இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள 4 க்ரூஸர் பைக்குகள்!! இந்த ஸ்டைல் பைக்குகளை எத்தனை பேருக்கு பிடிக்கும்?

புதிய 2022ஆம் ஆண்டு பழமையான தோற்றத்தினாலான க்ரூஸர் வகையை சேர்ந்த மோட்டார்சைக்கிள்களுக்கானது என நினைக்கிறேன். ஏனெனில் இந்த ஆண்டில் ராயல் என்பீல்டு, ஜாவா மற்றும் யெஸ்டி போன்ற பிரபலமான பிராண்ட்களில் இருந்து புதிய க்ரூஸர் பைக்குகள் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளன.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள 4 க்ரூஸர் பைக்குகள்!! இந்த ஸ்டைல் பைக்குகளை எத்தனை பேருக்கு பிடிக்கும்?

இதனால் வரும் காலங்களில் இந்திய சாலைகளில் உலாவரும் மாடர்ன் பைக்குகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் தற்சமயம் மிகவும் சில க்ரூஸர் பைக்குகள் தான் ராயல் என்பீல்டு பிராண்ட் தவிர்த்து இந்தியாவில் விற்பனையில் உள்ளன. இவற்றுடன் இந்த ஆண்டில் இணையவுள்ள புதிய க்ரூஸர் பைக்குகளை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள 4 க்ரூஸர் பைக்குகள்!! இந்த ஸ்டைல் பைக்குகளை எத்தனை பேருக்கு பிடிக்கும்?

ராயல் என்பீல்டு ஷூட்கன்650

கடந்த 2021இல் நடைபெற்ற EICMA கண்காட்சியில் ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய எஸ்ஜி 650 கான்செப்ட்டை காட்சிப்படுத்தி இருந்தது. இன்னும் இந்த கான்செப்ட்டில் இருந்து மோட்டார்சைக்கிள் முழுமையாக வடிவமைக்கப்படவில்லை. முழுவதுமாக வடிவமைக்கப்பட்ட பின்னர் ராயல் என்பீல்டு இந்த புதிய 650சிசி க்ரூஸர் பைக்கை இந்த 2022ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடலாம்.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள 4 க்ரூஸர் பைக்குகள்!! இந்த ஸ்டைல் பைக்குகளை எத்தனை பேருக்கு பிடிக்கும்?

ராயல் என்பீல்டு பிராண்டில் இருந்து தற்சமயம் விற்பனையில் உள்ள 650சிசி பைக்குகளான இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 பைக்குகளின் அதே என்ஜின் மற்றும் ப்ளாட்ப்ளாரம் தான் இந்த புதிய க்ரூஸர் பைக்கிலும் பொருத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். இதன் விலையை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சத்திற்குள்ளாக ராயல் என்பீல்டு நிர்ணயிக்க பார்க்கும்.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள 4 க்ரூஸர் பைக்குகள்!! இந்த ஸ்டைல் பைக்குகளை எத்தனை பேருக்கு பிடிக்கும்?

புதிய ஜாவா க்ரூஸர்

கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் புதிய ஜாவா க்ரூஸர் பைக்கின் சோதனைகளை கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது. இதனால் இந்த வருடத்திற்குள்ளாக இந்த புதிய ஜாவா பைக் விற்பனைக்கு வந்துவிடலாம். இந்த பைக்கிற்கு ராயல் என்பீல்டின் சமீபத்திய அறிமுகங்களுள் ஒன்றான மீட்டியோர் 350 முக்கியமான போட்டியாக விளங்கலாம்.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள 4 க்ரூஸர் பைக்குகள்!! இந்த ஸ்டைல் பைக்குகளை எத்தனை பேருக்கு பிடிக்கும்?

