கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்தில் மாடிஃபை செய்யப்பட்ட யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்!! இது ஸ்கூட்டரின் 75% விலையாச்சே..!

சுமார் ரூ.98 ஆயிரம் மதிப்பில் யமஹா ஏரோக்ஸ் 155 (Yamaha Aerox 155) ஸ்கூட்டர் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை ஏரோக்ஸ் ஸ்கூட்டரை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்தில் மாடிஃபை செய்யப்பட்ட யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்!! இது ஸ்கூட்டரின் 75% விலையாச்சே..!

பிரபலமான ஆர்15 மோட்டார்சைக்கிள் அடிப்படையிலான ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரை யமஹா கடந்த 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. சில ஆசிய நாட்டு சந்தைகளில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இது அளவில் பெரியதாக மேக்ஸி-ஸ்கூட்டராக கருதப்படுகிறது. மேலும், இந்தியாவில் தற்போதைகு குறைவான விலையில் கிடைக்கக்கூடிய மேக்ஸி ரக ஸ்கூட்டராகவும் இது விளங்குகிறது.

கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்தில் மாடிஃபை செய்யப்பட்ட யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்!! இது ஸ்கூட்டரின் 75% விலையாச்சே..!

ஸ்டைலான தோற்றத்துடன், அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றதாக விளங்கும் ஏரோக்ஸ் 155 பைக் ஆர்வலர்கள் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. இருப்பினும் மற்ற ஏரோக்ஸ் ஸ்கூட்டர்களில் இருந்து தனது வாகனம் வேறுப்பட்டு தெரிய வேண்டும் என விரும்புவோர்க்காக பெங்களூரை சேர்ந்த டிஸ்மோ டெக் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் இந்த யமஹா மேக்ஸி-ஸ்கூட்டருக்கான தனிப்பயனாக்க தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்தில் மாடிஃபை செய்யப்பட்ட யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்!! இது ஸ்கூட்டரின் 75% விலையாச்சே..!

Source: Dismotech

இந்த தனிப்பயனாக்க தொகுப்பின் சிறப்பம்சம் என்னவென்றால், இது ஸ்கூட்டரின் தோற்றத்தை மெருக்கேற்றுவது மட்டுமின்றி, ரைடிங் நிலைப்பாடுகளையும் மேம்படுத்துவதாக உள்ளது. ஏனெனில் இந்த தொகுப்பில் யுஎஸ்டி முன்பக்க ஃபோர்க்குகள், பிக்கிபேக் மோனோ-ஷாக், முன்சக்கரத்தில் இரண்டும், பின்சக்கரத்தில் ஒன்றுமாக டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. மேலும் டிஸ்மோ டெக் நிறுவனம் ஸ்கூட்டரின் பிரேக் லிவர்களையும் மாஸ்டர் சிலிண்டர்களுடன் திருத்தியமைத்துள்ளது.

கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்தில் மாடிஃபை செய்யப்பட்ட யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்!! இது ஸ்கூட்டரின் 75% விலையாச்சே..!

இவற்றுடன் புதிய டிசைனில் வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ள அலாய் சக்கரங்களில் நன்கு அகலமான டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்க சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள் தங்க நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் மற்ற முக்கியமான பாகங்களான அலாய் சக்கரங்கள், டிஸ்க் ரோட்டார்கள், மாஸ்டர் சிலிண்டர்கள் மற்றும் பிரேக் காலிபர்கள் உள்ளிட்டவை சிவப்பு & நீலம் என ஸ்கூட்டரின் உடற்நிற கிராஃபிக்ஸிற்கு ஏற்ப முலாம் பூசப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்தில் மாடிஃபை செய்யப்பட்ட யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்!! இது ஸ்கூட்டரின் 75% விலையாச்சே..!

இந்த நிறங்கள் அனைத்தும் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரின் தோற்றத்தினை மேலும் மெருக்கேற்றியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் உண்மையில் இவை எல்லாவற்றையும் விட முக்கியமான மாற்றங்கள் ஸ்கூட்டரின் பின்பக்கத்தில்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது பின் சக்கரத்தை ஸ்கூட்டருடன் இணைக்கும் கம்பியானது நன்கு தாழ்வாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை மறைத்தவாறு கார்பன்-ஃபைபர் வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்தில் மாடிஃபை செய்யப்பட்ட யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்!! இது ஸ்கூட்டரின் 75% விலையாச்சே..!

