ஒன்னு ரெண்டல்ல மொத்தம் 3 எலெக்ட்ரிக் பைக்கை தயாரிக்க ஓலா திட்டம்! ஸ்கூட்டர விட இது செம மாஸா இருக்கப்போகுது

ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து எலெக்ட்ரிக் பைக்கையும் தயாரிக்கும் திட்டத்தை வகுத்துள்ளது.

ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் நம்பர் 1 நிறுவனமாக மாறியுள்ளது. இந்நிறுவனம் எஸ்1 ப்ரோ, எஸ்1, எஸ்1 ஏர் ஆகிய 3 ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எலெக்ட்ரிக் காரையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் எலெக்ட்ரிக் பைக்கையும் உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளது.

ஒன்னு ரெண்டல்ல மொத்தம் 3 எலெக்ட்ரிக் பைக்கை தயாரிக்க ஓலா திட்டம்! ஸ்கூட்டர விட இது செம மாஸா இருக்கப்போகுது

தமிழ்நாட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்துவரும் நிறுவனம் ஓலா. இந்நிறுவனத்தின் சிஇஓ பவேஷ் அகர்வால் சமீபத்தில் தனது ட்விட்டரில் ஓலா பைக்கை தயாரித்தால் ஸ்போர்ட்ஸ் பைக், க்ரூஸர் பைக், அட்வெஞ்சர் பைக் அல்லது கஃபே ரேசர் ஆகிய செக்மெண்டில் எதில் பைக்கை தயாரிக்க வேண்டும் என ட்விட்டரில் மக்களிடம் கருத்து கேட்டிருந்தார். அப்பொழுது முதலே ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் பைக்கை தயாரிக்கும் எண்ணத்தில் இருப்பது தெரியந்தது.

இந்நிலையில் தற்போது ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் பைக்கை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.இந்நிறுவனம் மாஸ்மார்கெட் பைக், மிட்-செக்மெண்ட் பைக், மற்றும் பிரிமியம் பைக் ஆகிய 3 செக்மெண்டிலும் தனித்தனியாக பைக்ககளை தயாரிப்பது முடிவாகியுள்ளது. ஓலா நிறுவனம் தனது பைக்கை அடுத்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்திவிடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்நிறுவனம் கடந்த தீபாவளியை முன்னிட்டு ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. அப்பொழுது அந்நிறுவனத்தின் சிஇஓ அகர்வால் "அடுத்த 12 மாதத்திற்குள் ஓலா நிறுவனம் டூவீலர் செக்மெண்டில் ஸ்கூட்டர் மட்டுமல்லாமல் பைக் மற்றம் ஸ்போர்ட்ஸ் பைக்கை உருவாக்கும், மக்கள் கம்பஷன் இன்ஜினிலிருந்துமெல்ல எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறிவிடுவர்"என கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் தற்போது எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஏற்கனவே எலெக்ட்ரிக் காரை உருவாக்கி வரும் நிலையில் எலெக்ட்ரிக் கார் வரும் 2025ம் ஆண்டில் தான் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் தற்போது மக்களின் எதிர்பார்ப்பு ஓலா எலெக்டரிக் காரை காட்டிலும் ஓலா எலெக்ட்ரிக் பைக்கில் அதிகமாக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஓலா நிறுவனம் கடந்த ஆக்டோபர் மாதம் மட்டும் மொத்தம் 20 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து புதிய சாதனை ஒன்றை படைத்தது. இது மட்டுமல்ல ஒலா நிறுவனம் சமீபத்தில் தனது 1 லட்சமாவது ஸ்கூட்டரையும் தயார் செய்து சாதனையை படைத்தது. இந்நிலையில் ஒலா நிறுவனம் அடுத்தாண்டு அதாவது 2023ம் ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Ola plans to launch electric motorcycle next year
Story first published: Saturday, November 12, 2022, 13:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X