தெரியாம போய் காசை வீணாக்காதீங்க... அதிக ரேஞ்சை வழங்கும் எலக்ட்ரிக் 2-வீலர் எதுனு பார்த்து வாங்குங்க!!

எலக்ட்ரிக் வாகனங்களில் பேட்டரி தொழிற்நுட்பமானது கடந்த சில வருடங்களில் கவனிக்கத்தக்க அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இதனாலேயே குறிப்பாக எலக்ட்ரிக் 2-வீலர்கள் பிரிவில் வாகனங்களின் நம்பத்தன்மையும், ரேஞ்சும் முன்னேற்றம் கண்டுள்ளன. இந்த வகையில் அதிக ரேஞ்ச் உடன் இந்தியாவில் விற்பனையில் உள்ள எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை இனி பார்க்கலாம்.

தெரியாம போய் காசை வீணாக்காதீங்க... அதிக ரேஞ்சை வழங்கும் எலக்ட்ரிக் 2-வீலர் எதுனு பார்த்து வாங்குங்க!!

1. கோமகி ரேஞ்சர் - ரூ.1.85 லட்சம்

கோமகி ரேஞ்சர் என்பது தாழ்வான உடலமைப்பை கொண்ட எலக்ட்ரிக் பைக்காகும். இதில் பொருத்தப்படும் 3.6kWh திறன் கொண்ட பேட்டரி ஆனது அதிகப்பட்சமாக 220கிமீ தொலைவிற்கு சிங்கிள்-சார்ஜில் பயணிப்பதற்கு ஏற்றதாக உள்ளது. இதன் பேட்டரி 4 கிலோவாட்ஸ் BLDC எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் க்ரூஸர் பைக்கின் டாப்-ஸ்பீடு 80kmph ஆகும்.

தெரியாம போய் காசை வீணாக்காதீங்க... அதிக ரேஞ்சை வழங்கும் எலக்ட்ரிக் 2-வீலர் எதுனு பார்த்து வாங்குங்க!!

2. ஒபென் எலக்ட்ரிக் ரோர் - ரூ.1.02 லட்சம்

இந்தியாவில் குறைந்த விலையில் நீண்ட ரேஞ்சை வழங்கக்கூடிய எலக்ட்ரிக் 2-வீலராக ஒபென் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ரோர் இ-பைக் விளங்குகிறது. ஏனெனில் இதில் பொருத்தப்படும் 4.4kWh பேட்டரி ஆனது அதிகப்பட்சமாக 200கிமீ வரையில் ரேஞ்சை வழங்கக்கூடியதாக சான்றளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது சோதனை களத்தில். இருப்பினும், நிஜ உலக சாலைகளில் 150கிமீ ரேஞ்சை நிச்சயமாக பெற முடியும்.

தெரியாம போய் காசை வீணாக்காதீங்க... அதிக ரேஞ்சை வழங்கும் எலக்ட்ரிக் 2-வீலர் எதுனு பார்த்து வாங்குங்க!!

3. ஓலா எலக்ட்ரிக் எஸ்1 பிரோ - ரூ.1.39 லட்சம்

இந்தியாவில் கடந்த 1 வருடத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்று, எஸ்1 பிரோ ஆகும். ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பிரீமியம் தர இ-ஸ்கூட்டராக விளங்கும் இதில் 8.5 கிலோவாட்ஸ் திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் ஆனது 4kWh பேட்டரி உடன் பொருத்தப்படுகிறது. இவற்றின் மூலமாக அதிகப்பட்சமாக 181கிமீ ரேஞ்சை பெறலாம் என ARAI சான்றளித்துள்ளது.

தெரியாம போய் காசை வீணாக்காதீங்க... அதிக ரேஞ்சை வழங்கும் எலக்ட்ரிக் 2-வீலர் எதுனு பார்த்து வாங்குங்க!!

4. டோர்க் மோட்டார்ஸ் க்ராடோஸ்/ க்ராடோஸ் ஆர் - ரூ.1.22 லட்சம்/ ரூ.1.37 லட்சம்

டோர்க் மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தான் அதன் க்ராடோஸ் & க்ராடோஸ் ஆர் எலக்ட்ரிக் பைக்குகளின் டெலிவிரிகளை துவங்கியது. இவை இரண்டும் சோதனையில் 180கிமீ ரேஞ்சை வழங்கக்கூடியவைகளாக சான்றளிக்கப்பட்டுள்ளன. இவற்றில், கூடுதல் செயல்படுதிறனினாலும், கூடுதல் வசதிகளினாலும் க்ராடோஸ் ஆர் ரூ.15,000 வரையில் விலைமிக்கதாக விளங்கினாலும், இவை இரண்டிலும் ஒரே மாதிரியான 4kWh பேட்டரி தொகுப்பே பொருத்தப்படுகிறது.

தெரியாம போய் காசை வீணாக்காதீங்க... அதிக ரேஞ்சை வழங்கும் எலக்ட்ரிக் 2-வீலர் எதுனு பார்த்து வாங்குங்க!!

