போட்றா வெடிய! உலக நாடுகளை ஆளப்போகும் இந்திய நிறுவனம்! எலெக்ட்ரிக் டூவீலர் மார்க்கெட்டை பிடிக்க அதிரடி வியூகம்!

உலக நாடுகளின் எலெக்ட்ரிக் டூவீலர் சந்தையை பிடிக்க ஓலா நிறுவனம் அதிரடி வியூகங்களை வகுத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் தயாரிப்புகள் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இயங்கி வருகிறது.

போட்றா வெடிய! உலக நாடுகளை ஆளப்போகும் இந்திய நிறுவனம்! எலெக்ட்ரிக் டூவீலர் மார்க்கெட்டை பிடிக்க அதிரடி வியூகம்!

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அவை எஸ்1 (S1), எஸ்1 ப்ரோ (S1 Pro) மற்றும் எஸ்1 ஏர் (S1 Air) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும். இதன் மூலம் இந்திய சந்தையின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களில் ஒன்றாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் சமீப காலமாக ஓலா நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் கூட ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனையில் 60 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், அக்டோபர் மாதம் இந்த 60 சதவீத வளர்ச்சியை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பதிவு செய்துள்ளது.

இந்திய சந்தையில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், உலகின் மற்ற நாடுகளிலும் தனது வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இத்தாலியின் மிலன் நகரில் தற்போது நடைபெற்று வரும் எக்மா 2022 (EICMA 2022) கண்காட்சியில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 வரிசை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காட்சிக்கு வைத்துள்ளது.

எக்மா என்பது இத்தாலியின் மிலன் நகரில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் டூவீலர் கண்காட்சி ஆகும். புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கு டூவீலர் நிறுவனங்கள் இந்த கண்காட்சியை பயன்படுத்தி கொள்கின்றன. ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 (Royal Enfield Super Meteor 650) பைக் கூட தற்போது நடைபெற்று வரும் எக்மா 2022 கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை மிஸ் பண்ணீடாதீங்க: யாரும் எதிர்பாக்காத ட்விஸ்ட்! பிரபலமான டொயோட்டா காரின் விற்பனை திடீர் நிறுத்தம்! ஷாக் ஆன இந்திய மக்கள்!இதை மிஸ் பண்ணீடாதீங்க: யாரும் எதிர்பாக்காத ட்விஸ்ட்! பிரபலமான டொயோட்டா காரின் விற்பனை திடீர் நிறுத்தம்! ஷாக் ஆன இந்திய மக்கள்!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை பொறுத்தவரை, வரும் 2023ம் ஆண்டின் முதல் காலாண்டில், ஐரோப்பாவின் முக்கியமான சந்தைகளில் நுழைவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள சூழலில்தான், ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்று வரும் எக்மா 2022 கண்காட்சியில் தற்போது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காட்சிக்கு வைத்துள்ளது.

இதற்கு முன்னதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 வரிசை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நேபாளத்திலும் காட்சிக்கு வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய சந்தையில் வெகு விரைவில் நுழையவுள்ளது குறித்து ஓலா நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவிஷ் அகர்வால் (Bhavish Aggarwal) பேசியுள்ளார்.

''எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உலகின் மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்று ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விரும்புகிறது. ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்காக எஸ்1 வரிசை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எக்மா கண்காட்சிக்கு கொண்டு வந்ததில் பெருமைப்படுகிறோம். எங்களது உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளின் மூலம் இந்தியாவை போன்றே ஐரோப்பாவிலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை மிக வேகமாக வளர செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது'' என பாவிஷ் அகர்வால் கூறியுள்ளார்.

Most Read Articles

English summary
Ola s1 electric scooters showcased at eicma 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X