2 மணி நேரத்திலேயே விற்று தீர்ந்த எலெக்ட்ரிக் பைக்... இப்படி ஒரு வரவேற்ப அவங்களே எதிர்பார்க்கல!

அல்ட்ராவைலட் ஆட்டோமொட்டிவ் நிறுவனம் வெளியிட்ட எஃப் 77 சிரீஸ் பைக்கின் லிமிட்டட் எடிசன் பைக்கை புக்கிங் துவங்கிய 2 மணி நேரத்தில் அனைத்து பைக்குகளும் புக் ஆகியுள்ளது. மொத்தம் தயாரிக்கப்பட்ட 77 பைக்குகளும் தற்போது புக்கிங் செய்யப்பட்டு விட்டது.

பெங்களூருவை மையமாக கொண்டு செல்படும் நிறுவனம் அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ், இந்நிறுவனம் சமீபத்தில் தனது முதல் தயாரிப்பான எஃப் 77 என்ற பைக்கை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இது முற்றிலும் எலெக்ட்ரிக் சக்தியில் இயங்கும் பைக். மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தான் பிரபலமாகியுள்ள நிலையில் தற்போது எலெக்ட்ரிக் பைக்கும் களம் இறங்கியுள்ளது. இந்த பைக் மொத்தம் ஒரிஜினல் மற்றும் ரேக்கான் ஆகிய 2 வேரியன்ட்களில் விற்பனையாகிறது.

2 மணி நேரத்திலேயே விற்று தீர்ந்த எலெக்ட்ரிக் பைக்... இப்படி ஒரு வரவேற்ப அவங்களே எதிர்பார்க்கல!

இதற்கு அடுத்தபடியாக அதிக பவர் மற்றும் டார்க் கொண்ட லிமிட்டட் எடிசன் பைக்கை அல்ட்ராவைலட் நிறுவனம் உருவாக்க முடிவு செய்தது. மொத்தமே 77 பைக்குகளை மட்டுமே உருவாக்கி விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்தது. இந்த எண்ணிக்கை 77 என்பது மொத்தம் இந்த பைக்கின் பெயரை குறிக்கும் வகையில் இது திட்டமிடப்பட்டது. இந்த லிமிட்டட் எடிசன் பைக்கிற்கான புக்கிங்கும் மற்ற பைக்கின் புக்கிங் துவங்கும் போதே துவங்கியது.

இதுவரை இந்த லிமிட்டட் எடிசன் பைக்கின் விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால் டாப் வேரியன்டானா ரேக்கான் வேரியன்டை விட சற்று விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்கெட்டிற்கு இந்த பைக் வரும் போது ரூ4.55 லட்சம் என்ற விலையில் இந்த பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் லிமிட்டட் எடிசன் என்பதால் இதற்கு பிரத்தியேக பெயிண்ட் ஸ்கீம் வழங்கப்பட்டுள்ளது. மீட்டியோர் க்ரோ மற்றும் ஆஃப்டர் பர்ன் மஞ்சள் ஆகிய நிறத்தின் கலவையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த லிமிட்டட் எடிசன் பைக்கின் பவரை பொருத்தவரை மொத்தம் 40.2 பிஎச்பி பரவையும் 100 என்எம் டார்க் திறனையும் வெளியப்படுத்தும் திறன் கொண்டது. இந்த பைக் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 7.8 நொடியில் பிக்கப் செய்துவிடும் என கூறப்படுகிறது. இது அதிகபட்சமாக 152 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த பைக்கின் டிசைன் ஜெட் ஃபைட்டர் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் டிசைனில் ஹேண்டில் பார் உயரமாகவும் சீட் உயரம் குறைவாகம் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதனால் உயரம் குறைந்தவர்கள் முதல் உயரமானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்த பைக்கை ஓட்டலாம். இந்த பைக்கிற்கு கிளீன் டிசைனை கொடுக்கவேண்டும் என்பதற்காக ஒரு போல்ட் கூட வெளியில் தெரியாதபடி டிசைன் செய்துள்ளனர்.

இந்த பைக்கின் மோட்டாரை பொருத்தவரை BLDC டேரக்ட் டிரைவ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது பைக்கின் ஒரிஜினல் மற்றும் ரேக்கான் ஆகிய வேரியன்ட் பைக்குகள் 38.8 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த பைக் அதிகபட்சமாக 147 கி.மீ வேகத்தில் செல்லும். இந்த பைக்கில் மொத்தம் 3 ரைடிங் மோட்கள் உள்ள கிளைடு, காம்பேட், மற்றும் பாலிஸ்டிக் ஆகிய ரைடிங் மோட்கள் உள்ளன.

இந்த பைக்கிற்கு மொத்தம் 2 விதமான பேட்டரிகள் உள்ளது. ஒன்று 7.1 கிலோவாட் ஹவர் மற்றும் 10.3 கிலோவாட் ஹவர் ஆகிய பேட்டரிலகள் 21700 ஃபார்மேட் செல்களுடன் இருக்கிறது. இந்த பைக் முழு சார்ஜில் இரு பேட்டரி பேக்களில் முறையே இந்திய டிரைவிங் கண்டிஷனிற்கு 206 மற்றும் 307 கி.மீ ரேஞ்ச் தரும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது போக இந்த அல்ட்ராவைலட் எஃப் 77 பைக்கை பொருத்தவரை அட்ஜெஸ்டபுள் யுஎஸ்டி முகப்பு பக்க ஃபோர்க் மற்றும் அட்ஜெஸ்ட்டபுள் ரியர் மேனோ ஷாக் ஆகிய சஸ்பென்கள் வழங்கப்பட்டுள்ளது. இது போக முன்பக்கம் 320 மிமீ, மற்றும் பின்பக்கம் 230 மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்க் பிரேக்கில் டுயல் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் 1360 மிமீ வீல் பேஸை கொண்டது.

இந்த அல்ட்ராலைட் எஃப் 77 பைக்கை பொருத்தவரை இது பெங்களூருவை சேர்ந்த நிறுவனம் என்பதால் பெங்களூருவில்தான் தனது முதல் ஷோரூமை திறக்கும் அங்குதான் விற்பனையை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கை தற்போது புக் செய்தவர்களுக்கு வரும் 2023 ஜனவரி மாதம் முதல் டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த பைக் குறித்த உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
English summary
Limited edition Untraviolette F77 bike sold in 2 hours
Story first published: Saturday, November 26, 2022, 17:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X