இந்த பைக்கை இவ்வளவு பேர் புக் பண்ணீட்டாங்களா? இனி ரோட்ல திரும்புன பக்கமெல்லாம் இந்த பைக் தான் ஓடப்போகுது!

ஓபன் எலெக்ட்ரிக் (Oben Electric)நிறுவனத்தின் ரோர் எலெக்ட்ரிக் பைக்கான ரோர் (Rorr) இதுவரை 17 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்றும், இந்த பைக்கின் டெலிவரி 2023ம் ஆண்டு முதல் காலாண்டில் துவங்கும் என்றும் அந்நிறுவனம் சிஇஓ ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

பெங்களூருவைத் தலைமையாகக் கொண்டு துவங்கப்பட்ட நிறுவனம் ஓபன் (Oben), இந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது ரோர் என்ற எலெக்ட்ரிக் பைக்கை பொது பார்வைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த எலெக்ட்ரிக் பைக் பலரது கவனத்தை ஈர்த்தது. பலர் இந்த பைக்கை வாங்க ஆர்வம் காட்டினர். இந்நிலையில் இந்த பைக்கிற்கான முன்பதிவு துவங்கப்பட்டது. முன்பதிவிற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் 2022 தீபாவளிக்கே இந்த பைக் அறிமுகமாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பைக்கின் தயாரிப்பில் கால தாமதம் ஏற்பட்டது.

இந்த பைக்கை இவ்வளவு பேர் புக் பண்ணீட்டாங்களா? இனி ரோட்ல திரும்புன பக்கமெல்லாம் இந்த பைக் தான் ஓடப்போகுது!

இந்நிலையில் ஒரு வழியாக இந்த டிசம்பர் மாதம் இந்த உற்பத்தி துவங்கவுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ மதுமிதா அகர்வால் ஊடகத்தினருக்கு அளித்த பேட்டியில் " எங்கள் நிறுவனம் இந்தியா முழுவதும் பைக்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக புக்கிங் துவங்கிய நிலையில் தற்போது வரை 17 ஆயிரம் புக்கிங்கள் எங்கள் எலெக்ட்ரிக் பைக்கிற்கு குவிந்துள்ளது. முதற்கட்டமாகப் பெங்களூரு, சென்னை, ஐதராபாத், புனே, மும்பை, டில்லி, சூரத், ஆமதாபாத், ஜெய்பூர் ஆகிய பகுதிகளில் மட்டும் விற்பனையைத் துவக்க முடிவு செய்துள்ளோம். அடுத்து படிப்படியாக ஒவ்வொரு கட்டமாக இந்தியா முழுவதும் எங்கள் பைக்கின் விற்பனை நடைபெறும்." எனக் கூறினார்.

ஓபன் (Oben) நிறுவனம் இந்தியா முழுவதும் டீலர் ஷிப் முறையில் தனது வாகனங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. ஆஃப் லைன் விற்பனை தான் மக்களுக்கு நம்பிக்கையைத் தரும் என இந்நிறுவனம் நம்புவதால் புதிய நேரடி விற்பனையைப் பெரிய அளவில் இந்நிறுவனம் விரும்பவில்லை. இந்நிறுவனம் தற்போது ரூ32.67 கோடி பணத்தை பண்டிங்காக பெற்றுள்ளது. இது ஏற்கனவே புக்கிங்காக குவிந்துள்ள 17ஆயிரம் பைக்குகளை தயார் செய்யப் பயன்படுத்தப்படும். அதே நேரம் எங்கள் டிஸ்டிப்யூஷன் நெட்வோர்க்கை விரிவுபடுத்தவும் இதைப் பயன்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஓபன் (Oben) நிறுவனம் தனது ஆலையைப் பெங்களூரு அருகே அமைத்துள்ளது.இங்கு ஆண்டிற்கு 3 லட்சம் பைக்குகளை தயார் செய்யும் கொள்ளளவு கொண்டதாக இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் இங்கு வெறும் 50 ஆயிரம் பைக்குகளை மட்டுமே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். அதன் பின்னர் 50 மில்லியன் டாலர் பணம் பண்டிங் கிடைத்தவுடன் இதை 1 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஓபன் (Oben) ரோர் எலெக்ட்ரிக் பைக் மார்கெட்டில் உள்ள 150 சிசி பைக்குகளுக்கு போட்டியாகக் களம் இறக்குகிறது. இந்த பைக் பஜாஜ் பல்சர்பி150, ஹோண்டா எக்ஸ்-பிளேடு, யமஹா எஃப் இசட் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக இது களம் இறங்குகிறது. இந்த ஓபன் (Oben) ரோர் எலெக்ட்ரிக் பைக்கில் 4.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது முழு சார்ஜில் 200 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த பைக்கில் பிஎம்எஸ் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக் 0-40 கி.மீ வேகத்தை வெறும் 3 நொடியில் பிக்கப் செய்துவிடும். இது அதிகபட்சமாக 100 கி.மீ வேகம் வரை மட்டும் செல்லலும், இந்த பைக்கில் எக்கோ, சிட்டி மற்றும் ஹாவக் என்ற 3 விதமான டிரைவிங் மோட்கள் இருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் முக்கியமான விஷயமே இந்த பைக் சார்ஜ் ஏறுவதற்கு வெறும் 2 மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொள்கிறது. இதற்காக அதிக பவர் கொண்ட கேபிள்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 அம்ப் சாக்கெட்கள் மூலம் சார்ஜ் ஏற்றப்படுகிறது.

இந்த பைக்கின் விலையாக ரூ99,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது போக மாநில மானியத்தை பொறுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் விலை வேறுபடும். இந்த பைக்கை தற்போது 17 ஆயிரம் பேர் புக் செய்துள்ள நிலையில் விரைவில் இந்த பைக் வந்ததும் இதே நிறுவனம் அடுத்தடுத்து சில பைக்குகளை களத்தில் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles

English summary
Oben rorr got 17k Booking Delivery starts in 2023 Q1
Story first published: Thursday, December 1, 2022, 11:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X