புகழ்பெற்ற LML நிறுவனம் 3 எலெக்ட்ரிக் டூ-வீலரை களமிறக்க போகுதாம்! எப்போன்ற செய்தி உங்க காதுக்கு வந்துடுச்சா?..

புகழ்பெற்ற எல்எம்எல் (LML) நிறுவனம் அதன் மூன்று கான்செப்ட் மாடல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வெளியீடு செய்திருக்கின்றது. இவற்றையே நிறுவனம் விரைவில் விற்பனைக்கும் அது கொண்டு வர இருக்கின்றது. இந்த வாகனங்கள்குறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

புகழ்பெற்ற LML நிறுவனம் 3 எலெக்ட்ரிக் டூ-வீலரை களமிறக்க போகுதாம்... எப்போன்ற செய்தி உங்களுக்கு தெரிய வந்திடுச்சா?

பழம்பெரும் வாகன உற்பத்தி நிறுவனமான எல்எம்எல் (LML) ஒட்டுமொத்தமாக மூன்று எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இருசக்கர வாகனங்களின் கான்செப்ட் மாடலையே நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. நிறுவனத்தின் மறு வருகைகுறித்த தகவல்கள் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக வெளியாகி வந்தநிலையில் இப்போது கான்செப்ட் மாடல்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன.

புகழ்பெற்ற LML நிறுவனம் 3 எலெக்ட்ரிக் டூ-வீலரை களமிறக்க போகுதாம்... எப்போன்ற செய்தி உங்களுக்கு தெரிய வந்திடுச்சா?

நிறுவனத்தின் இந்த செயல் எல்எம்எல் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஓரியன், மூன்ஷாட் மற்றும் ஸ்டார் ஆகிய மூன்று மாடல்களின் கான்செப்டையே எல்எம்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனங்களையே அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அந்நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

புகழ்பெற்ற LML நிறுவனம் 3 எலெக்ட்ரிக் டூ-வீலரை களமிறக்க போகுதாம்... எப்போன்ற செய்தி உங்களுக்கு தெரிய வந்திடுச்சா?

இதில், ஸ்டார் எனும் இருசக்கர வாகனம் ஏற்கனவே எல்எம்எல் நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்பாக இருந்தது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனம் 1999-2017 இல் மிகவும் ஆக்டீவாக செயல்பட்டு வந்தகாலத்தில் நிறுவனத்தால் விற்பனைக்கு வழங்கப்பட்டதே இந்த ஸ்டார் இருசக்கர வாகனம் ஆகும். நிறுவனத்தின் மறு அவதாரத்தை அடுத்து இந்த வாகனத்திற்கும் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற LML நிறுவனம் 3 எலெக்ட்ரிக் டூ-வீலரை களமிறக்க போகுதாம்... எப்போன்ற செய்தி உங்களுக்கு தெரிய வந்திடுச்சா?

முற்றிலும் புதிய படைப்பாக இதனை எல்எம்எல் உருவாக்கியிருக்கின்றது. மேக்ஸி ரக ஸ்கூட்டராகவே அது உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் அட்டகாசமான ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்களுடன் இந்த வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இதன் கான்செப்ட் மாடல் உருவாக்கம் அமைந்துள்ளது.

புகழ்பெற்ற LML நிறுவனம் 3 எலெக்ட்ரிக் டூ-வீலரை களமிறக்க போகுதாம்... எப்போன்ற செய்தி உங்களுக்கு தெரிய வந்திடுச்சா?

ட்யூவல் டோன் நிறம், ஷார்ப்பான ஹெட்லேம்ப் க்ளஸ்டர், கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அலாய் வீல்கள், பன்முக சிறப்பு வசதிகளைக் கொண்ட திரை உள்ளிட்டவை ஸ்டார் கான்செப்ட் மாடலில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, டெலிஸ்கோபிக் ஃப்ரண்ட் ஃபோர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன், முன் மற்றும் பின் பக்கத்தில் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவையும் அதில் இடம் பெற்றிருக்கின்றன.

புகழ்பெற்ற LML நிறுவனம் 3 எலெக்ட்ரிக் டூ-வீலரை களமிறக்க போகுதாம்... எப்போன்ற செய்தி உங்களுக்கு தெரிய வந்திடுச்சா?

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகை இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் முன்னணி நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கடுமையான போட்டியை வழங்க இருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், ஏத்தர் 450எக்ஸ் மற்றும் ஓலா எஸ்1 உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கே நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

புகழ்பெற்ற LML நிறுவனம் 3 எலெக்ட்ரிக் டூ-வீலரை களமிறக்க போகுதாம்... எப்போன்ற செய்தி உங்களுக்கு தெரிய வந்திடுச்சா?

இவற்றிற்கு ஆப்பு வைக்கும் வகையிலேயே எல்எம்எல் நிறுவனம் அதன் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இது ரூ. 1.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வாகனத்தை போலவே அதிக அம்சங்கள் கொண்டதாக ஓரியன் உருவாக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற LML நிறுவனம் 3 எலெக்ட்ரிக் டூ-வீலரை களமிறக்க போகுதாம்... எப்போன்ற செய்தி உங்களுக்கு தெரிய வந்திடுச்சா?

இது மின்சாரத்தால் இயங்கும் இ-சைக்கிள் ஆகும். ஓரியன் என்கிற பெயர் கிரேக்க வார்த்தையில் இருந்து ஈர்க்கப்பட்டதாகும். இதன் பொருள் விண்மீன் என்பதாகும். ஓரியன் வேற்று கிரகத்தில் தயாரிக்கப்பட்ட வாகனம் என்ற உணர்வை கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த பெயரை எல்எம்எல் பயன்படுத்தியிருக்கின்றது.

புகழ்பெற்ற LML நிறுவனம் 3 எலெக்ட்ரிக் டூ-வீலரை களமிறக்க போகுதாம்... எப்போன்ற செய்தி உங்களுக்கு தெரிய வந்திடுச்சா?

இந்த ஃபீலை கொடுக்க வேண்டும் என்பதற்காக பன்முக சிறப்பு வசதிகளை இந்த வாகனத்தில் எல்எம்எல் கொடுத்திருக்கின்றது. அந்தவகையில் இருசக்கர வாகனத்தின் உருவாக்கத்திற்காக 6061 அலாய் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் பட்டாம்பூச்சி ஸ்டைலிலான ஹேண்டில்பார், பெடலெக், ஐபி67 தர பேட்டரி மற்றும் இன்பில்ட் ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பன்முக சிறப்பு வசதிகள் இ-சைக்கிளில் கொடுக்கப்பட்டுள்ளன.

புகழ்பெற்ற LML நிறுவனம் 3 எலெக்ட்ரிக் டூ-வீலரை களமிறக்க போகுதாம்... எப்போன்ற செய்தி உங்களுக்கு தெரிய வந்திடுச்சா?

இதற்கு அடுத்தபடியாக மூன்றாவது தயாரிப்பாக இருக்கும் மூன்ஷூட்டிலும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஃப்ளை-பை-ஒயர் மற்றும் பன்முக ரைடிங் மோட்கள் உள்ளிட்டவற்றுடன் இந்த வாகனம் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இத்துடன், போர்டபிள் பேட்டரியும் இந்த வாகனம் இடம் பெற இருக்கின்றது. ஆகையால், எல்எம்எல் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் இந்த மூன்று தயாரிப்புகளும் மிகுந்த அட்டகாசமான வாகனங்களாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது.

Most Read Articles
English summary
Lml unveils three concept version electric two wheeler models
Story first published: Friday, September 30, 2022, 10:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X