5. ஒடிசி ஹாவ்க் ப்ளஸ் - ரூ.1.17 லட்சம்

குஜராத்தை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் ஒன்றான ஒடிசி அதன் ஹாவ்க் ப்ளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 170கிமீ ரேஞ்ச் உடன் விற்பனை செய்கிறது. இந்த இ-ஸ்கூட்டரில் 2.88kWh லித்தியம்-இரும்பு பேட்டரி மற்றும் 1.8 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது. இவற்றின் உதவியுடன் அதிகப்பட்சமாக மணிக்கு 45கிமீ வேகத்தில் மட்டுமே ஹாவ்க் ப்ளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் செல்ல முடியும்.

தெரியாம போய் காசை வீணாக்காதீங்க... அதிக ரேஞ்சை வழங்கும் எலக்ட்ரிக் 2-வீலர் எதுனு பார்த்து வாங்குங்க!!

6. ரிவோல்ட் ஆர்வி400 - ரூ.1.19 லட்சம்

இந்தியாவில் முதல்முறையாக அறிமுகமான எலக்ட்ரிக் பைக்குகளுள் ஒன்று, ரிவோல்ட் ஆர்வி400 ஆகும். 3.25kWh பேட்டரி தொகுப்புடன் வழங்கப்படும் இந்த எலக்ட்ரிக் பைக் ஈக்கோ மோடில் அதிகப்பட்சமாக 150கிமீ ரேஞ்சை வழங்கக்கூடியதாக உள்ளது. இதன் பேட்டரி தனது இயக்க ஆற்றலை 3 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாருக்கு வழங்குகிறது. ஆர்வி400 பைக்கின் டாப்-ஸ்பீடு 85kmph ஆகும்.

தெரியாம போய் காசை வீணாக்காதீங்க... அதிக ரேஞ்சை வழங்கும் எலக்ட்ரிக் 2-வீலர் எதுனு பார்த்து வாங்குங்க!!

7. ஏத்தர் 450எக்ஸ் ஜென் 3 - ரூ.1.39 லட்சம்

இந்தியாவின் செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டராக ஏத்தர் 450எக்ஸ் மாடலை சொல்லலாம். இதன் 3ஆம் தலைமுறை வெர்சன் தற்சமயம் விற்பனையில் இருக்கும் நிலையில், ஏத்தர் 450எக்ஸ் சோதனை நிலையில் 146கிமீ ரேஞ்சை வழங்கக்கூடியதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நிஜ உலக ரேஞ்சாக 105கிமீ வரையில் பெறலாம். இதன் 3ஆம் தலைமுறையில் பெரிய அளவிலான 3.97kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது.

தெரியாம போய் காசை வீணாக்காதீங்க... அதிக ரேஞ்சை வழங்கும் எலக்ட்ரிக் 2-வீலர் எதுனு பார்த்து வாங்குங்க!!

8. ஓலா எலக்ட்ரிக் எஸ்1 - ரூ.99,999

எஸ்1 ப்ரோ 181கிமீ வரையிலான ரேஞ்சில் விற்பனை செய்யப்படும் நிலையில், அதன் விலை குறைவான வேரியண்ட்டான எஸ்1 மாடல் 141கிமீ ரேஞ்சை வழங்கக்கூடியதாக ARAI-ஆல் சான்றளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், எஸ்1 ப்ரோ வேரியண்ட்டில் 4kWh பேட்டரி தொகுப்பும், எஸ்1 வேரியண்ட்டில் சற்று சிறிய 3kWh பேட்டரி தொகுப்பும் தான் பொருத்தப்படுகிறது. மற்றப்படி எஸ்1 ப்ரோவில் வழங்கப்படும் 8.5 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் தான் இந்த மாடலிலும் வழங்கப்படுகிறது.

தெரியாம போய் காசை வீணாக்காதீங்க... அதிக ரேஞ்சை வழங்கும் எலக்ட்ரிக் 2-வீலர் எதுனு பார்த்து வாங்குங்க!!

9. ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா சி.எக்ஸ் - ரூ.77,490

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆப்டிமா சிஎக்ஸ் ஆனது தற்சமயம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுகின்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டராகும். இதற்கு முக்கிய காரணம், இதன் குறைவான விலையும், 140கிமீ வரையிலான ரேஞ்சும் ஆகும். இந்த இ-ஸ்கூட்டரில் 1.53kWh பேட்டரியும், 1.2 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் மணிக்கு 45கிமீ வேகத்திற்கு மேல் செல்ல இயலாது.

தெரியாம போய் காசை வீணாக்காதீங்க... அதிக ரேஞ்சை வழங்கும் எலக்ட்ரிக் 2-வீலர் எதுனு பார்த்து வாங்குங்க!!

10. ஒகினவா ஐபிரைஸ் ப்ளஸ் - ரூ.1.13 லட்சம்

இந்த ஒகினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.3kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு பொருத்தப்படும் நிலையில், ஐபிரைஸ் ப்ளஸ்-இல் சிங்கிள் சார்ஜில் அதிகப்பட்சமாக 139கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும். ஆனால் இதற்கு பல்வேறு சூழல் காரணிகள் உதவ வேண்டும். ஆதலால் நிஜ உலகில் அதிகப்பட்சமாக 100கிமீ ரேஞ்சை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பெறலாம்.

Most Read Articles
English summary
List of indias top 10 electric two wheelers with highest claimed range
Story first published: Wednesday, September 14, 2022, 13:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X