நம்ப முடியல... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உண்மையா எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா? இப்பவே வாங்கணும் போல இருக்கே!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உண்மையில் எவ்வளவு மைலேஜ் வழங்குகிறது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம்ப முடியல... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உண்மையா எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா? இப்பவே வாங்கணும் போல இருக்கே!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 (Ola S1) மற்றும் எஸ்1 ப்ரோ (Ola S1 Pro)ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

நம்ப முடியல... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உண்மையா எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா? இப்பவே வாங்கணும் போல இருக்கே!

ஆனால் டெலிவரியில் தாமதம், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கூறிய ரேஞ்ச் (ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் பயணிக்கும் தொலைவு) கிடைக்கவில்லை என ஏகப்பட்ட புகார்களை தற்போது வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களையும் வாடிக்கையாளர்கள் வழங்க தொடங்கியுள்ளனர்.

நம்ப முடியல... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உண்மையா எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா? இப்பவே வாங்கணும் போல இருக்கே!

ஆம், ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 187 கிலோ மீட்டர் ரேஞ்ஜை வழங்கியுள்ளதாக, அதன் உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு முறை செய்த சார்ஜ் மூலமாக தனது ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 165 கிலோ மீட்டர் தூரம் பயணித்ததாக அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் பேட்டரியில் 14 சதவீதம் சார்ஜ் இருந்துள்ளது.

நம்ப முடியல... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உண்மையா எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா? இப்பவே வாங்கணும் போல இருக்கே!

இது 22 கிலோ மீட்டருக்கு இணையானது. அதாவது மேற்கொண்டு பயணம் செய்திருந்தால், இந்த சார்ஜ் மூலம் 22 கிலோ மீட்டர் சென்றிருக்க முடியும். இதன்படி பார்த்தால் சம்பந்தப்பட்ட ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒட்டுமொத்தமாக 187 கிலோ மீட்டர் (165 + 22) ரேஞ்ஜை வழங்கியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உரிமையாளர் நமக்கு மேலும் பல்வேறு தகவல்களை கொடுத்துள்ளார்.

நம்ப முடியல... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உண்மையா எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா? இப்பவே வாங்கணும் போல இருக்கே!

இதன்படி அவரது எடை 82 கிலோ ஆகும். அவரது எடையுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எடை 100 கிலோவாக இருந்துள்ளது. பெங்களூர் நகரில் அவர் இந்த ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டியுள்ளார். அங்கு வெப்ப நிலை 25 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருந்துள்ளது. பல்வேறு சூழல்களில் அவர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டியுள்ளார்.

நம்ப முடியல... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உண்மையா எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா? இப்பவே வாங்கணும் போல இருக்கே!

அதாவது போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் என பல்வேறு சூழல்களில் அவரால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டப்பட்டுள்ளது. ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் நமக்கு பல்வேறு தகவல்களை வழங்கும். சராசரியாக எவ்வளவு வேகத்தில் ஓட்டியுள்ளோம்? அதிகபட்ச வேகம் எவ்வளவு? போன்ற தகவல்களை நாம் பெறலாம்.

நம்ப முடியல... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உண்மையா எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா? இப்பவே வாங்கணும் போல இருக்கே!

இதன்படி சம்பந்தப்பட்ட ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமெண்ட் காட்டிய தகவல்களின்படி பார்த்தால், சராசரி மணிக்கு 27 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டப்பட்டுள்ளது. அதே சமயம் சம்பந்தப்பட்ட நபர் அதிகபட்சமாக மணிக்கு 46 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டியுள்ளார்.

நம்ப முடியல... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உண்மையா எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா? இப்பவே வாங்கணும் போல இருக்கே!

இதற்கிடையே வாகனங்களின் அதிகாரப்பூர்வ மைலேஜ்/ரேஞ்ச் ஆகியவற்றை அராய் அமைப்பு தெரிவித்து வருவது நமக்கு தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால் அராய் அமைப்பு தெரிவிக்கும் மைலேஜ்/ரேஞ்ச் நடைமுறை பயன்பாட்டில் கிடைக்காது என்பதும் கூட நமக்கு தெரிந்ததுதான். அராய் அமைப்பின் மைலேஜ்/ரேஞ்ஜை விட குறைவான அளவில்தான் நடைமுறை பயன்பாட்டில் வாகனங்கள் வழங்கும்.

நம்ப முடியல... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உண்மையா எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா? இப்பவே வாங்கணும் போல இருக்கே!

குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களை எடுத்து கொண்டால், 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறையலாம். ஆனால் இந்த ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உரிமையாளருக்கு அராய் நிறுவனம் தெரிவித்ததை விட அதிக ரேஞ்ச் கிடைத்துள்ளது என்பது மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ அராய் ரேஞ்ச் 121 கிலோ மீட்டர் ஆகும்.

நம்ப முடியல... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உண்மையா எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா? இப்பவே வாங்கணும் போல இருக்கே!

அதே நேரத்தில் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ அராய் ரேஞ்ச் 181 கிலோ மீட்டர் மட்டும்தான். ஆனால் இந்த ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உரிமையாளருக்கு 187 கிலோ மீட்டர் ரேஞ்ச் கிடைத்துள்ளது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விஷயம் என்பதில் மாற்று கருத்து கிடையாது.

நம்ப முடியல... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உண்மையா எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா? இப்பவே வாங்கணும் போல இருக்கே!

சம்பந்தப்பட்ட ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உரிமையாளர் சமூக வலை தளத்தில் இந்த தகவல்களை பதிவிட்டுள்ளார். இதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வாலும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது பெட்ரோல் விற்பனை செய்யப்படும் விலையை கணக்கில் கொள்ளும்போது, எலெக்ட்ரிக் வாகனங்கள் சிறந்தவை என்பது இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Ola s1 pro electric scooter owner gets 187 km range check details here
Story first published: Wednesday, January 12, 2022, 13:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X