இதனால் இதன் விலையினையும் மீட்டியோர் பைக்கிற்கு இணையானதாக எதிர்பார்க்கிறோம். இவை தவிர்த்து புதிய ஜாவா க்ரூஸர் பைக்கை பற்றிய மற்ற விபரங்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை. இவற்றை வரும் மாதங்களில் எதிர்பார்க்கலாம். இந்த ஜாவா க்ரூஸர் பைக்கும் தற்சமயம் பொது சாலைகளில் சோதனை ஓட்டங்களில் உள்ளது.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள 4 க்ரூஸர் பைக்குகள்!! இந்த ஸ்டைல் பைக்குகளை எத்தனை பேருக்கு பிடிக்கும்?

யெஸ்டி ரோட்கிங்

இந்தியாவில் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள க்ரூஸர் பைக்காக யெஸ்டி ரோட்கிங் விளங்குகிறது. ஏனெனில் இதன் அறிமுகம் வருகிற ஜன.13ஆம் தேதி எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பைக்குகளின் விற்பனையில் பழமையான யெஸ்டி பிராண்ட் நுழைகிறது. ஜாவா பிராண்டை கொண்டுள்ள கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் தான் யெஸ்டி பிராண்டையும் சொந்தமாக கொண்டுள்ளது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள 4 க்ரூஸர் பைக்குகள்!! இந்த ஸ்டைல் பைக்குகளை எத்தனை பேருக்கு பிடிக்கும்?

ரோட்கிங் மற்றும் அட்வென்ச்சர் பைக் ஒன்று என இரு பைக்குகளுடன் யெஸ்டி பிராண்ட் மீண்டும் உயிர் பெறவுள்ளது. ராயல் என்பீல்டு பைக்குகளை டார்க்கெட் செய்து கொண்டுவரப்படும் இந்த இரு யெஸ்டி பைக்குகளை பற்றிய விபரங்கள் அனைத்தும் வருகிற ஜன.13ஆம் தேதி தான் தெரியவரும். இவை இரண்டும் பலமுறை சோதனை ஓட்டங்களின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள 4 க்ரூஸர் பைக்குகள்!! இந்த ஸ்டைல் பைக்குகளை எத்தனை பேருக்கு பிடிக்கும்?

ராயல் என்பீல்டு ஹண்டர் 350

ஷூட்கன் 650-க்கு முன்னதாகவே ஹண்டர் 350 க்ரூஸர் பைக்கை அறிமுகப்படுத்த ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது. இதன்படி இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஹண்டர் 350 கிட்டத்தட்ட கடந்த 1 வருடத்திற்கும் மேலாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள 4 க்ரூஸர் பைக்குகள்!! இந்த ஸ்டைல் பைக்குகளை எத்தனை பேருக்கு பிடிக்கும்?

ஹண்டர் 350-க்கும், மீட்டியோர் 350-க்கும் இடையில் தோற்றத்தில் மட்டும்தான் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மற்ற இயந்திர பாகங்கள் ஒரே மாதிரியானதாகவே இருக்கும். சென்னையை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனம் அடுத்ததாக ஸ்க்ரம் 411 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதனை தொடர்ந்து ஹண்டர் 350 அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள 4 க்ரூஸர் பைக்குகள்!! இந்த ஸ்டைல் பைக்குகளை எத்தனை பேருக்கு பிடிக்கும்?

இந்தியாவில் பெரும்பான்மையான க்ரூஸர் பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் தான் பழமை மாறாத தோற்றத்தில் விற்பனை செய்து கொண்டிருக்கிறது. ராயல் என்பீல் அல்லாமல் ஜாவா, ஹோண்டா, பெனெல்லி, பஜாஜ் ஆட்டோ, சுஸுகி மற்றும் ஹார்லி-டேவிட்சன் பிராண்ட்களில் இருந்தும் சில க்ரூஸர் பைக்குகள் நம் நாட்டில் விற்பனையாகி கொண்டிருக்கின்றன.

Most Read Articles

English summary
List of crusier bike launches that are expected to take place in 2022
Story first published: Sunday, January 2, 2022, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X