ஓலா ஸ்கூட்டரை வாங்க சொல்லுங்க உங்களுக்கு ரூ4500 கிடைக்கும்! எப்படின்னு தெரியுமா?

ஓலா நிறுவனம் தனது விற்பனையை அதிகப்படுத்த மக்களுக்குப் பரிந்துரை செய்யும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் ஒருவர் ரூ4500 வரை சம்பாதிக்க முடியும். இது குறித்த விரிவான விபரங்களை இங்கே முழுமையாகக் காணலாம் வாருங்கள்

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஓலா, இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக மாதம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளனர்.தொடர்ந்து பலர் ஓலா நிறுவனத்தின் எலெக்டரிக் ஸ்கூட்டரை வாங்க ஆர்வமாக இருக்கின்றனர். இந்த ஸ்கூட்டரின் லுக் உள்ளிட்ட விஷயங்கள் மக்களுக்குப் பிடித்துப்போக இந்த ஸ்கூட்டரின் அறிமுகத்திற்கு முன்பே இதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஓலா ஸ்கூட்டரை வாங்க சொல்லுங்க உங்களுக்கு ரூ4500 கிடைக்கும்! எப்படின்னு தெரியுமா?

தற்போது ஓலா நிறுவனம் மார்கெட்டில் ஓலா எஸ்1 ப்ரோ மற்றும் எஸ்1 ஆகிய ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. எஸ்1 ஏர் ஸ்கூட்டருக்கான புக்கிங்கை மட்டும் செய்து வருகிறது விரைவில் அந்த ஸ்கூட்டரும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்1 ஏர் ஸ்கூட்டர் விலை குறைந்த ஸ்கூட்டர் என்பதால் இந்த ஸ்கூட்டர் விற்பனை துவங்கியதும், ஓலா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் தனது விற்பனையை மேலும் அதிகரிக்க ஓலா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கான பரிந்துரை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவேஷ் அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்படி ஓலா ஸ்கூட்டரை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் தனது நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்கு ஓலா ஸ்கூட்டரை பரிந்துரை செய்யலாம் எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்காக ஓலா நிறுவனத்தின் இணையதளத்தில் பிரத்தியேக பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் பரிந்துரையைச் செய்யலாம்.

அதன்படி ஒருவர் அதிகபட்சமாகத் தனது நண்பர்கள் உறவினர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் பரிந்துரையைச் செய்யலாம் ஆனால் அதிகபட்சமாக 3 பேரை மட்டுமே பரிந்துரை பட்டியலில் வைக்க முடியும். அவர்கள் ஓலா எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கினால் அந்த பரிந்துரைக்குச் சன்மானமாக ரூ1500 வழங்கப்படும். இப்படியாகப் பரிந்துரையின் மூலம் மட்டுமே ஒருவர் அதிகபட்சம் ரூ4500 பணத்தைப் பெற முடியும்.

இந்த பரிந்துரையைச் செய்ய https://olaelectric.com/referrals என்ற தளத்தில் பதிவு செய்யலாம். அங்கு உங்கள் செல்போன் எண்ணைப் பதிவிட்டால் ஓடிபி வரும். அதன் மூலம் உங்கள் நம்பரை வெரிஃபை செய்துவிடுங்கள். அதன்பின் நீங்கள் பரிந்துரை செய்ய நினைக்கும் மூன்று நபர்களின் விபரங்களை அதில் பதிவிட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் பரிந்துரை செய்தவர் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் அதன் மூலம் ஒரு நபருக்கு ரூ1500 விதம் மொத்தம் ரூ4500 பணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா நிறுவனம் தற்போது மார்கெட்டில் ஓலா எஸ்1 ப்ரோ, எஸ்1 மற்றும் எஸ் 1 ஏர் ஆகிய ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இதில் கடந்த 2021ம் ஆண்டு எஸ்1 ப்ரோ என்ற முதல் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. அந்த ஸ்கூட்டரை அறிமுகமான 1 ஆண்டிற்குப் பின்னர் எஸ்1 என்ற அடுத்த ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த தீபாவளியின் போது எஸ்1 ஏர் என்ற குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது.

இதில் எஸ்1 ப்ரோ மற்றும் எஸ்1 ஆகிய ஸ்கூட்டர்கள் மட்டும் விற்பனையாகி வருகிறது. எஸ்1 ஏர் ஸ்கூட்டருக்கான புக்கிங் மட்டுமே நடந்து வருகிறது. இந்த ஸ்கூட்டருக்கான விற்பனை ஜனவரி மாதம் முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் ரூ1.39 லட்சம் என்ற விலையிலும், ஓலா எஸ்1 ஸ்கூட்டர் ரூ99.999 என்ற விலையிலும், ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டர் ரூ84,999 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.ஓலா ஸ்கூட்டரை புக் பண்ண நீங்க ரெடியா?

Most Read Articles

மேலும்... #ஓலா #ola
English summary
Ola announced a referral program where anyone can get rupees 4500 cash back
Story first published: Wednesday, December 7, 2022, 10:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X