ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ள 1 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிச்சிட்டாங்க... ஓலா செய்த புதிய சாதனை...

ஓலா நிறுவனம் சமீபத்தில் தனது 1 லட்சமாவது ஸ்கூட்டரை தயாரித்து சாதனை படைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.

ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ள 1 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிச்சிட்டாங்க . . . ஓலாவின் செய்த புதிய சாதனை . . .

ஓலா நிறுவனம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகன நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் தனது பிஸ்னஸை துவங்கிய சரியாக ஒரு ஆண்டு கூட ஆகவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் அதற்குள் நல்ல பெயரை எடுத்துவிட்டது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய ஆலையை நிறுவியுள்ளது.

ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ள 1 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிச்சிட்டாங்க . . . ஓலாவின் செய்த புதிய சாதனை . . .

தற்போது ஓலா நிறுவனம் எஸ்1 மற்றும் எஸ் 1 ப்ரோ என்ற இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் எஸ் 1 ஏர் என்ற குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் நடந்து வரும் நிலையில் 2023ம் ஆண்டு இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ள 1 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிச்சிட்டாங்க . . . ஓலாவின் செய்த புதிய சாதனை . . .

இந்நிலையில் ஓலா நிறுவனம் துவங்கியது முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இதுவரையில்லாத அளவிற்கு ஒரே மாதத்தில் 20 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்தது. இதுவரை எந்த நிறுவனமும் செய்யாத ஒரு விஷயத்தை ஓலா நிறுவனம் செய்ததாகச் செய்திகள் எல்லாம் வலம் வந்தன.

ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ள 1 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிச்சிட்டாங்க . . . ஓலாவின் செய்த புதிய சாதனை . . .

இந்த செய்தி வெளியாகி ஓரிரு நாட்களிலேயே ஓலா நிறுவனம் எடுத்த புதிய சாதனை ஒன்றைச் செய்துள்ளது. ஓலா நிறுவனம் தனது ஆலையில் 1 லட்சமாவது ஸ்கூட்டரை வெற்றிகரமாகத் தயாரித்தது. இதை ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவேஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இது ஓலா நிறுவனத்தின் மிக முக்கியமான மைல் கல்லாகும். இந்த ஒரு லட்சம் ஸ்கூட்டரை இந்நிறுவனம் வெறும் 10 மாதத்தில் தயாரித்துள்ளது.

ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ள 1 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிச்சிட்டாங்க . . . ஓலாவின் செய்த புதிய சாதனை . . .

ஓலா நிறுவனம் தற்போது மார்கெட்டில் ஓலா எஸ்1 ப்ரோ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ1,39,999 என்ற விலையிலும், எஸ்1 என்ற ஸ்கூட்டரை ரூ99,999 என்ற விலையிலும், எஸ்1 ஏர் என்ற ஸ்கூட்டரை ரூ84,999 என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் எஸ் 1 ப்ரோ, மற்றும் எஸ்1 ஆகிய இரண்டு ஸ்கூட்டர்கள் மட்டும் தற்போது விற்பனையில் உள்ளன.

ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ள 1 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிச்சிட்டாங்க . . . ஓலாவின் செய்த புதிய சாதனை . . .

எஸ்1 ஏர் ஸ்கூட்டருக்கான டெலிவரி 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் துவங்கும், தற்போது இதற்கான புக்கிங்கள் நடந்து வருகிறது. ரூ999 கொடுத்து இந்த ஸ்கூட்டரை புக் செய்து கொள்ளலாம். இந்த ஸ்கூட்டருக்கான விற்பனை வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ள 1 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிச்சிட்டாங்க . . . ஓலாவின் செய்த புதிய சாதனை . . .

இந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை ஓலா நிறுவனம் 1 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரித்திருந்தாலும் 70 ஆயிரம் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. 2022ம் ஆண்டு முடிவதற்கும் 1 லட்சம் ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்து முடிக்க வேண்டும் என இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ள 1 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிச்சிட்டாங்க . . . ஓலாவின் செய்த புதிய சாதனை . . .

1 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரித்ததன் மூலம் இந்தியாவின் இந்தாண்டு முதன் முதலாகத் தயாரிப்பில் 6 இலக்க எண்களைத் தொட்ட முதல் இவி நிறுவனமாக இந்த ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நிறுவனம் தான் இருக்கிறது. ஓலா நிறுவனத்தின் வளர்ச்சியின் ஒரு அங்கமாகவே இந்த சாதனையைப் பார்க்க வேண்டும்.

ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ள 1 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிச்சிட்டாங்க . . . ஓலாவின் செய்த புதிய சாதனை . . .

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டும் தான் விற்பனை செய்து வந்தாலும் அடுத்தாக எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் உருவாக்கும் எலெக்ட்ரிக் காருக்கான டீசர்கள் வெளியாகியுள்ளன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஓலா எலெக்ட்ரிக் காரும் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஓலா #ola
English summary
Ola crossed 1 lakh mile stone in electric scooter production
Story first published: Friday, November 4, 2022, 15:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X