவிஎஸ் ரோனின் ஆகிய பைக்குகளும் இந்திய சந்தைக்கு புதுவரவுகள்தான். கவாஸாகி டபிள்யூ175 பைக்கை போல், இந்த 2 பைக்குகளும் கூட, கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

இதில், ராயல் என்பீல்டு நிறுவனத்தை பொறுத்தவரையில், வரும் காலங்களில் இந்தியாவின் 350 சிசி, 450 சிசி மற்றும் 650 சிசி செக்மெண்ட்களில் நிறைய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தீவிரம் காட்டி வருகிறது. இந்த பைக்குகள் அனைத்தும் இந்திய சந்தையில் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளன. இதன் காரணமாக இந்தியாவின் ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகளின் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki w175 deliveries commence in india details here
Story first published: Wednesday, December 14, 2022, 14:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X