கேடிஎம்-இன் இந்த பைக்கை இதுக்கு முன்னாடி பாத்திருக்கவே முடியாது! முதல்முறையாக காட்சிக்குள்ளாகிய 890சிசி பைக்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கேடிஎம் 2022 இந்தியா பைக் வீக்கில் தனது புத்தம் புதிய 890 அட்வென்சர் ஆர் பைக்கை முதல் முறையாக காட்சிப்படுத்தியது. இந்த பைக் பற்றிய கூடுதல் முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான இருசக்கர வாகன கண்காட்சிகளில் இந்தியா பைக் வீக்-ம் ஒன்று. 2022 ஆம் ஆண்டிற்கான இந்த நிகழ்வு கோவாவில் அண்மையில் நடைபெற்றது. 2 டிசம்பர் தொடங்கி 3 டிசம்பர் வரையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் கலந்துக் கொண்டு தங்களின் புதுமுக மற்றும் வருங்கால இருசக்கர வாகனங்களைக் காட்சிப்படுத்தினர். அந்தவகையில், ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த கேடிஎம் நிறுவனமும் அதன் எதிர்கால தயாரிப்புகள் சிலவற்றை காட்சிப்படுத்தியது.

பைக்

அவ்வாறு நிறுவனம் காட்சிப்படுத்தி இருசக்கர வாகன மாடல்களில் 890 அட்வென்சர் ஆர் பைக்கும் ஒன்று. பலரின் கவனைத்தை ஈர்க்கக் கூடிய ஓர் வாகனமாக இது இருந்தது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் பைக் கண்காட்சியில் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களைக் கவரக் கூடியதாக இருந்தது. அதில், முன்னணி இடத்தை வகிக்கக் கூடிய ஓர் டூ-வீலர் மாடலாக கேடிஎம் நிறுவனத்தின் இந்த பைக் இருந்தது.

மிக அதிகம் பிரீமியம் வசதிகள் கொண்ட அட்வென்சர் பைக்காக இதனை கேடிஎம் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. அட்வென்சர் பயணங்களை விரும்பும் இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் விதமாகவே இந்த வாகனத்தை நிறுவனம் உருவாக்கி உள்ளது. நெடுந்தூர பயணங்களுக்கு ஏற்ற வாகனம் இது என்பதால் இதற்கான அம்சங்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், அட்வென்சர் மற்றும் அதிக பயணங்களுக்கு ஏற்ற அம்சங்களுக்கு இந்த பைக்கில் பஞ்சமில்லை.

பைக்

குறிப்பாக, அட்வென்சர் பயணத்தின்போது ஏற்படக் கூடிய சவால்களைச் சமாளிப்பதற்கான அம்சங்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. வாகனத்தின் உருவம் தொடங்கி சிறப்பம்சங்கள் சேர்ப்பு வரை என அனைத்தும் அட்வென்சர் மற்றும் லாங் டிரைவைக் கருத்தில் கொண்டே கொடுக்கப்பட்டுள்ளது. உயரமான விண்ட்ஸ்கிரீன், நேராக நிற்க வைத்தது போன்ற எல்இடி ஹெட்லைட், மேல் நோக்கி பார்த்தவாறு நிலை நிறுத்தப்பட்டிருக்கும் எக்சாஸ்ட், உயரமான மட்குவார்ட் மற்றும் பெல்லி பேன் என எக்கசக்க சிறப்பு கூறுகள் இந்த பைக்கில் அட்வென்சர் பயன்பாட்டிற்கு ஏதுவாக வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த அம்சங்களே கேடிஎம் 890 அட்வென்சர் ஆர் பைக் முழுக்க ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பதற்காக சான்றாக இருக்கின்றது. இதைக் கூடுதலாக உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் இந்த பைக்கில் 889 சிசி எல்சி8 சி பாரல்லல் ட்வின் மோட்டாரை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் மிக நீளமான தூர பயணத்தைக் கூட அசால்ட் செய்து விடும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

பைக்

நம்மில் பலர் இப்போது உலகம் சுற்றும் வாலிபன்களாக மாறியிருக்கின்றனர். தமிழகத்தில் இருந்து சிம்லா, லடாக் என நாட்டின் பல பகுதிகளுக்கு பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகையோருக்கு நிச்சயம் இந்த பைக் நல்ல பலனளிக்கக் கூடியதாக இருக்கும். இந்த 889 சிசி மோட்டார் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 103 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 100 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்டீல் ட்யூப் ஃப்ரேம் வசதியுடன் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க, எக்ஸ்ப்ளோர் பிடிஎஸ் (ப்ரோக்ரஸ்ஸிவ் டேம்பிங் சிஸ்டம்) ஷாக்கே சஸ்பென்ஷன் செட்-அப்பாக பின் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் சிஸ்டம் இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த பிரேக்கிங் சிஸ்டம் பைக்கின் 889 சிசி திறனைகூட அசால்டாகக் கட்டுப்படுத்தும். இதுதவிர, ஏபிஎஸ் சிஸ்டம் ஆறு ஆக்சில் ஐஎம்யூ சிஸ்டம் உடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த அம்சம் மிக அதிக பாதுகாப்பான பிரேக்கிங்கை வழங்கும்.

இத்துடன் டிராக்சன் கன்டரோல் அம்சமும் இந்த அட்வென்சர் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, டிஎஃப்டி திரை இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலாக வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த திரையிலேயே ரைடிங் மோட்களுடன் கட்டுப்பாடுகளும் வழங்கப்பட்டிருக்கும். இதுமட்டுமின்றி ப்ளூடூத் இணைப்பு வசதியும் இந்த திரையில் வழங்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்கு வரும் பட்சத்தில் டிரையம்ப் டைகர் 900 மற்றும் டுகாட்டி மல்டிஸ்ட்ரடா வி2 ஆகியவற்றிற்கு மிக பெரிய போட்டியாளனாக மாறும்.

Most Read Articles
English summary
Ktm 890 adventurer india bike week
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X