ரொம்ப காசு எல்லாம் ஆகாது... இந்த 5 எலக்ட்ரிக் சைக்கிள்களை வாங்கி பணத்தை சேமிக்கலாம்!!

எலக்ட்ரிக் பை-சைக்கிளை வாங்க வேண்டும் என்று நிச்சயம் நம்மில் பெரும்பாலானோர்க்கு ஒரு ஆசை இருக்கும். ஆனால் எலக்ட்ரிக் சைக்கிள்களின் விலைகள் தான் நம்மை பயமுறுத்துகின்றன. இதனால் எந்த மாதிரியான எலக்ட்ரிக் சைக்கிளை வாங்குவது என்ற குழப்பம் இருக்கலாம். அத்தகைய குழப்பத்தில் உள்ளவரா நீங்கள்? உங்களுக்காகவே சந்தையில் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய 5 எலக்ட்ரிக் சைக்கிள்கள் இதோ...

ரொம்ப காசு எல்லாம் ஆகாது... இந்த 5 எலக்ட்ரிக் சைக்கிள்களை வாங்கி பணத்தை சேமிக்கலாம்!!

1. ஹீரோ லெக்ட்ரோ எலக்ட்ரிக் சி3

விலை: ரூ.28,999

ஹீரோ லெக்ட்ரோ நிறுவனம் விலை குறைவான எலக்ட்ரிக் சைக்கிள்களை அதிகளவில் இந்தியாவில் விற்பனை செய்கிறது. அவற்றில் ஒன்று தான் எலக்ட்ரிக் சி3. விலைக்கு ஏற்ப இந்த இ-சைக்கிளில் போதுமான அளவு மெக்கானிக்கல் பாகங்கள் வழங்கப்படுகின்றன.

ரொம்ப காசு எல்லாம் ஆகாது... இந்த 5 எலக்ட்ரிக் சைக்கிள்களை வாங்கி பணத்தை சேமிக்கலாம்!!

சாதாராண சாலைக்கு ஏற்ற டயர்களை பெறும் எலக்ட்ரிக் சி3 சைக்கிளில் சிறந்த பிரேக்கிற்காக டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்படுவது இங்கு கவனிக்கக்கூடிய அம்சமாகும். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 250 வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார், சைக்கிளின் பின்பக்கத்தில் பொருத்தப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் மோட்டாரை இயங்க வைப்பதற்கு 5.8 ஆம்பியர் லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்படுகிறது.

ரொம்ப காசு எல்லாம் ஆகாது... இந்த 5 எலக்ட்ரிக் சைக்கிள்களை வாங்கி பணத்தை சேமிக்கலாம்!!

பேட்ரி எலக்ட்ரிக் மொபைலிட்டி நியூட்ரான்

விலை: ரூ.29,900

மேலுள்ள ஹீரோ எலக்ட்ரிக் பை-சைக்கிளை காட்டிலும் வெறும் ரூ.900 மட்டுமே விலை அதிகமானது பேட்ரி எலக்ட்ரிக் மொபைலிட்டி நியூட்ரான். இதன் பேட்டரியை 5 ஆம்பியர் மின்சார சாக்கெட்டிலும் சார்ஜ் செய்ய முடியும். இதனால் எங்கு சென்றாலும் இந்த எலக்ட்ரிக் சைக்கிளை சார்ஜ் செய்வது எளிது.

ரொம்ப காசு எல்லாம் ஆகாது... இந்த 5 எலக்ட்ரிக் சைக்கிள்களை வாங்கி பணத்தை சேமிக்கலாம்!!

இந்த பேட்டரியை சைக்கிளில் இருந்து வெளியே எடுக்கவும் முடியும். அத்துடன் இந்த நியூட்ரான் இ-சைக்கிளில் வழங்கப்படும் டிஸ்க் பிரேக்குகள், இரட்டை-பயன்பாடு டயர்கள் மற்றும் முன்பக்க சஸ்பென்ஷனும் வாங்கிய வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக, இதன் முன்பக்க சஸ்பென்ஷன் ஆனது எந்தவொரு சாலைக்கும் ஏற்றதாக விளங்குகிறது.

ரொம்ப காசு எல்லாம் ஆகாது... இந்த 5 எலக்ட்ரிக் சைக்கிள்களை வாங்கி பணத்தை சேமிக்கலாம்!!

