பார்க் செய்ய பெருசா இட வசதி இல்லாதவங்க இந்த காரை வாங்கலாம்... இந்தியாவின் மிகசிறிய காராக வருகிறது எம்ஜி ஏர்!

புகழ்பெற்ற எம்ஜி நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஏற்கனவே நிறுவனம் இந்தியாவில் இசட்எஸ் இவி எனும் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் விலை சற்று அதிகம் ஆகும்.

தற்போதையே நிலவரப்படி ரூ. 22.58 லட்சம் தொடங்கி ரூ. 26.50 லட்சம் வரையிலான விலையில் இந்த கார் விற்கப்பட்டு வருகின்றது. இது அனைவராலும் வாங்கக் கூடியவிலை அல்ல என்பதால், பலருக்கு எம்ஜியின் இந்த தயாரிப்பு (இசட்எஸ் இவி எலெக்ட்ரிக் கார்) எட்டாக் கனியாக இருக்கின்றது. இந்த நிலையை மாற்றும் விதமாகவே நிறுவனம் வெகுவிரைவில் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் காரை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது.

மின்சார கார்

ஏர் இவி எனும் எலெக்ட்ரிக் காரே அதுவாகும். இது இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் பிரிவை மையமாகக் கொண்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவின் மலிவு விலை மின்சார காராக மட்டுமே வரப் போவதில்லை, அது, நாட்டின் மிகச் சிறிய எலெக்ட்ரிக் வாகனமாகவும் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதுகுறித்த தகவலே தற்போது வெளியாகி உள்ளன.

அதாவது, ஏர் இவி 2.9 மீட்டர் அளவில் உருவாக்கப்பட்டிருப்பதாக முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் வீல் பேஸும் கூட 2010 மிமீ என தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அளவுகளின் வாயிலாக எம்ஜி ஏர் இவி எலெக்ட்ரிக் கார் மிக மிக சிறிய அளவில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகியுள்ளது. எம்ஜி நிறுவனம் இந்த மின்சார காரை பாக்ஸ் போன்ற தோற்றத்தில் உருவாக்கியிருக்கின்றது.

இந்த தோற்றத்தில் சில புதுமுக வாகன உற்பத்தியாளர்களும் தங்களின் மைக்ரோ ரக கார்களை உருவாக்கி கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே பிஎம்வி நிறுவனம் அதன் ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரை பெட்டி போன்ற ஸ்டைலிலேயே உருவாக்கியிருக்கின்றது. இது ஏற்கனவே இந்தியாவில் விற்பனைக்கும் வந்துவிட்டது. இந்த மாதிரியான தயாரிப்புகளிடம் இருந்து வேறுபட்டு காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக ஏர் இவியின் டிசைனில் மாறுபட்ட யுக்தியை எம்ஜி கையாண்டிருக்கின்றது. முற்றிலும் வித்தியாசமான ஸ்டைலில் அதன் முகப்பு பகுதி உள்ளது.

இந்த முகப்பு பகுதியிலேயே மாறுபட்ட ஸ்டைலிலான ஹெட்லைட், இன்டிகேட்டர் லைடுகள், பம்பர் உள்ளிட்டவை நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றுடன் காருக்கு அசத்தலான தோற்றத்தை வழங்கும் விதமாக சிறிய வீல்கள் மற்றும் டூயல் டோன் ஆகியவற்றால் ஏர் இவியை எம்ஜி அலங்கரித்திருக்கின்றது. முன்னதாக வெளியாகிய தகவல்களின்படி இந்த காரில் எம்ஜி நிறுவனம் 50 kW மின் மோட்டார் மற்றும் 20-25 kWh பேட்டரி பேக் ஆகியவை இடம் பெற இருப்பது தெரிய வந்துள்ளது.

எம்ஜி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி இந்தியாவில் வெளியீடு செய்ய இருக்கின்றது. இது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் எனில் நிறுவனத்தின் இரண்டாவது மின்சார காராக இருக்கும். இந்த காரை ஏற்கனவே இந்தோனேஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விற்பனைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. அங்கு, வுல்லிங் ஏர் இவி (Wuling Air EV) என்ற பெயரில் அந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஏர் இவி ஓர் 4 இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் காராகும். இந்த காரில் இரு பெரிய திரைகள் வழங்கப்பட்டிருக்கும். இரண்டும் 10.25 அங்குல அளவு கொண்டவை ஆகும். இதில் ஒன்று இன்ஃபோடெயின்மென்டாக செயல்படும். இது வாய்ஸ் கன்ட்ரோல், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிக் கொண்டது. இதுதவிர, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் ஓஆர்விஎம் மற்றும் ஏர் பேக்குகள் போன்ற பன்முக அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கும்.

இந்தியாவில் மின்சரா கார்களுக்கு தற்போது நல்ல டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே எம்ஜி நிறுவனம் இந்தியாவின் மலிவு விலை கார் பிரியர்களைக் கவரும் விதமாக ஏர் இவி-யை விரைவில் களமிறக்க இருக்கின்றது. தற்போது இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக டாடா நெக்ஸான் இவி இருக்கின்றது. இந்த காரின் விற்பனையில் புதிய ஏர் இவியின் வருகை பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Mg air to be smallest ev in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X