பின்பக்க மட்கார்ட் நீக்கப்பட்டுள்ளது. அதன் வேலையை பார்ப்பதற்காக பின்பக்கத்தில் டயரை மிகவும் நெருங்கியவாறு சக்கர-கட்டியணைப்பான் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இருக்கை அமைப்பிற்கும், பின் சக்கரத்திற்கும் இடையே நன்கு இடைவெளி ஏற்பட்டுள்ளது. மேலும், பின் சக்கரம் ஸ்கூட்டரில் இருந்து தனித்து தெரிகிறது. இவற்றுடன் ஸ்கூட்டரின் பின்பக்க டெயில்லைட்டின் வடிவமும் திருத்தப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்தில் மாடிஃபை செய்யப்பட்ட யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்!! இது ஸ்கூட்டரின் 75% விலையாச்சே..!

பின்பக்கத்தில் இண்டிகேட்டர்கள் எதுவும் வழங்கப்பட்டுள்ளதுபோல் தெரியவில்லை. எக்ஸாஸ்ட் குழாயும் மேல்நோக்கி வளைக்கப்பட்டதாக, புதியதாக காட்சியளிக்கிறது. பொதுவாகவே, யமஹா ஏரோக்ஸ் 155 சிறப்பான ஹேண்ட்லிங்கை வழங்கக்கூடிய ஸ்கூட்டராக பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த தனிப்பயனாக்க தொகுப்பையும் கூடுதலாக வாங்கி பொருத்தி கொண்டால் பயணம் அனுபவம் செம்ம மாஸாக இருக்கும்.

கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்தில் மாடிஃபை செய்யப்பட்ட யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்!! இது ஸ்கூட்டரின் 75% விலையாச்சே..!

மேலும், பிரேக்கிங் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு குறித்து எந்த கவலையும் இருக்காது. இந்த கூடுதல் ஆக்ஸஸரீ பாகங்கள் எடை குறைவானவைகளாக இருந்தாலும், இவை அதிக எண்ணிக்கைகளில் பொருத்தப்படுவதால் நிச்சயமாக ஸ்கூட்டரின் எடை சற்று அதிகரிக்கும். இதற்காக கவலை வேண்டாம், கட்டாயம் எவரொருவராலும் கண்ட்ரோல் செய்யக்கூடியதாகவே டிஸ்மோ டெக் நிறுவனம் இந்த தொகுப்பை வடிவமைத்திருக்கும்.

கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்தில் மாடிஃபை செய்யப்பட்ட யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்!! இது ஸ்கூட்டரின் 75% விலையாச்சே..!

ஆனால் இந்த தனிப்பயனாக்க தொகுப்பை வாங்குவதுதான் சற்று சிரமமானதாக இருக்கும். ஏனெனில் இந்த தொகுப்பிற்கு சுமார் ரூ.98,000ஐ விலையாக பெங்களூரை சேர்ந்த இந்த கஸ்டமைஸ்ட் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. ஆதலால், பணத்தை பற்றி கவலை இல்லை, ஸ்கூட்டரின் தோற்றமும், செயல்பாடுகளும் மேம்பட வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த தனிப்பயனாக்க தொகுப்பு ஏற்றதாக இருக்கும்.

கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்தில் மாடிஃபை செய்யப்பட்ட யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்!! இது ஸ்கூட்டரின் 75% விலையாச்சே..!

இத்தகைய விலையில் அறிமுகம் செய்யப்பட்டாலும், முதற்கட்டமாக உருவாக்கப்பட்ட இந்த தொகுப்புகளில் ஏகப்பட்டவை ஏற்கனவே விற்பனையாகி விட்டதாக டிஸ்மோ டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை தவிர்த்து ஸ்கூட்டரின் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் 155சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

Most Read Articles
English summary
New updation kit for yamaha aerox 155 scooter introduced for better handling and performance
Story first published: Thursday, March 24, 2022, 15:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X