அப்டேட்னா இப்படி இருக்கனும்.. வாயை பிளக்க வைக்கும் வசதிகளை சாஃப்ட்வேர் அப்டேட் வாயிலாக வழங்கிய ஓலா!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் மூவ் ஓஎஸ் 3 அப்டேட் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்காக வெளியேற்றத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா உருவெடுத்துள்ளது. இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் பல முயற்சிகளை அது மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், மூவ்-ஓஎஸ் 3 அப்டேட் செய்யப்பட்ட எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஃபேக்டரியில் இருந்து உற்பத்தி செய்து வெளியேற்றத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போது விற்பனையில் இருக்கும் எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலைக் காட்டிலும் இந்த அப்டேட்டைக் கொண்டிருக்கும் எஸ்1 எலெக்ட்ரிக் அதிக திறன்மிக்கதாக இருக்கும்.

ஓலா

இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் அதிக ரேஞ்ஜ், சிறந்த பெர்ஃபார்மென்ஸ் மற்றும் அதிக ஃபீச்சர்களைக் கொண்டதாக மூவ்-ஓஸ் 3 அப்டேட்டைக் கொண்டிருக்கும் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கும். இந்த அப்டேட்டட் வெர்ஷனை ஓலா நிறுவனம் தீபாவளிக்கு முன்னரே விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வரை அது விற்பனைக்குக் கொண்டு வரப்படவில்லை. இப்போதே உற்பத்தி ஆலையில் மூவ்-ஓஸ் 3 சாப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்ட எஸ்1-இன் உற்பத்தி பணிகள் தொடங்கி உள்ளன.

இதன் டெலிவரி பணிகளும் இந்த வாரம் முதலே தொடங்கப்பட்டு இருப்பதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஒரு வருட காலத்திற்குள் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மேற்கொள்ளும் மூன்றாவது சாப்ட்வேர் அப்டேட் இதுவாகும். இதன் வாயிலாக ஓலா தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கவும், தங்களது தயாரிப்புகளை மேம்படுத்துவதிலும் துரிதமான வேகத்தில் செயல்பட்டு வருவது தெளிவாக தெரிகின்றது. இதுபோன்ற நடவடிக்கைகளின் காரணத்தினாலேயே நிறுவனம் இப்போது இந்திய மின்சார வாகன உலகின் முதன்மையான நிறுவனமாக மாறியிருக்கின்றது.

இந்த அப்டேட்டை ஏற்கனவே நிறுவனத்தின் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வருபவர்களாலும் பெற்றுக் கொள்ள முடியும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக 50 க்கும் மேற்பட்ட புதிய சிறப்பு வசதிகளை ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக, ஹைப்பர் சார்ஜிங் வசதியை வாடிக்கையாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும். இந்த வசதி வாயிலாக 50 கிமீ பயணத்தை வெறும் 15 நிமிட சார்ஜிலேயே பெற்றுக் கொள்ள முடியும்.

ஆஃபிஸ் சென்று வர மட்டுமே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி வர பிரசாதமாக இருக்கும். முன்னாடியே சார்ஜ் போட மறந்துவிடுபவர்கள் குளிக்க செல்லும் முன் சார்ஜ் போட்டால் போதும். கிளம்பி தயாராகுவதற்குள் 50 கிமீ பயணத்திற்கான சார்ஜை இது ஏற்றிக் கொள்ளும். இதுதவிர, ஆக்டீவ் ரீஜென் பிரேக்கிங் சிஸ்டமும் இந்த அப்டேட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. இது இழக்கப்படும் மின்சாரத்தை லேசாக மீட்டெடுக்க உதவும்.

இவற்றுடன், வேகேஷன் மோட் சிறப்பு மோட் ஒன்று இந்த அப்டேட் வாயிலாக வழங்கப்பட்டிருக்கின்றது. இது 200 நாட்கள் வரை சார்ஜே இல்லாமல் நிறுத்தி வைக்க உதவும். வெளி ஊர்களுக்கு நீண்ட நாட்கள் சுற்றுலா செல்ல நேர்ந்தால் இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்து செல்லலாம். இதன் வாயிலாக பேட்டரி பழுதாகுதலை தவிர்க்க முடியும். மேலும், ஹில் ஹோல்டு சிஸ்டமும் இந்த அப்டேட் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.

இது சாய்வான பாதையில் பயணிக்கும்போது வாகனம் பின்னோக்கி செல்லாமல் இருக்க உதவியாக இருக்கும். இவற்றும், மல்டிபிள் புரஃபைல் கிரியேட்டிங் வசதி, ப்ராக்ஸிமிட்டி லாக் மற்றும் அன்லாக் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளது. உரிமையாளர் அருகில் வாந்தாலே தானாகவே அன்லாக் செய்யும் வசதி இதுவாகும். இதற்கு உரிமையாளரின் செல்போன் அவசியம். இது இருசக்கர வாகனத்துடன் இணைத்திருக்க வேண்டும். இத்துடன், ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒய்-ஃபை இணைப்பு வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதுபோன்ற எக்கசக்கமான இணைப்பு வசதிகள் மூவ் ஓஎஸ் 3 அப்டேட் வாயிலாக ஓலா அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் வழங்கியிருக்கின்றது. மேலே பார்த்த அம்சங்களோடு அப்டேட்டின் லிஸ்ட் முடியவில்லைங்க. டிஜிட்டல் கன்சோல், மியூசிக் மோட், ப்ளூடூத் இணைப்பு, செல்போனுக்கு வரும் அழைப்பை காண்பிக்கும் வசதி, ஆதார் போன்ற முக்கிய ஆவணங்களை சேமித்து வைக்கும் வசதி போன்றவையும் இந்த அப்டேட் வாயிலாக கொடுக்கப்பட்டு உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Ola electric moveos 3
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X