எஸ்ஸேல் எனர்ஜி கெட் 1

விலை: ரூ.37,500 - ரூ.39,500

பெடல் மூலமாக கிடைக்கும் ஆற்றல் அதிகமாக இருக்க வேண்டும், அதேநேரம் சவுகரியத்திலும் எந்த குறையும் இருக்க கூடாது என நினைப்போர்க்கானது எஸ்ஸேல் எனர்ஜி கெட் 1. இன்னும் சொல்ல போனால், எல்லா விதமான பயன்பாட்டிற்கும் கெட் 1 இ-சைக்கிள் ஏற்றது என சொல்லலாம்.

ரொம்ப காசு எல்லாம் ஆகாது... இந்த 5 எலக்ட்ரிக் சைக்கிள்களை வாங்கி பணத்தை சேமிக்கலாம்!!

ஏனெனில் இந்த எலக்ட்ரிக் சைக்கிளில் பின் இருக்கை பயணிகளுக்கும் குஷின் வழங்கப்படுகிறது. இத்துடன் கூடுதல் பாதுகாப்பிற்காக முன்பக்கத்தில் ப்ரோஜெக்டர் ஹெட்லைட்டும், பின்பக்கத்தில் டெயில்லைட்டும் கொடுக்கப்படுகின்றன. இதன் பேட்டரியை 11 ஆம்பியர் அல்லது 13 ஆம்பியர் திறனில் வாங்கலாம். இவற்றின் அதிகப்பட்ச ரேஞ்ச் 50கிமீ ஆக உள்ளது.

ரொம்ப காசு எல்லாம் ஆகாது... இந்த 5 எலக்ட்ரிக் சைக்கிள்களை வாங்கி பணத்தை சேமிக்கலாம்!!

ஹீரோ லெக்ட்ரோ எலக்ட்ரிக் சி8

விலை: ரூ.36,999

உங்களால் சற்று பணத்தை செலவழிக்க முடியும் என்றால் இந்த ஹைப்ரிட் எலக்ட்ரிக் சைக்கிள் உங்களுக்கு ஏற்றது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், எலக்ட்ரிக் சி8 -இல் வழங்கப்படும் அதிகப்படியான மெக்கானிக்கல் பாகங்களாலேயே இதன் விலை சற்று அதிகமாக உள்ளது.

ரொம்ப காசு எல்லாம் ஆகாது... இந்த 5 எலக்ட்ரிக் சைக்கிள்களை வாங்கி பணத்தை சேமிக்கலாம்!!

இந்த ஹீரோ லெக்ட்ரோ எலக்ட்ரிக் சைக்கிளின் முன்பக்க சஸ்பென்ஷன், இருசக்கரங்களிலும் உள்ள டிஸ்க் பிரேக்குகள், 7-ஸ்பீடு டிரைவ்ட்ரெயின், மெல்லிய & எடை குறைவான டயர்கள் மற்றும் முன்பக்க எல்இடி ஹெட்லைட் உள்ளிட்டவை நம்மை வெகுவாக வசீகரிக்கின்றன. எலக்ட்ரிக் மோட்டார் செட்-அப் ஆனது ஹீரோ லெக்ட்ரோவின் சி3 மற்றும் சி5 மாடல்களை ஒத்து காணப்படுகிறது.

ரொம்ப காசு எல்லாம் ஆகாது... இந்த 5 எலக்ட்ரிக் சைக்கிள்களை வாங்கி பணத்தை சேமிக்கலாம்!!

பேட்ரி எலக்ட்ரிக் மொபைலிட்டி க்ராஸ்

விலை: ரூ.35,700

இந்த 5 எலக்ட்ரிக் சைக்கிள்களிலேயே 21-ஸ்பீடு டிரைவ்ட்ரெயின் உடன் விற்பனை செய்யப்படும் ஒரே எலக்ட்ரிக் சைக்கிள் இதுதான். அத்துடன் எந்தவொரு சாலைக்கும் ஏற்றதாக விளங்குவது இந்த பேட்ரி எலக்ட்ரிக் சைக்கிளின் மற்றொரு சிறப்பு ஆகும்.

ரொம்ப காசு எல்லாம் ஆகாது... இந்த 5 எலக்ட்ரிக் சைக்கிள்களை வாங்கி பணத்தை சேமிக்கலாம்!!

இதற்காகவே கூடுதல் திடமான ஃப்ரேம், சாதாரண சாலை & ஆஃப்-ரோடு என 2 விதமான சாலைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய டயர்கள், இருசக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் போன்றவை இந்த க்ராஸ் எலக்ட்ரிக் சைக்கிளில் வழங்கப்படுகின்றன. 5 விதங்களாக ஆற்றலை வழங்கும் பெடல் உங்களது அன்றாட ரைடுகளை மேலும் எளிமையாக்கும்.

Most Read Articles
English summary
List of india s five cheapest electric cycles
Story first published: Wednesday, October 26, 2022, 14:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X