இதுகளுக்கு முன்னாடி பெட்ரோல் வண்டிலாம் சுத்த வேஸ்ட்! நம்ம ஊரு ஆட்களுக்காகவே விலை குறைவா கிடைக்கும் இ-ஸ்கூட்டர்

நம்மில் பலர் மின்சார வாகனம் என்றாலே பல லட்சம் விலைக் கொண்டதாக இருக்கும் என எண்ணிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அந்த காலம் மாறிவிட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் முயற்சியால் மின்சார வாகனங்களின் விலை பல மடங்குக் குறைந்துக் காணப்படுகின்றது.

மின் வாகன விலையைக் குறைக்கும் பொருட்டு மத்திய அரசு ஃபேம்2 எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இதன் முக்கிய குறிக்கோளே நாட்டில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பது ஆகும். இதுமட்டுமில்லைங்க, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாக இருக்கின்றது. தற்போது நம் நாட்டில் பல மடங்கு மின்சார வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்துக் காணப்படுகின்றது. இதற்கு ஃபேம்2 திட்டமே காரணமாக இருக்கின்றது. இதுமட்டுமின்றி, சில மாநில அரசுகளின் பங்களிப்பும் இந்த வளர்ச்சியில் உள்ளது. ஆம், மாநில அரசுகள் சில அதன் சார்பில் மானியங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இதன் விளைவாக ஏழை மற்றும் எளிய மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்த மின்சார வாகனங்கள் தற்போது அனைத்து தரப்பு மக்களாலும் எளிதில் நுகரக் கூடியதாக மாறியிருக்கின்றது. தமிழகத்தில்கூட மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத சாலை வரி ரத்து திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இதுபோன்ற பன்முக முயற்சிகளின் காரணத்தினாலேயே எலெக்ட்ரிக் வாகனங்கள் பலவற்றின் விலை பல மடங்கு சரிந்துக் காணப்படுகின்றது. அந்தவகையில், சந்தையில் மலிவு விலையில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

அவோன் இ-ஸ்கூட்டர்:

இந்தியாவில் மிகக் குறைவான விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்கூட்டர் மாடல்களில் அவோன் இ ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலும் ஒன்று. இதற்கு ரூ. 45 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 215 வாட் பிஎல்டிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக மணிக்கு 24 கிமீ வேகத்தில் மட்டுமே பயணிக்கும். இது சற்று குறைவான வேக திறன் என்பதால் இதை சாலையில் வைத்து இயக்க பதிவு சான்று அல்லது லைசென்ஸ் கட்டாயம் இல்லை.

இதன் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் ஓர் ஃபுல் சார்ஜில் 65 கிமீ ரேஞ்ஜை இந்த வாகனம் வழங்கும். இதற்காக அவோன் நிறுவனம் 48 V / 20 Ah ஏஎச் பேட்டரி பேக்கை பயன்படுத்தியிருக்கின்றது. மிகக் குறைவான தூர இடைவெளியைக் கொண்ட பயணங்களுக்கு உதவும் விதமாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அவோன் நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. குறிப்பாக, அருகாமையில் உள்ள சந்தைக்கு சென்று வருவது, பிள்ளைகளை பள்ளிக் கூடம் மற்றும் டியூசன் அழைத்துச் செல்லுதல் போன்ற பயன்பாட்டை மையமாகக் கொண்டே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டிருப்பது என்பது குறிப்பிடத்தகுந்தது.

பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1:

அதிக பிரீமியம் தர அம்சங்களுடன் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் லிஸ்டில் பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 மாடலும் ஒன்று. இந்த வாகனத்தை பவுன்ஸ் நிறுவனம் பேட்டரி உடனும், பேட்டரி இல்லாதது என்றும் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் பேட்டரி இல்லாத தேர்வே குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். அதன் விலை ரூ. 45,099 ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கான பேட்டரியை நிறுவனம் சந்தா திட்டத்தின்கீழ் வாங்கிக் கொள்ளலாம். 48 V/ 39 Ah பேட்டரியையே சேவையின்கீழ் நிறுவனம் விற்பனைக்கு வழங்கும். இது ஓர் ஃபுல் சார்ஜில் 85 கிமீ ரேஞ்ஜை வழங்கும்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஹீரோ எலெக்ட்ரிக் ஃபிளாஷ்:

நாட்டின் முதன்மையான எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமாக ஹீரோ எலெக்ட்ரிக் விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனத்தின் மலிவு விலை கொண்ட தயாரிப்பாக ஃபிளாஷ் இருக்கின்றது. இதன் இப்போதைய விலை ரூ. 46,640 ஆகும். இதன் உயர்நிலை தேர்வே ரூ. 59,640க்குதான் விற்கப்படுகின்றது. இந்த விலை விபரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹீரோ ஃபிளாஷின் அதிகபட்ச ஸ்பீடே மணிக்கு 25 கிமீ மட்டுமே ஆகும். இது ஓர் ஃபுல் சார்ஜில் 85 கிமீ ரேஞ்ஜை வழங்கும்.

அவன் டிரென்ட் இ:

இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் அவன் டிரென்ட் இ-யும் ஒன்று. அவன் டிரெண்ட் இரு விதமான வேரியண்டுகளில் இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஒற்றை பேட்டரி பேக் அல்லது இரட்டை பேட்டரி பேக் இந்த தேர்விலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் ஒற்றை பேட்டரி பேக்கைக் கொண்டதன் விலையே ரூ. 56,900 ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும். அதுவே, இரட்டை பேட்டரி பேக்குகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் டிரெண்ட் இ தேர்வை வாங்கினால் ஓர் முழு சார்ஜில் 110 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த இரு தேர்வுகளிலும் 800 வாட் பிஎல்டிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஈவி ஆஹாவா:

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் நம்முடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பட்டியலின் கடைசி வாகனம் ஆகும். மேலும், இந்த லிஸ்டின் சற்று அதிக விலைக் கொண்ட தேர்வும் கூட. இதன் விலை ரூ. 62,499 ஆகும். இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதிக விலைக்கேற்ப அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டதாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கின்றது. ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு, ஜியோ டேக்கிங் மற்றும் ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். ஆகையால், இதை வைத்திருக்க பதிவு சான்று தேவைப்படாது. அதேபோல் இதனை இயக்க லைசென்ஸ் கட்டாயம் தேவையில்லை. ஓர் முழு சார்ஜில் 60 கிமீ முதல் 70 கிமீ தூரம் வரை பயணிக்கக் கூடிய 60 V/ 27 Ah பேட்டரி பேக்கே ஈவி ஆஹாவாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சிறப்பு வசதிகளாக பாட்டில் கேஸ், புஷ் ஸ்டார்ட்/ ஸ்டாப் அம்சம் மற்றும் யுஎஸ்பி போர்ட் உள்ளிட்டவை இதில் வழங்கப்பட்டிருக்கும்.

Most Read Articles

English summary
Low budget e scooter
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X