97,000 ரூபாவுக்கே 150கிமீ பயணிக்கும் இ-ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்தது ஒடிசி... ஓலாவுக்கு ஆப்பு ரெடி!

ஒடிசி வி2 மற்றும் வி2 பிளஸ் எனும் இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

97000 ரூபாவுக்கே 150 கிமீ தரும் இ-ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்தது ஒடிசி... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆப்பு தயார்!

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் ஒடிசி (Odysse). இந்நிறுவனமே அதன் இரு புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. வி2 மற்றும் வி2-பிளஸ் என்ற இரு மின்சார ஸ்கூட்டர்களையே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

97000 ரூபாவுக்கே 150 கிமீ தரும் இ-ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்தது ஒடிசி... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆப்பு தயார்!

வி2 தேர்விற்கு ரூ. 75 ஆயிரமும், வி2 பிளஸ் தேர்விற்கு ரூ. 97,500 விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இவ்விரு புதுமுகங்களின் அறிமுகத்தால் ஒடிசி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது.

97000 ரூபாவுக்கே 150 கிமீ தரும் இ-ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்தது ஒடிசி... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆப்பு தயார்!

நிறுவனத்தின்கீழ் தற்போது 6 எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றுடன் இன்னும் இரு மாடல்களும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க, நிறுவனம் அதன் விற்பனையகத்தின் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்ய இருக்கின்றது.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

97000 ரூபாவுக்கே 150 கிமீ தரும் இ-ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்தது ஒடிசி... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆப்பு தயார்!

அந்தவகையில், விரைவில் நூற்றுக்கும் அதிகமான புதிய விற்பனையகங்களை வரும் மாதங்களில் நிறுவனம் புதிதாக நிறுவ இருக்கின்றது. இத்துடன், இரு புதுமுகங்களின் அறிமுகத்திற்கு பின்னர் நிறுவனம் அதன் உற்பத்தி ஆலைகளையும் விரிவாக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது, புதிய உற்பத்தி ஆலைகளை நிறுவ இருப்பதாக தெரிவித்துள்ளது.

97000 ரூபாவுக்கே 150 கிமீ தரும் இ-ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்தது ஒடிசி... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆப்பு தயார்!

தற்போது நிறுவனம் அஹமதாபாத், மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் ஆலையை அமைத்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. ஒடிசி வி2 மற்றும் வி2 பிளஸ் ஆகிய இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களிலும் ஒரே மாதிரியான வாட்டர் ரெசிஸ்டன்ட் ஐபி67 தர பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

97000 ரூபாவுக்கே 150 கிமீ தரும் இ-ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்தது ஒடிசி... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆப்பு தயார்!

இந்த பேட்டரி பேக்கை ஒரு முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிப்பதற்கான மின்சாரத்தை வழங்கும். இதுமட்டுமின்றி, பன்முக நிற தேர்வு, திருட்டை தவிர்க்க உதவும் தொழில்நுட்பம், பேட்டரி கூலிங் வசதி, பெரிய பூட் ஸ்பேஸ், 12 அங்குல டயர்கள், எல்இடி லைட்டுகள் மற்றும் இன்னும் பல சிறப்பு வசதிகளுடன் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

97000 ரூபாவுக்கே 150 கிமீ தரும் இ-ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்தது ஒடிசி... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆப்பு தயார்!

இதுமாதிரியான சூப்பரான அம்சங்களுடனேயே புதிய ஒடிசி வி2 மற்றும் விடி பிளஸ் இ-ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இரண்டும் ஏற்கனவே விற்பனையில் இருந்த இ2கோ (E2go), ஹாவ்க் பிளஸ் (Hawk+), ரேசர் (Racer) மற்றும் இவோகிஸ் (Evoqis) மின்சார இருசக்கர வாகனங்களுடன் இணைந்திருக்கின்றன.

97000 ரூபாவுக்கே 150 கிமீ தரும் இ-ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்தது ஒடிசி... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆப்பு தயார்!

புதுமுக மின்சார ஸ்கூட்டர்களின் வருகை குறித்து ஒடிசி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நெமின் வோரா, கூறியதாவது, "புதிய வி2 மற்றும் வி2 பிளஸ் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம். இந்தியா பசுமை இயக்கத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. இந்த நகர்விற்கு மக்கள் ஒடிசியுடன் இணைந்து ஆதரவை வழங்க நாங்கள் விரும்புகின்றோம்.

97000 ரூபாவுக்கே 150 கிமீ தரும் இ-ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்தது ஒடிசி... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆப்பு தயார்!

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் எங்கள் தயாரிப்பு இலாகாவை வலுப்படுத்துவதற்கான ஒரு படியாகும். மின்சார ஸ்கூட்டர்களுக்கு நாட்டில் தேவை அதிகரித்துக் காணப்படுகின்றது. ஒடிசி வி2 பிளஸ் 150 கிமீ ரேஞ்ஜ் வாயிலாக மக்களைக் கவரும் என நாங்கள் நம்புகின்றோம்" என்றார்.

97000 ரூபாவுக்கே 150 கிமீ தரும் இ-ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்தது ஒடிசி... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆப்பு தயார்!

நிறுவனத்தின் இரு தயாரிப்புகளும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆப்பு வைக்கும் விற்பனைக்கு வந்திருக்கின்றன. ஓலா எலெக்ட்ரிக் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என இரு மாடல் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதில் எஸ்1 ரூ. 99,999 என்ற விலையிலும், எஸ்1 ப்ரோ ரூ. 1.29 லட்சம் என்கிற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆரம்ப நிலை மாடலாக காட்சியளிக்கும் எஸ்1இன் ரேஞ்ஜ் திறன் 121 கிமீ ஆகும். எஸ்1 ப்ரோ முழு சார்ஜில் 135 கிமீ தொடங்கி 181 கிமீ வரையில் ரேஞ்ஜை வழங்கும். ஆனால், இதைக் காட்டிலும் குறைவான விலையிலும் அதிக ரேஞ்ஜை தரும் வாகனமாகவே ஒடிசியின் தயாரிப்புகள் காட்சியளிக்கின்றன.

Most Read Articles
English summary
Odysse launched v2 and v2 plus e scooters in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X