நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளில் எது சிறந்தது? ஹோண்டா சிபி300எஃப் vs டோமினார் 400 vs கேடிஎம் 250 ட்யூக்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அதன் புத்தம் புதிய மோட்டார்சைக்கிளாக சிபி300எஃப் மாடலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷன் என மிகவும் அட்வான்ஸான தொழிற்நுட்பங்களுடன் இந்திய இளம் தலைமுறையினரை கவரும் விதமாக புதிய சிபி300எஃப் பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளில் எது சிறந்தது? ஹோண்டா சிபி300எஃப் vs டோமினார் 400 vs கேடிஎம் 250 ட்யூக்

ஹோண்டா நிறுவனத்தால் அட்வான்ஸ்டு ஸ்ட்ரீட் ஃபைட்டர் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பைக்கிற்கு இந்திய சந்தையில் விற்பனையில் பஜாஜ் டோமினார் 400 மற்றும் கேடிஎம் ட்யூக் 250 பைக்குகள் நேரெதிர் போட்டி மாடல்களாக விளங்குகின்றன. இவை மூன்றிற்கும் இடையே இருக்கும் ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை இனி பார்க்கலாம்.

நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளில் எது சிறந்தது? ஹோண்டா சிபி300எஃப் vs டோமினார் 400 vs கேடிஎம் 250 ட்யூக்

என்ஜின்

என்ஜினை பொறுத்தவரையில் டோமினார் 400 ஆனது அதிக இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய என்ஜினை பெறுகிறது. இதன் என்ஜின் அதிகப்பட்சமாக 8800 ஆர்பிஎம்-இல் 40 பிஎஸ் மற்றும் 6500 ஆர்பிஎம்-இல் 35 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஹோண்டாவின் புதிய சிபி300எஃப் பைக்கில் 293.52சிசி ஆயில்-கூல்டு, ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளில் எது சிறந்தது? ஹோண்டா சிபி300எஃப் vs டோமினார் 400 vs கேடிஎம் 250 ட்யூக்

இது 7500 ஆர்பிஎம்-இல் 24 பிஎஸ் மற்றும் 5500 ஆர்பிஎம்-இல் 25.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய திறன் கொண்டதாக உள்ளது. கேடிஎம் 250 ட்யூக் பைக்கில் 248.8சிசி லிக்யுடு-கூல்டு ஃப்யுல்-இன்ஜெக்‌ஷன் என்ஜின் பொருத்தப்படுகிறது. இவை மூன்றில் ஹோண்டா சிபி300எஃப் பைக் மட்டுமே ஆயில்-கூல்டு என்ஜினை கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளில் எது சிறந்தது? ஹோண்டா சிபி300எஃப் vs டோமினார் 400 vs கேடிஎம் 250 ட்யூக்

விலை

400சிசி என்ஜினை பெற்றாலும் பஜாஜ் டோமினார் 400 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.22 லட்சம் மட்டுமே. அதாவது தற்போது நாம் பார்த்து கொண்டிருக்கும் 3 பைக்குகளில் இதன் விலையே குறைவாகும். ஹோண்டாவின் புதிய சிபி300எஃப் பைக் ரூ.2.26 லட்சம் என்கிற தொகையை ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக பெற்றுவந்துள்ளது.

நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளில் எது சிறந்தது? ஹோண்டா சிபி300எஃப் vs டோமினார் 400 vs கேடிஎம் 250 ட்யூக்

கேடிஎம் 250 ட்யூக் பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.30 லட்சமாகும். அதாவது இந்த 3 நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைகளாகவே உள்ளன. இவற்றில் டோமினார் 400 மற்றும் கேடிஎம் 250 ட்யூக் பைக்குகள் புனேவில் உள்ள பஜாஜ் ஆட்டோவின் சாகான் தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்படுகின்றன.

நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளில் எது சிறந்தது? ஹோண்டா சிபி300எஃப் vs டோமினார் 400 vs கேடிஎம் 250 ட்யூக்

சஸ்பென்ஷன் & பிரேக்

இந்த 3 பைக்குகளிலும் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் தான் வழங்கப்படுகின்றன. அதேபோல் பிரேக்கிங் பணியையும் இவற்றில் முன் & பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகளே கவனித்து கொள்கின்றன. ஆனால் டிஸ்க் ரோடார்களின் அளவுகள் மூன்றிலும் வேறுப்படுகின்றன.

நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளில் எது சிறந்தது? ஹோண்டா சிபி300எஃப் vs டோமினார் 400 vs கேடிஎம் 250 ட்யூக்

அதாவது, புதிய ஹோண்டா சிபி300எஃப் பைக்கில் முன்பக்க டிஸ்க் ரோடாரின் அளவு 276மிமீ, பின்பக்க டிஸ்க் ரோடாரின் அளவு 220மிமீ ஆகும். அதுவே டோமினார் 400 & கேடிஎம் ட்யூக்400 பைக்குகளில் முன் டிஸ்க் ரோடார் 320மிமீ-லும், பின் டிஸ்க் ரோடார் 230மிமீ-லும் வழங்கப்படுகின்றன. பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு இவை மூன்றிலும் ட்யூவல்-சேனல் ஏபிஎஸ் உள்ளன.

நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளில் எது சிறந்தது? ஹோண்டா சிபி300எஃப் vs டோமினார் 400 vs கேடிஎம் 250 ட்யூக்

மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்கள்

இந்த 3 நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளிலும் முன்பக்க & பின்பக்க ஹெட்லைட் & டெயில்லைட்கள் எல்இடி-ஆக பொருத்தப்படுகின்றன. அதேபோல் இவை மூன்று பைக்குகளும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை பெறுகின்றன.

நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளில் எது சிறந்தது? ஹோண்டா சிபி300எஃப் vs டோமினார் 400 vs கேடிஎம் 250 ட்யூக்

இந்த 3 பைக்குகளிலும் யுஎஸ்பி சார்ஜர் மற்றும் ரைட் மோட்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை. ஆனால் ப்ளூடூத் இணைப்பு வசதியை ஹோண்டாவின் புதிய சிபி300எஃப் பைக் மட்டும் பெற்றுள்ளது. மற்றவை இரண்டும் கொண்டில்லை.

நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளில் எது சிறந்தது? ஹோண்டா சிபி300எஃப் vs டோமினார் 400 vs கேடிஎம் 250 ட்யூக்

பரிமாண அளவுகள்

பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், பஜாஜ் டோமினார் 400 1453மிமீ-இல் அதிக வீல்பேஸை கொண்டுள்ளது. அதாவது முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் இந்த டோமினார் பைக்கில் தான் அதிகமாக உள்ளது. ஹோண்டா சிபி300எஃப் மற்றும் கேடிஎம் 250 ட்யூக் பைக்குகள் இரண்டும் முறையே 1390மிமீ மற்றும் 1357மிமீ அளவுகளில் தான் வீல்பேஸை கொண்டுள்ளன.

நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளில் எது சிறந்தது? ஹோண்டா சிபி300எஃப் vs டோமினார் 400 vs கேடிஎம் 250 ட்யூக்

ஆனால் க்ரவுண்ட் க்ளியரென்ஸ், அதாவது தரையில் இருந்து பைக்கின் அடித்தளம் உள்ள உயரமானது புதிய ஹோண்டா சிபி300எஃப் பைக்கில் 177மிமீ-ஆக அதிகமாக உள்ளது. மற்றவை 150மிமீ-160மிமீ-களுக்கு உள்ளாகவே கொண்டுள்ளன. தரையில் இருந்து ஓட்டுனர் இருக்கை ஆனது கேடிஎம் 250 ட்யூக் பைக்கில் அதிகமாக உள்ளது. எடையில், டோமினார் 400 எடைமிக்கதாக உள்ளது.

Most Read Articles
English summary
New honda cb300f bajaj dominar 400 vs ktm duke 250
Story first published: Sunday, August 14, 2022, 22:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X